side Add

மனது தேடிக்­கொண்­டே­யி­ருக்­கி­றது…!!

இலங்கை, இந்­தியா மட்­டு­மல்ல உல­கமே உற்று நோக்­கும் பிர­பா­க­ர­னின் மாவீ­ரர் தின உரை மட்­டு­மல்ல, பிர­பா­க­ரனே இல்­லாத ஒன்­ப­தா­வது ஆண்டு மாவீ­ரர் தின நிகழ்­வு­கள் ஈழத்­தி­லும், இந்­தி­யா­வி­லும், புலம் பெயர் தமி­ழர்­கள் வாழும் நாடு­க­ளி­லும் நடந்து முடிந்­தி­ருக்­கின்­றன.

பிர­பா­க­ரன் இல்­லை­யென்று தெரிந்­தும் மீண்­டும் வரு­வா­ரெ­னக் கருத்­துச் சொல்­லிக்­கொண்­டி­ருந்த தமிழ்த் தலை­வர்­க­ளுக்­கும், அவர் இருக்­கி­றாரா? இல்­லையா? என்று குழப்­பத்­தி­லி­ருந்த மக்­க­ளுக்­கும் அவர் இல்லை என்­பது இப்­போது தெளி­வாகி விட்­டி­ருக்­க­லாம், இல்லை அவர் வரு­வார் எனச் சொல்­லிக்­கொண்­டி­ருப்­ப­வர்­களை அப்­ப­டியே கடந்­து­போக வேண்­டிய நிலை.

ஏனெ­னில் அவர்­க­ளின் தேவை­கள் வேறா­னவை. இவற்­றை­யெல்­லாம் விட்டு விடு­வோம், அவர் இல்­லாத இத்­த­னை­ஆண்­டு­கள் ஈழத் தமி­ழர் மத்­தி­யில் எப்­ப­டி­யி­ருக்­கின்­றது. சொல்­லப்­போ­னால் போர் இல்லை, இழப்­பு­கள் இல்லை, போர்ச் சத்­தம் ஓய்ந்து விட்­டி­ருக்­கின்­றது. ஆனால் மக்­கள் மன­தில் நிம்­ம­தி­யி­ருக்­கின்­றதா? என்­றால் சிலர், ‘‘எதோ நிம்­ம­தி­யாக வாழ்­கி­றோம்’’ என்­கி­றார்­கள். ‘‘போர் இல்­லைத் தான் ஆனால் நிம்­ம­தி­யில்­லாத வாழ்வு’’ என்­கி­றார்­கள் சிலர்.

போர் இல்­லாத வாழ்வு நிம்­ம­தி­யா­கத்­தானே இருக்க வேண்­டும். ஏன் நிம்­ம­தி­யில்லை?

‘‘போர் இருந்த போது வெளி­யில் பய­மி­ருந்­தது. அதை எப்­ப­டி­யும் புலி­கள் தடுத்து விடு­வார்­கள் என்­கிற நிம்­ம­தி­யும் இருந்­தது அல்­லது அதற்கு மாற்­றாக ஏதா­வது செய்­வார்­கள் என்­கிற நம்­பிக்­கை­யி­ருந்­தது. இப்­போது பயம் உள்­ளே­யி­ருக்­கி­றது, போர்க் காலம் முடி­வ­டைந்த பின்­னர் ஊரில் நடந்த பெண்­கள் மீதான பாலி­யல் வன்­மு­றை­கள், பெரு­கி­விட்ட போதைப்­பொ­ருள் பாவனை, அத­னால் நடக்­கும் அன்­றாட வன்­மு­றை­கள், நிர்­வா­கச் சீர்­கேடு. இவை எதை­யும் வெளி­யி­லி­ருந்து யாரும் வந்து செய்­ய­வில்லை.

