side Add

மக்களது தேவைகளை நிறைவேற்றும் – அரசே நீடித்து நிலைக்கும்!!

நாடு சுதந்­தி­ரம் அடைந்த பின்­னர் ஆட்சி அதி­கா­ரத்­துக்கு வந்த பெரும்­பா­லான அர­சு­கள் கைக்­கொண்ட பொரு­ளா­தா­ரக் கொள்­கை­கள், காலப்­போக்­கில் நாட்டு மக்­க­ளால் நிரா­க­ ரிக்­கப்­பட்­டமை வர­லாற்­றுப் பதி­வு­கள். அதற்­குக் கார­ணம், குறித்த அர­சு­க­ளது பொரு­ளா­தா­ரக் கொள்கை வகுப்­பா­ளர்­கள், உலக நடப்­பின் யதார்த்­தத்­தைச் சரி­வ­ரப் புரிந்து கொள்­ளத் தவ­றி­ய­மையே ஆகும்.

ஒரு நாட்­டி­னது பொரு­ளா­தா­ரக் கொள்கை
இன்­னு­மொரு நாட்­டுக்குப் பொருந்­து­வ­தில்லை

உண்­மை­யில் அவர்­கள் மேற்­கு­லக நாடு­க­ளது பொரு­ளா­தார நடை­மு­றை­யைப் பின்­பற்­றியே இலங்­கை­யின் பொரு­ளா­தா­ரக் கொள்­கை­களை வகுத்­த­னர். அவர்­க­ளில் பெரும்­பா­லோர் பன்­னாட்டு நாணய நிதி­யம் மற்­றும் உலக வங்கி என்­பவை குறிப்­பி­டும் விதத்­தில் எமது நாட்­டுப் பொரு­ளா­தா­ரக் கொள்­கையை வகுப்­ப­தற்கு ஆர்­வம் காட்­டி­னர்.

இன்­றைய கூட்டு அரசு இதற்­குப் பொருத்­த­மா­ன­தொரு உதா­ர­ண­மா­கும். உல­கில் ஒரு இடத்­தில் வெற்­றி­ய­ளிக்­கும் பொரு­ளா­தா­ரக் கொள்­கையை, வேறொரு இடத்­தில் அதே விதத்­தில் நடை­மு­றைப்­ப­டுத்த இய­லாது.

ஒரு நாட்­டு­டன் மற்­றொரு நாட்­டைச் சமன்ப­டுத்த இய­லாது என்­ப­து­டன், சகல நாடு­க­ளுக்­கும் வெவ்வேறான சிக்­கல்­கள், பிரச்­சி­னை­கள் இருக்­கும். அந்­தந்த நாடு­க­ளில் வாழும் மக்­க­ளது கலா­சா­ரம், வாழ்க்கை நடை­முறை, செயற்­பா­டு­கள் மற்­றும் நம்­பிக்­கை­கள் ஒன்­றுக்­கொன்று வேறு­ப­டும்.

உலக வர­லாற்­றில் குறிப்­பிட்­ட­தொரு கால­கட்­டத்­தில், ஏனைய நாடு­கள் மீது ஆதிக்­கம் செலுத்தி அந்­தந்த நாடு­க­ளது வளங்­க­ளைச் சுரண்டித் தம்மை வளப்­ப­டுத்­திக் கொண்ட ஐரோப்­பிய நாடு­க­ளு­டன் ஒப்­பி­டும்­போது, இன்று உல­கில் வளர்ச்­சி­ய­டைந்த நாடு­க­ளா­கக் கரு­தப்­ப­டத்­தக்க ஒவ்­வொரு நாடுமே, தத்­த­மது நாடு­க­ளது அபி­வி­ருத்தி தொடர்­பாக தமக்­குப் பொருத்­த­மான வெவ்வேறு நடை­மு­றை­களை கடைக்கொண்­ட­மையை அவ­தா­னிக்க முடிந்­துள்­ளது.

