மன்னாரில் தோல்வியடைகிறதா மதச் சகிப்புத் தன்மை!!

கடந்­து­போன வாரம் சமய முக்­கி­யத்­து­வம் வாய்ந்த ஒன்­றாக அமைந்­தி­ருந்­தது. இந்­துக்­கள் இரவு முழு­வ­தும் விழித்­தி­ருந்து சிவனை வழி­ப­டும் சிவ­ராத்­திரி விரத நாளா­கக் கடந்த நான்­காம் திகதி திங்­கட்­கி­ழமை அமைந்­தி­ருந்­தது. அதே­வேளை, கடந்த ஆறாம் திகதி புதன்­கி­ழமை கிறி¤ஸ்­தவ மக்­க­ளின் திரு­நீற்­றுப்­பு­த­னாக அமைந்­தி­ருந்­த­து­டன், பரி­சுத்த வாரத்தை உள்­ள­டக்­கி­ய­தாக அமை­யும் தமது 40 நாள் தவக்­கா­லத்­தி­னை­யும் அவர்­கள் அன்று ஆரம்­பித்­தி­ருந்­த­னர். விரத அனுஷ்­டா­னத்­தைப் பொது­வா­ன­தா­கக் கொண்­ட­மைந்த இந்த இரண்டு தினங்­க­ளும் ஒரே வாரத்­தில் அமைந்­தி­ருந்­த­மை­யா­னது இலங்­கை­யில் இருக்­கக்­கூ­டிய பல்­லி­னத்­தன்­மை­யில் ஒற்­று­மை­யைக் காண்­பித்­தி­ருந்­தது. எனி­னும் துர­திஷ்­ட­வ­ச­மா­கக் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை மன்­னார் பாலா­விக்­க­ரையை அண்­மித்து மாந்­தைச் சந்­தி­யி­லி­ருந்து திருக்­கே­தீஸ்­வ­ரம் செல்­லும் வீதி­யில் நிகழ்ந்த சம்­ப­வம் கவ­லைக்­கு­ரி­ய­தொன்­றாக அமைந்­தி­ருந்­தது.

வளைவை அகற்­றிய சம்­ப­வம்
திங்­கட்­கி­ழமை அனுஷ்­டிக்­கப்­ப­ட­வி­ருந்த சிவ­ராத்­திரி விர­தத்தை முன்­னிட்டு மன்­னார் – திருக்­கே­தீஸ்­வ ­ரத்­துக்­குப் பய­ணிக்­கும் இந்­துப் பக்­தர்­களை வர­வேற்­ப­தற்­காக அமைக்­கப்­பட்ட வர­வேற்பு வளை­வைக் கத்­தோ­லிக்க மதத்­தினை சேர்ந்த சிறு குழு­வி­னர் அகற்ற முயற்­சித்த சம்­ப­வம் கடந்த வாரத்­துக்கு இருந்த சமய முக்­கி­யத்­து­ வத்­தினை நொருக்­கிப் போட்­டி­ருந்­தது. கடந்த மூன்­றாம் திகதி ஞாயிற்­றுக்­கி­ழமை தமது பொதுக் காலத்­தினை நிறைவு செய்­யும் இறுதி ஞாயிறு தின ஆரா­தனை நாளில் சில கத்­தோ­லிக்­கர்­கள் நடந்து கொண்ட விதம் முகஞ்­சு­ழிக்­கச் செய்­யும் ஒன்­றாக அமைந்­தி­ருந்­தது. திரு­நீற்­றுப்­பு­த­னுக்கு முன்­பாக மன்­னார் – மாந்­தை­யில், திருக்­கே­ தீஸ்­வ­ரத்­துக்­குச் செல்­லும் வீதி­யில் நடந்த இந்த அடா­வ­டி­யான சம்­ப­வம் மன்­னா­ரில் நீறு­பூத்த நெருப்­பாக இருக்­கக்­கூ­டிய மத முரண்­பா­டு­க­ளால் வெளிப்­பட்ட ஒரு தீப்­பொறி என்­றால் அது மிகை­யல்ல. ‘மூவ­ரென இரு­வ­ரென’ என்று ஆரம்­பிக்­கும் தேவா­ரப் பாடல் பெற்ற கௌரி அம்­பாள் இணை திருக்­கே­தீச்­ச­ர­நா­தர் திருக்­கோ­யில் திருக்­கே­தீஸ்­வ­ரத்­தில் அமைந்­தி­ருக்­கி­றது போலவே போப்­பாண்­ட­வர் தரி­ச­னம் தந்த மரு­த­ம­டுப்­ப­தி­யும் அங்கு அமைந்திருந்து இரு வேறு மதத்­தொன்­மை­களை மன்­னா­ரில் பிர­சித்­தம் செய்­கின்­றன.