அனைத்­துமே உள்­ளூ­ரில் இருப்­ப­வர்­க­ளால்­தான் நடக்­கின்­றன’’ என்­கின்­றது ஒரு தரப்பு. ‘‘போர் நடந்­து­ கொண்­டி­ருந்­தால் எங்­கள் பிள்­ளை­கள் போருக்­கா­கக் கொண்டு செல்­லப்­பட்­டி­ருப்­பார்­கள், அவர்­கள் அப்­ப­டிக் கொண்டு செல்­லப்­பட்டு இறந்து போவ­தை­விட எங்­க­ளோடு எப்­ப­டி­யா­வது இருந்து விட்­டுப் போகட்­டும்’’ என்­கி­றது மறு தரப்பு.

புலி­கள் மீதான குற்­றச்­சாட்டு
அர­சி­யல் பற்­றிப் பார்த்­தால் புலி­க­ளுக்கு அர­சி­யல் தெரி­யாது அல்­லது அவர்­கள் அர­சி­யலே செய்­ய­வில்லை என்­கிற ஒரு குற்­றச்­சாட்டு உண்டு. அவர்­க­ளுக்கு அர­சி­யல் தெரி­யா­தென்றோ, செய்­ய­வில்லை என்றோ சொல்­லி­விட முடி­யாது. அவர்­கள் செய்த அர­சி­ய­லா­னது ஒவ்­வொரு தட­வை­யும் பேச்­சு­வார்த்­தைக் காலங்­க­ளில் எதிர்த் தரப்பை ஏமாற்ற மட்­டுமே பயன்­ப­டுத்துவதே.

அத­னால் பல தட­வை­கள் வெற்றி பெற்­றா­லும் அதில் மாற்­றங்­கள் கொண்டு வரா­மல் விட்­ட­தால் அதே ஏமாற்று அர­சி­ய­லால் தோற்­க­டிக்­கப்பட்­டார்­கள். ஜன­நா­யக அர­சி­யல் மூலம் தமி­ழீ­ழத்­தைப் பெற்­று­விட முடி­யா­தென்­ப­ தைப் பிர­பா­க­ரன் உறு­தி­யாக நம்­பி­னார். அப்­ப­டி­யா­னால், ஆயு­தப்­போ­ராட்­டம் மூலமே ஈழத்தை பெற்­று­வி­ட­லா­மென அவர் இறு­தி­வரை நம்­பி­னாரா? என்­றால் இறு­திப் போரின் முடி­வு­க­ளின் அனு­ப­வங்­க­ளூ­டா­கப் பார்க்­கும்­போது அது­வு­மில்லை என்­று­தான் சொல்ல வேண்­டும்.

கொள்கை மீது உறு­தி­யாக இருந்த தலை­வர்
கொண்ட கொள்­கைக்­காக உயிரை விலை­யா­கக் கொடுத்­தா­லும் எந்­த­வித சம­ர­சத்­தை­யும் செய்­து­கொள்ள விரும்­ப­வில்லை. ஒரு மக்­கள் தலை­வ­னாக அந்த மக்­க­ளை­யும் அவர்­க­ளை­யும் பாது­காக்­கும் பொறுப்­புள்ள ஒரு தலை­வ­னாக உலக, உள்­ளூர் அர­சி­ய­லுக்­குள் உள்ள நெளிவு, சுளி­வு­க­ளுக்கு ஏற்ப வளைந்து கொடுத்து மக்­க­ளைக் காப்­பாற்றி அவர்­க­ளின் தேவை­களை ஓர­ள­வுக்­கே­னும் நிறை­வேற்­று ­ப­வனே உண்­மை­யான மக்­கள் தலை­வன். அந்த விட­யத்­தில் பிர­பா­க­ரன் தவ­றி­ழைத்து விட்­டார் என்­கிற கருத்­தும் ஏற்­றுக்­கொள்­ளக் கூ­டி­யதே. ஆனா­லும் அவர்­கள் தமி­ழர்­க­ளுக்கு எந்த அர­சி­யல் வழி­காட்­ட­லை­யும் செய்து விடா­மல் போக­வில்லை.