இலங்­கை­யின் பொரு­ளா­தா­ரம் நாட்­டின் பொது­மக்­கள் கைக­ளி­லேயே தங்­கி­யுள்­ளது. தொழிற்­சா­லை­யில், விவ­சாய நிலத்­தில், அலு­வ­ல­கத்­தில், பாட­சா­லை­யில், வைத்­தி­ய­சா­லை­யில் தொழில் புரி­யும் பொது­மக்­களைப் புறம்­தள்­ளி­விட்டு, நிகர தேசிய உற்­பத்தி, தனி­ந­பர் வரு­மா­னம் என்­பவை குறித்துப் பேசு­வ­தில் அர்த்­தம் கிடை­யாது. எமக்­குத் தேவை எமது நாட்­டுக்­குப் பொருத்­த­மான பொரு­ளா­தார முகா­மைத்­து­வ­ மே­யன்றி, பன்­னாட்டு நாணய நிதி­யம் எமக்­குக் கற்­றுத்­த­ரும் பொரு­ளா­தார முகா­ மைத்­து­வ­மல்ல.

பன்­னாட்டு நாணய நிதி­யத்­தின்
ஆலோ­ச­னை­கள் பின்­ன­டைவானவையே

பன்­னாட்டு நாணய நிதி­யம் வழக்­கம் போன்று எப்­போ­துமே எமக்கு வழங்­கும் ஆலோ­ச­னை­கள் தானென்ன? அர­சின் வரு­வாயை அதி­க­ரித்து அதே சம­யம் செல­வீ­னத்தை மட்­டுப்­ப­டுத்தி வரவு செல­வுத் திட்­டத்­தில் துண்டுவிழும் தொகையைக் குறைத்­தல், அதற்­காக நாட்டு மக்­க­ளுக்கு நிவா­ர­ணம் வழங்­கும் நடை­மு­றையை நிறுத்துதல், வரி­களை அதி­க­ரித்­தல், அரச நிறு­வ­னங்­களைத் தனி­யார் மய­மாக்­கல், நட்­டத்­தில் இயங்­கும் அரச நிறு­வ­னங்­களை மூடி­வி­டு­தல் அல்­லது விற்றுவிடு­தல் என்­ற­வா­றாக அந்த ஆலோ­ச­னை­கள் அமை­கின்­றன.

அத்­து­டன் இவற்­றுக்கு மேலாக பன்­னாட்டு நாணய நிதி­யத்­தி­லி­ருந்து வளர்ச்­சி­ய­டைந்து வரும் நாடு­கள் கடன்­பெ­றப் பழ­கிக் கொண்­டுள்­ளன. கடன் வழங்க பன்­னாட்டு நாணய நிதி­யம் விதிக்­கும் நிபந்­த­னை­களை நோக்­கும்போது எதற்­காக கடன் பெற்­றோம் என்­ப­தைக்­கூட மறக்க நேரி­டும் என்­ப­தோடு, பெற்­றுக்­கொள்­ளும் அத்­த­கைய கடன்­கள்­கூட பெரும்­பா­லும் எந்­த­வொரு நீண்­ட­கால வாய்ப்பான பயன்­களை வழங்­கா­து­போக நேர்­கி­றது.

இவற்­றின் கார­ண­மாக நாட்டு மக்­கள் மத்­தி­யில் வறுமை நிலை உயர்­வ­டை­தல், வேலை­வாய்ப்­பின்மை உயர்­வ­டை­தல், வர்த்­த­கத் துறை பின்­ன­டைவு, தனி­யார் துறை­க­ளின் ஏதேச் சாதி­கா­ரப் போக்கு வளர்ந்து பொது­மக்­க­ளுக்குப் பாதிப்பு ஏற்­ப­டுத்­தல், நாடு கடும் கடன் சுமைக்குத் தள்­ளப்­ப­டுத்­தல், செலுத்த வேண்­டிய கடனை வெளி­நா­டு­க­ளுக்­குச் செலுத்த இய­லாத நிலை உரு­வா­கு­தல் போன்ற எதிர்­ம­றை­யான விளை­வு­களை நாடு சந்­திக்க நேரி­டு­கி­றது.