கிறிஸ்­தவ – முஸ்­லிம் தரப்­பு­க­ளால்
பாதிக்­கப்­ப­டும் இந்­துக்­கள்
கிறிஸ்­த­வர்­களை அதி­லும் கத்­தோ­லிக்க கிறிஸ்­த­வர்­களை அதி­க­ள­வி­லும் அதற்­க­டுத்­த­தாக இந்­துக்­க­ளை­யும் இஸ்­லா­மி­ய­ரை­யும் குடித்­தொ­கை­யில் கொண்­டி­ருக்­கக்­கூ­டிய மாவட்­ட­மாக மன்­னார் மாவட்­டம் அமைந்­தி­ருக்­கி­றது. இங்கு திருச்­ச­பை­யின் ஆத­ர­வு­ட­னும் ஆத­ரவு இல்­லா­ம­லும் கத்­தோ­லிக்கத் தரப்­பி­னர் முன்­னெ­டுக்­கக்­கூ­டிய சில செயற்­பா­டு­கள் மதச் சகிப்­புத்­தன்­மை­யைப் பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­து­வ­தாக அமை­கின்­றன. கத்­தோ­லிக்க தரப்­பி­ன­ருக்கு ஆய­ரோடு அமைந்த திருச்­ச­பை­யின் ஆத­ர­வைப் பெற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய சூழல் நில­வு­கை­யில், இஸ்­லா­மியத் தரப்­பி­ன­ருக்கு அமைச்­சர் ரிஷாத் பதி­யு­தீன் மூல­மான அதி­கா­ரப் பலம் கிடைத்து வரு­கி­றது. இந்த நிலை­யில் மன்­னா­ரில் வசிக்­கக்­கூ­டிய இந்­துக்­கள் மேற்குறித்த இரண்டு தரப்­பி­ன­ரது சில செயற்­பா­டு­க­ளால் தாம் பாதிக்­கப்­ப­டு­வ­தாக முறை­யி­டு­கின்­ற­னர்.

தொனி வேறு­பட்ட அறிக்­கை­கள்
அண்­மைய மன்­னார் அசம்­பா­வி­தம் தொடர்­பில் யாழ். மறை­மா­வட்ட கத்­தோ­லிக்­கத் திருச்­சபை தரப்­பி­லி­ருந்­தும் மன்­னார் மறை­மா­வட்டக் கத்­தோ­லிக்கத் திருச்­சபை தரப்­பி­லி­ருந்­தும் அறிக்­கை­கள் வெளி­வந்­தி­ருந்த நிலை­யில், அவற்­றில் காணப்­பட்ட தொனி வேறு­பாடு நிலை­வ­ரத்­தினை படம்­பி­டித்­துக் காட்­டி­யி­ருந்­தது. சம்­ப­வத்தை அடுத்து யாழ். மறை­மா­வட்­டக் குரு­மு­தல்­வ­ரி­னால் வெளி­யி­டப்­பட்ட கண்­டன அறிக்கை கத்­தோ­லிக்­கர் என்ற வகை­யில் குறித்த சம்­ப­வத்­துக்­காக வெட்­கித் தலை­கு­னி­வ­தா­கக் குறிப்­பி­டப்­பட்டு வந்­தி­ருந்­த­து­டன் மான­சீ­க­மான முறை­யில் பிழை பொறுக்­கு­மாறு கோரு­வ­தான தொனி­யில் அமைந்­தி­ருந்­தது. எனி­னும் மன்­னார் மறை­மா­வட்­டத் திருச்­சபை தரப்­பி­லி­ருந்து வெளி­யி­டப்­பட்ட தெளிவு அறிக்கை, ஒரு வகை கடுந்­தொ­னியை கொண்­டி­ருந்­தது. தவி­ர­வும் குறித்த அறிக்­கைக்கு மறுத்­தா­னாக திருக்­கே­தீச்­சர ஆல­யத்­தி­ருப்­ப­ணிச்­ச­பை­யி­ன­ரால் வெளி­யி­டப்­பட்ட அறிக்கை மன்­னார் திருச்­ச­பை­யின் தெளிவு அறிக்­கை­யில் இருந்த சில புனை­வு­க­ளை­யும் தெரி­யப்­ப­டுத்­தி­யி­ருந்­தது.

