மனச்­சாட்­சி­யு­டன் செயற்­பட்­டால் சமூக மேம்­பாடு சிறக்கும்!!

யாழ். மாந­க­ர­ச­பைப் பகு­தி­யி­லுள்ள, யாழ் மத்­தியை அண்­டிய நாவ­லர் வீதியுடன் கடை­யிற் சுவாமி ஒழுங்கை சந்­திக்­கும் சந்­தி­யில், மிக அழ­கான பெரிய சிவ­பெ­ரு­மான் படத்­து­டன் கூடிய பதாகை ஒன்று அண்­மைக்­கா­ல­மாக மதி­லொன்றில் மிகத் தாழ்­வாக காட்­சிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. ‘இது ஆலயச் சூழல், இங்கு குப்­பை­கள் கொட்ட வேண்­டாம்’ என அதில் பொறிக்­கப்­பட்­டி­ருந்­தது. இதன் பின்­னர் சில நாள்­க­ளாக அந்த இடம் குப்பை கூழ­மின்றி துப்புவராக இருந்­தது.

அந்­தப் பதாகை அதே இடத்­தில், அதே விதத்­தில் இருக்­கும் நிலை­யி­லேயே, மீண்­டும் அவ்­வி­டத்­தில் குப்பை கூழங்­கள் நிறை­யத் தொடங்­கி­விட்­டன. (மாந­க­ர­சபை அவ்­வப்­போது அதனை அகற்­றி­யும் வரு­கின்­றது) தமது தெரு­வில் அய­ல­வர்­களாலோ, அல்லது வேறு இடங்­க­ளில் இருந்து குப்­பையைக் கொண்டு வந்து வீசி விட்­டுச் செல்பவர்க ளையோ தடுக்­கும் நோக்­கில் பல்­வேறு உத்­தி­கள் கையா ளப்பட்டு வரு­வது ஒன்­றும் புதி­தல்ல.

கொஞ்­சக் காலத்­துக்கு முன்­னர் கொக்­கு­வில் சம்­பி­ய­னின் லேனில் தமது வீடு­க­ளில் சேரும் குப்­பை­களைக் கொண்டு வந்து குறித்த ஒரு இடத்­தில் வீசி­விட்­டுச் செல்வோரைத் தடுத்து நிறுத்­தும் உத்­தி­யாக ‘நாய்­களே! இவ்­வி­டத்­தில் குப்­பை­யைக் கொட்­டுங்­கள்’ எனும் விளம்­ப­ரம் பல இடங்­க­ளி­லும் ஒட்­டப்­பட்­டி­ருந்­த­தும், அதன் பின்­னர் குப்பை கூழங்­க­ளி­ன்றி அவ்­வி­டம் துப்­ப­ர­வாக இருந்­த­மை­யும் அவ­தா­னிக்­கப்­பட்­டது.

இங்கு பொதுத் பிரச்­சினை ஒன்­றுக்காக, சம­யம் சார்ந்த சின்­னங்­க­ளைப் பயன்படுத்­து­வது ஒரு­வ­கைக் கொச்­சைப்­ப­டுத்­த­லாகி இருக்­கின்­றது.சிவ­னது உரு­வம் பொறித்த பதாகை முன்­பாக குப்­பை­கொட்­டு­ ப­வர்­கள் வேறு சம­யத்­த­வர்­க­ளாக இருக்கும் சந்­தர்ப்­பங்­க­ளில் வேண்டத் தகாத விளை­வு­கள் ஏற்­ப­ட­வும் இட­முண்டு.

வினைத்­தி­ற­னாக செயற்­ப­டும் யாழ் மாந­க­ர­சபை இத்­த­கைய அனு­ம­தி­யற்ற பதா­கைகளை அகற்ற நட­வ­டிக்கை எடுப்­ப­து­டன், அவ்­வி­டத்­தில், பொருத்­த­மான சிவப்பு, நீல நிற குப்பை போடுவதற்கான கொள்­க­லன்­களை வைத்து அப்­ப­கு­தி­வாழ் மக்­க­ளை­யும் வழிப்­ப­டுத்த வேண்­டும்.

ஒரு சமூகநலன் விரும்பி

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close