1945ஆம் ஆண்­டில் உரு­வாக்­கப்­பட்ட பன்­னாட்டு நாணய நிதி­யத்­தின் ஆலோ­ச­னை­களை ஏற்­றுச் செயற்­பட்ட எந்­த­வொரு நாடும் இது­வரை பொரு­ளா­தார அபி­வி­ருத்தி கண்­ட­தில்லை. ஆயி­னும் இலங்­கை­யில் ஆட்சி அதி­கா­ரத்­தி­லி­ருந்த சில அர­சு­க­ளும் ஏன் இன்­றைய அர­சும்­கூட பன்­னாட்டு நாணய நிதி­யத்­தின் ஆலோ­ச­னை­க­ளுக்­க­மை­யவே தமது பொரு­ளா­தா­ரத் திட்­டங்­களை வகுத்து வந்­துள்­ளன. எனவே எதிர்­கா­லத்­தில் இலங்­கை­யின் பொரு­ளா­தா­ரத் திட்­டங்­களை வகுக்­க­வுள்ள நிபு­ணர்­கள் சுய­மா­கச் சிந்­தித்­துச் செயற்­ப­டத் தக்­க­வர்­க­ளாக இருத்­தல் அவ­சி­யம்.

அபி­வி­ருத்­திச் செயற்­பா­டு­கள்
பொது­மக்­க­ளின் எதிர்­பார்ப்பை
பூர்த்தி செய்­தல் வேண்­டும்

நாட்­டின் அபி­வி­ருத்­திச் செயற்­பா­டு­கள் பொது­மக்­க­ளது எதிர்­பார்ப்­பைப் பூர்த்தி செய்­யத்­தக்­க­வை­யாக அமை­யா­து­விட்­டால், ஜன­நா­யக நாடொன்றை நிர்­வ­கிக்­கும் அர­சொன்று நீண்ட காலத்­துக்கு பதவி வகிக்க இய­லாத நிலை ஏற்­ப­டும். ஏனெ­னில் தமது எதிர்­பார்ப்பை நிறை­வேற்ற இய­லாத அரசை அகற்­றி­விட்­டுப் புதிய அர­சைத் தேர்ந்­தெ­டுக்­கும் வாய்ப்பு ஜன­நா­யக நாடொன்­றின் பொது­மக்­க­ளுக்கு உள்­ளது.

எனவே இன்று இந்த நாட்­டுக்கு அவ­சி­ய­மா­னது நாட்டு மக்­களை ஒன்­றி­ணைத்து மேற்­கொள்­ளப்­ப­டும் அபி­வி­ருத்­தி­யா­கும். அது குறிப்­பிட்­ட­தொரு சிறு தரப்­பின் தேவையை நிறை­வேற்­று­வ­தாக அமை­யாது¶, நாட்­டின் சகல மக்­க­ளது எதிர்­பார்ப்­பை­யும் நிறை­வேற்­று­வ­தாக அமை­தல் வேண்­டும்.

2015ஆம் ஆண்­டில் இடம்­பெற்ற தேர்­தல்­க­ளின் போது, நாட்டு மக்­க­ளுக்கு அவர்­க­ளது தனிப்­பட்ட வாழ்க்­கைப் பிரச்­சினை பெரிய அள­வில் இருந்­த­தில்லை. நாட்­டின் பொதுப் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காண­வேண்டி நாட்டு மக்­கள் கூட்டு அரசை ஆத­ரித்­த­னர். ஆனால் இன்று மற்­றெல்­லாப் பிரச்­சி­னை­க­ளை­ யும்­விடத் தமது சொந்த வாழ்க்­கைப் பிரச்­சி­னை­க­ளான வாழ்க்­கைச் செலவு உயர்வு, அதி­க­ரிக்­கும் வரி­கள் என்­ப­வற்­றால் மக்­கள் துன்­ப­முற நேர்ந்­துள்­ளது.