புலி­கள் தோற்­று­வித்த கூட்­ட­மைப்பு
2001ஆம் ஆண்டு தமி­ழர்­க­ளுக்கு ஒரு பல­மான அர­சி­யல் தளம் வேண்­டு­மென்­கிற நோக்­கோடு கிழக்­குப் பத்­தி­ரி­கை­யா­ளர் சங்­கத்­தின் முயற்­சி­யால் நான்கு கட்­சி­களை இணைத்து உரு­வாக்­கப்­பட்ட தமிழ்த்­தே­சி­யக் கூட்­ட­மைப்பை 2002ஆம் ஆண்­டில் உள்­வாங்­கிய புலி­கள் அமைப்பு ஜன­நா­யக அர­சி­யல் ஒன்றை ஈழத் தமி­ழர்­க­ளுக்கு அடை­யா­ளம் காட்டி விட்டே சென்­றுள்­ளது.

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு இன்று இலங்­கை­யில் எதிர்க் கட்­சி­யாக அமர்ந்­தி­ருந்­தா­லும் தமி­ழர் பகு­தி­க­ளில் சீர­மைப்பு, புதிய தொழில் வாய்ப்­பு­கள் ஏற்­ப­டுத்­தா­மை­யால் வேலை வாய்ப்­பின்மை, அபி­வி­ருத்தி என்று எது­வும் பெரி­ய­ள­வில் நடக்­கா­தது மட்­டு­மல்ல தமி­ழ­ருக்­கான தீர்­வுத்­திட்­டத்­தைப் பெற்­றுக்­கொள்ள முடி­யா­மல் கால விர­யம் செய்­கி­றார்­கள் என்று அவர்­கள் மீது காட்­ட­மான விமர்­ச­னங்­க­ளும் கோப­மும் இருந்­தா­லும் இன்­று­வரை மக்­கள் தொடர்ந்­தும் அவர்­க­ளுக்கே ஆத­ர­வ­ளிப்­ப­தற்கு அந்த அமைப்­புப் புலி­க­ளால் கை காட்டி விடப்­பட்ட அமைப்பு என்­பதே முக்­கிய கார­ணம்.

கூட்டமைப்­பின் நகர்வு முக்­கி­ய­மா­னது
தமிழ் மக்­கள் எப்­போ­தும் அச்­சத்­து­ட­னும் போரில் இறந்­து­போன மக்­க­ளுக்கோ, மாவீ­ரர்­க­ளுக்கோ பகி­ரங்­க­மாக ஓர் அஞ்­சலி கூடச் செலுத்­த­மு­டி­யா­தி­ருந்த மகிந்த ராஜ­பக்­ச­வின் இலங்­கைத் தீவின் இறுக்­க­மான, அரசை மாற்­றி­ய­மைத்து மக்­கள் மனங்­க­ளி­லி­ருந்த அச்­சத்­தைப் போக்­கி­ய­தில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் பங்கு முக்­கி­ய­மா­னது என்­பதை யாரும் மறுத்து விட­வும் முடி­யாது. முப்­ப­தாண்டு கால கொடிய போரால் இரண்டு நாடு­க­ளா­கப் பிரிந்து கிடந்த தேசத்­தில் ஓர் இணக்­கப்­பாட்­டுக்கு வந்து தீர்­வு­க­ளைப் பெற்­றுக்­கொள்­வ­தற்கு அது கால அவ­கா­சம் எடுக்­கும் என்­கிற யதார்த்­தத்­தை­யும் நாம் புரிந்­து­கொள்ளவேண்­டும்.

எது எப்­ப­டியோ இந்த வரு­ட­மும் பிர­பா­க­ரனோ, அவ­ரது மாவீ­ரர் தின உரையோ, மக்­க­ளுக்­குக் கிட்­டி­யி­ருக்­க­வில்லை என்­பது அனை­வ­ருக்­கும் தெரி­யும். ஆனா­லும் அவரை மக்­க­ளின் மனது தேடிக் கொண்­டே­யி­ருக்­கின்­றது என்­று­தான் சொல்ல வேண்­டும். நிச்­ச­ய­மாக அது இன்­னோர் ஆயு­தப்­போ­ராட்­ட­துக்­காக அல்ல… சுய­ந­ல­ மில்­லாத கொண்ட கொள்­கைக்­காக இறு­தி­வ­ரைப் போரா­டும் நல்­ல­வொரு தலைமை வேண்­டும்­என்­ப­தற்­காக.

You might also like