மடு அன்னையின்- ஆவணி மாதத் திருவிழா!!

0 21

மன்னார் மடுத் திருத்தலத்தின் வருடாந்த ஆவணி மாத திருவிழா இன்று காலை 6.30 மணிக்கு கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மல்கம் றஞ்சித் ஆண்டகை தலைமையில் ஆரம்பமானது.

திருப்பலியை தொடர்ந்து திருச்சொரூப பவனி இடம்பெற்று திருச்சொரூப ஆசிர்வாதத்துடன் திருவிழா நிறைவடையவுள்ளது.

மடுத் திருத்தலத்திற்கு நாட்டின் பல பாகங்களில் இருந்தும் சுமார் 6 இலட்சத்திற்கும் அதிகமான அனைத்து இன பக்தர்களும் வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like