உண்­மை­யில் ஏதோ­வொரு பொரு­ளா­தா­ரத் திட்­டம் மூலம் நாட்டு மக்­கள் மத்­தி­யில் நிரந்­த­ர­மான மகிழ்ச்சி, சமா­தா­னம் மற்­றும் வாழ்­வில் சௌபாக்­கி­யம் என்­ப­வற்றை ஒரு அர­சால் ஏற்­ப­டுத்த முடி­யும் போது­தான், அந்த அரசு நாட்டு மக்­க­ளது எதிர்­பார்ப்பை நிறை­வேற்­றும் வெற்­றி­க­ர­மான அர­சாக ஆக முடி­யும்.

அத்­த­கைய பொரு­ளா­தார நடை­மு­றை­யி­னூ­டாக பொரு­ளா­தாரத் தில் தன்­னி­றைவு, சமூக நீதி மற்­றும் சூழல் பாது­காப்பு என்ற மூன்று அம்­சங்­க­ளும் நிலை­ நி­றுத்­தப்­ப­டு­மா­னால், அது பெறு­மதி கொண்ட நிர்­வாக நடை­மு­றை­யா­கக் கொள்­ளப்­ப­டும். அது உண்­மை­யா­ன­தும் உறு­தி­யா­ன­து­மான நிர்­வா­க­மாக அமை­யும்போது, அடிக்­கடி அர­சு­களை மாற்றி அமைக்க வேண்­டிய தேவை நாட்டு மக்­க­ளுக்கு ஏற்­ப­டாது.

இப்­போது மேற்­கு­றிப்­பிட்ட மூன்று அம்­சங்­க­ளை­யும் எவ்­வி­தம் நடை­மு­றைப்­ப­டுத்த முடி­யும் என்­பது குறித்து ஆராய்­வது பெறு­மதி மிக்­கது. இந்த மூன்று அம்­சங்­க­ளை­யும் சாத­க­மான விதத்­தில் வெற்­றி­க­ர­மாக நடை­மு­றைப்­ப­டுத்த வேண்­டு­மா­னால், அதி­கா­ரத்­தைக் கைப்­பற்­றும் அரசு, நாட்­டின் சகல குடி­மக்­க­ளது பொரு­ளா­தார இருப்பு திருப்­தி­க­ர­மாக உள்­ளது என­வும், அந்த மக்­கள் மென்­மே­லும் உயர்வு காண வாய்ப்­புண்டு என­வும், அவர்­கள் மதிப்­பு­ட­னும் ஆத்­மார்த்த திருப்­தி­யு­ட­னும் வாழ வாய்ப்­புண்டு என­வும் உறு­திப்­ப­டுத்­து­தல் அவ­சி­ய­மா­கும்.

இவற்­றில் தத்­தம் இருப்பு என நாட்­டின் ஒவ்­வொரு குடி­ ம­க­னும் எதிர்­பார்ப்­ப­வை­க­ளாக, வாழ்க்­கை­யைக் கொண்டு செல்­வ­தற்­கான நிரந்­தர வரு­மா­னம், குடி­யி­ருக்க தமக்­கென ஒரு­வீடு, பிள்­ளை­க­ளுக்கு நல்ல கல்வி வச­தியை ஏற்­ப­டுத்­திக் கொடுக்­கும் வாய்ப்பு, குடும்­பத்­துக்­குத் தேவை­யான சுகா­தார வச­தி­கள், கள்­வர், எதி­ரி­க­ளி­ட­மி­ருந்து பாது­காப்பு மற்­றும் நீதி­, மு­றைப்­படி நிலை நிறுத்­தப்­ப­ டு­தல் மற்­றும் பாது­காக்­கப்­ப­டு­தல் என்­ப­வற்­றைக் குறிப்­பி­ட­லாம்.

22 மில்­லி­யன் வரை­யி­லான மக்­கள் வாழும் இந்த நாட்­டில், பத்து இலட்­சம் வரை­யா­ன­வர்­கள் இன்­ன­மும் கடும் வறுமை நிலை­யில் வாழ நேர்ந்­துள்­ள­தோடு, மூன்று வேளை உண­வும் கிட்­டாத நிலை­யில் பல இலட்­சக்­க­ணக்­கான மக்­கள் வறு­மை­யில் துன்­ப­முற நேர்ந்­துள்­ளது.

கவலை தரு­கின்­ற
புள்ளி விவ­ரங்­கள்

எமது நாட்­டில் வேலை­வாய்ப்­பற்­றோ­ரது வீதம் 4.5 என்ற வகை­யான சிறு தொகை என மத்­திய வங்­கி­யின் அறிக்கை தெரி­வித்­துள்ள போதி­லும், இன்று 20 முதல் 30 வய­துக்கு இடைப்­பட்ட வய­து­டைய இளை­யோ­ரில் 16 சத விகி­தத்­தி­னர் வேலை வாய்ப்­பற்ற நிலை­யில் உள்­ள­னர். குறிப்­பிட்ட இந்த இள­வ­ய­தி­ன­ரது நிலைமை மிகப் பரி­தா­ப­க­ர­மா­னது. நாட்­டின் பொரு­ளா­தார நட­வ­டிக்­கை­க­ளில் பங்­க­ளிப்பு வழங்­கு­வோ­ரில் 7.9 மில்­லி­யன் தொகை­யா­னோர் முச்­சக்­கர வண்­டி­யோட்­டித் தமது வாழ்க்­கை­யைக் கொண்டு நடத்­து­வோ­ரா­வர்.

பொரு­ளா­தா­ரச் சிர­மங்­கள் கார­ண­மாக பள்­ளிப்­ப­டிப்பை மேற்­கொள்ள இய­லாத 5 வய­துக்கு மேற்­பட்ட சிறு பிள்­ளை­க­ளது தொகை ஏழு இலட்­சம் வரை­யி­லா­ன­தா­கும். இன்று நாட்­டின் கிராம மட்­டப் பாட­சா­லை­க­ளில் ஆசி­ரி­யர்­க­ளுக்­கான பற்­றாக்­குறை நில­வு­கின்­றது. நாடு தழு­விய ரீதி­யில் சகல பிர­தே­சங்­க­ளி­லும் சுகா­தார வச­தி­கள் கிட்­டு­வ­தில்லை. கஷ்­டப் பிர­தே­சங்­க­ளி­லுள்ள அர­சி­னர் வைத்­தி­ய­சா­லை­க­ளில் வைத்­தி­யர்­கள் மற்­றும் தாதி­மா­ருக்­கான வெற்­றி­டங்­கள் நில­வு­கின்­றன. நகர்ப்­பு­றங்­க­ளில் மட்­டுமே தனி­யார் வைத்­தி­ய­சா­லை­க­ளில் வைத்­திய சிகிச்சை பெற்­றுக் கொள்­ளும் வாய்ப்­புக் காணப்­ப­டு­கி­றது.

இந்த நாட்­டில் காணப்­ப­டும் 5.2 மில்­லி­யன் வரை­யி­லான வீடு­க­ளில் 6.3 வீத­மான வீடு­க­ளில் வாடகை செலுத்­திக் குடி­யி­ருப்­போரே வசிக்­கின்­ற­னர். இன்று நாட்­டின் சகல பகு­தி­க­ளி­லும் கள­வும் கொள்­ளை­க­ளும் மலிந்து போய்­விட்­டுள்­ளன. தின­மும் கொலை­கள், பாதாள உல­கக் கும்­ப­ல்களது செயற்­பா­டு­கள் என வெளிப்­ப­டை­யா­கவே நாட்டு மக்­க­ளது பாது­காப்பு கேள்­விக் குறி­யாக மாறி­யுள்­ளது.

இத்­த­கைய பின்­ன­ணி­யில் இந்த நாட்­டின் முன்­னேற்­றம் குறித்து நாட்­டின் குடி­ம­க­னொ­ரு­வர் எவ்­வாறு எதிர்­பார்ப்பை மன­தில் வளர்த்­துக் கொள்ள இய­லும்? நாட்­டின் அபி­வி­ருத்தி வேகம் பின்­ன­டைவு காணும்­போது, குடி­மக்­க­ளது வாழ்க்­கைத்­தர முன்­னேற்­ற­மும் தடைப்­பட நேர்­கி­றது.

தொழில் வாய்ப்­புக்­கள்
மிக­வும் குறைந்­த­ அளவிலேயே

க.பொ.த உயர்­த­ரப் பரீட்­சைக்­குத் தோற்­றும் மாண­வர்­க­ளில் 60 வீத­மா­னோர் பல்­க­லைக்கழ­கக் கல்­விக்­குத் தகுதி பெறும் நிலை­யில், அவர்­க­ளில் 12 வீதத்­தி­ன­ருக்கு மட்­டுமே பல்­க­லைக்­க­ழக அனு­மதி கிட்­டு­கி­றது. 25 வய­துக்கு மேற்­பட்ட பொது­மக்­க­ளில் ஆக 3 வீதத்­தி­னர் மட்­டுமே பட்­டப்­ப­டிப்பை பூர்த்தி செய்­கின்­ற­னர். கடந்த 2017ஆம் ஆண்­டில் இந்த நாட்­டில் 2 லட்­சத்து 18 ஆயி­ரம் வரை­யி­லா­ன­வர்­களே வர்த்­தக முயற்­சி­க­ளில் ஈடு­பட்டு வந்­துள்­ள­னர். அது தொழில் புரி­யத்­தக்க உடற் தகுதி கொண்­டி­ருப்­போ­ரில் 1.5 வீதத்­துக்­கும் குறை­வா­னதே.

புதிய வியா­பார முயற்­சி­யொன்­றைப் பதிவு செய்­வ­தற்­காக மட்­டும் ஒரு இலட்­சம் ரூபா வரை செல­விட நேர்கிறது. இந்த நிலை­யில்,மதிப்­பான விதத்­தில் தமது வாழ்க்­கையை முன்­னெ­டுத்­துச் செல்­வ­தில் நாட்டு மக்­கள் சிர­மத்தை எதிர்­நோக்க நேர்ந்­துள்­ளது.

இந்த நிலை­யில் தாம் விரும்­பும் மதத்­தைப் பின்­பற்­றும் சுதந்­தி­ரம், இன நல்­லி­ணக்­கம் பேணி வாழும் உரிமை, எதிர்­பார்க்­கும் சமூக மட்ட மதிப்பு, நாட்­டின் பிரஜை என்ற வகை­யில் எதிர்­பார்க்­கும் மதிப்பு, கருத்து வெளிப்­ப­டுத்­தும் சுதந்­தி­ரம், தமது விருப்­பப்­படி சுதந்­தி­ர­மாக வாக்­க­ளிப்­ப­தற்­கான ஜன­நா­யக சுதந்­தி­ரம், தமது வாக்கு ஆத­ர­வால் அதி­கா­ரத்­தைக் கைப்­பற்­றிய அர­சி­யல்­வா­தி­கள் தமது அதி­கா­ரத்தை முறை­கேடாகப் பயன்படுத்தக் கூடா­தென்ற எதிர்­பார்ப்பு என்­பவை போன்ற தத்­த­மது அடிப்­படை மனித உரி­மை­கள் மற்­றும் எதிர்­பார்ப்­பு­களை உரிய வகை­யில் பெற்று சுதந்­தி­ர­மான, மகிழ்ச்­சி­யான வாழ்வு வாழ வேண்­டு­மென்ற எதிர்­பார்ப்பு இந்த நாட்­டின் பிர­ஜை­கள் என்ற வகை­யில் எம் ஒவ்­வொ­ருத்­தர் மத்­தி­யி­லும் நில­வும் எதிர்­பார்ப்­பா­கும்.

ஆனால் இன­வா­த­மும் மத­வா­த­மும் இந்த நாட்­டின் அர­சி­ய­லில் கைவி­லங்­கு­க­ளாக இருக்­கும்வரை இந்த நாட்­டில் இன்று நில­வும் சிக்­கல்­க­ளுக்­கு தீர்வு கண்­டிட வாய்ப்­பில்லை.
இந்த நாட்­டில் பிறந்த சகல பிர­ஜை­க­ளுக்­கும் சம­மான உரி­மை­கள் கிட்­ட­வேண்­டி­யது மிக அவ­சி­ய­மா­கும்.

இந்த நாடு குறித்­த­தொரு இனத்­த­வ­ருக்கோ, மதத்­தி­ன­ருக்கோ அல்­லது குறித்­த­தொரு மொழி பேசு­ப­வ­ருக்கோ உரி­ய­தென எவ­ரும் வாதம் செய்ய இய­லாது. குறித்­த­தொரு நிலப்­ப­குதி குறித்­த­தொரு இனத்­த­வர்­க­ளுக்கு மட்­டுமே உரி­மை­யா­னது என வாதம் செய்­வ­தன் மூலம் ஒரு­போ­தும் நாட்­டில் பூரண அமை­தி­யை­யும் சமா­தா­னத்­தை­யும் நிலை­நி­றுத்­தி­விட இய­லாது.

கடந்த 2500 ஆண்­டு­கள் காலத்­துள் நாட்­டில் எத்­த­னையோ மாற்­றங்­கள் ஏற்­பட்டு விட்­டுள்­ளன என்ற யதார்த்­தத்தை நாம் தெளி­வா­கப் புரிந்து கொள்ள வேண்­டும். மக்­க­ளுக்கு ஒன்­று­கூடி வாழ்­வ­தற்கு அவ­சி­யம் உள்­ளமை போன்றே, ஏனைய விட­யங்­க­ளி­லும் அவர்­கள் தமது அன்­னி­யோன்ய உறவை கட்­டிக்­காத்­தல் அவ­சி­ய­மா­கி­றது.

சகல மக்­க­ளும் தனித்­த­னி­யான, வெவ்வேறான கருத்­துக்­கள் கொண்­ட­வர்­கள். அர­சி­யல் தலை­வர்­கள் அந்த மக்­க­ளது குர­லுக்­குச் செவிமடுத்துச் செயற்­பட வேண்­டும். அவர்­க­ளது கோரிக்­கை­களை நிறை­வேற்றி வைப்­ப­தை­விட, அவர்­க­ளது கருத்­துக்­க­ளுக்கு மதிப்­ப­ளித்து உள்­வாங்­கிக் கொள்­ளல் மிக அவ­சி­ய­மா­கும். இது நாட்­டின் ஒவ்­வொரு பிர­ஜை­யும் எதிர்­பார்க்­கும் கௌர­வ­மா­கும்.

எந்­த­வொரு அர­சும் அந்­தந்த நாட்­டின் பிர­ஜை­க­ளது முழு ஆத­ர­வை­யும் ஈட்ட வேண்­டு­மா­னால், மேற்­கு­றித்த அவர்­க­ளது சகல தேவை­க­ளை­யும் நிறை­வேற்றி வைத்­தாக வேண்­டி­யது அவ­சி­ய­மா­கும்.

You might also like
X