அர­சி­யல் பிர­தி­நி­தித்­து­வம்
இல்லை எனும் ஆதங்­கம்
மன்­னாரை உள்­ள­டக்­கிய வன்னி தேர்­தல் மாவட்­டம் ஆறு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளைக் கொண்­டி­ருக்­கிற போதி­லும் மன்­னாரை மையப்­ப­டுத்­தி இந்­துக்­களை நாடா­ளு­மன்­றில் பிர­தி­
நி­தித்­து­வப்­ப­டுத்­தத் தாம் ஓர் இந்­துப் பிர­தி ­நி­தி­யைத் தானும் கொண்­டி­ருக்­க­வில்லை என்­னும் ஆதங்­கம் காலங்­கா­ல­மாக வெளிப்­ப­டுத்­தப்­பட்டே வரு­கி­றது. மன்­னா­ரைச் சேர்ந்த நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான செல்­வம் அடைக்­க­ல­நா­தன் மற்­றும் சார்ள்ஸ் நிர்­ம­ல­நா­தன் ஆகி­யோர் கத்­தோ­லிக்­கர்­க­ளாக இருக்­கை­யில் சிவ­சக்தி ஆனந்­தன் வவு­னி­யா­வை­யும், சிவ­மோ­கன் முல்­லைத்­தீவு மாவட்­டத்­தை­யும் மையப்­ப­டுத்­தியே இயங்­கு­கின்­ற­னர். ஏனைய இரண்டு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளும் இஸ்­லா­மி­யர்­கள் ஆவர்.

கிறிஸ்­த­வப் பெயர் மாற்­றம்
பெற்ற பாட­சாலை
அதி­கார மற்­றும் ஆத­ர­வுப் பலம் என்­ப­வற்­றின் தலை­யீ­டு­கள் மன்­னா­ரில் மதச் சகிப்­புத்­தன்­மைக்கு நெருக்­கடி கொடுத்து வரு­கை­யில் மத மாற்ற, பெயர் மாற்ற விவ­கா­ரங்­க­ளும் மத முரண்­பா­டு­ க­ளுக்கு எண்­ணெய் ஊற்றி வரு­வ­தா­கச் சமூக ஆர்­வ­லர்­கள் கவலை வெளி­யி­டு­கின்­ற­னர். மன்­னார் மாவட்­டத்­தின் நானாட்­டான் பிர­தேச செய­லக பிரி­வுக்­குட்­பட்ட பிர­பல பாட­சா­லை­யான மன் /
நா­னாட்­டான் மகா­வித்­தி­யா­ல­யம்­ரூ­பவ் மன்/ டிலா­சால் கல்­லூரி என அண்­மை­யில் கிறிஸ்­த­வப் பெயர் மாற்­றம் செய்­யப்­பட்­டமை அந்­தப் பிர­தேச இந்­துக்­க­ளி­டத்­தில் நெரு­ட­லைத் தோற்­று­வித்­தி­ருக்­கி­றது. சில வருட கால­மாக மேற்­ப­டிப் பாட­சாலை டிலா­சால் சபை துற­வி­க­ளின் பரா­ம­ரிப்­பில் நிர்­வ­கிக்­கப்­பட்டு வந்த நிலை­யில், தற்­போது அது டிலா­சால் கல்­லூ­ரி­யா­கப் பெய­ரி­டப்­பட்­டி­ருக்­கி­றது.

மன்­னா­ரில் மதம்
சார்ந்து ஆதிக்­கம்
மன்­னார் சர்­வ­மதப் பேரவை, மன்­னார் தமிழ்ச் சங்­கம் மற்­றும் மன்­னார் குடி­மக்­கள் குழு போன்­ற­வற்­றில் தமது வரு­கை­யைக் கொண்­டி­ருக்­கும் கத்­தோ­லிக்க திருச்­ச­பை­யின் குரு­வா­ன­ வர்­கள் மொழி சார்ந்த மற்­றும் இனம் சார்ந்த நட­வ­டிக்­கை­க­ளில் ஆக்­க­பூர்­வ­மான பங்­க­ளிப்­பினை வழங்­கி­னா­லும் மதம் சார்ந்து ஆதிக்­கம் செலுத்­து­வ­தா­கத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. இந்த நிலை­வ­ரம் சில ஓரங்­கட்­டல்­க­ளுக்கு வழி­ய­மைப்­ப­தாகக் கவலை வெளி­யி­டப்­ப­டு­கி­றது. மாந்­தைச் சந்­தி­யி­லி­ருந்து திருக்­கே­தீஸ்­வ ­ரம் செல்­லும் வீதி­யில் அமைக்­கப்­பட்ட வர­வேற்பு வளைவை அடாத்­தாக அகற்ற முற்­பட்ட- அகற்­றிய அண்­மைய சம்­ப­வத்தை அடுத்து இந்­துக் குரு­மார்­கள் மன்­னார் சர்­வ­ம­தப் பேர­வை­யி­லி­ருந்து வெளி­யே­றி­யி­ருக்­கி­றார்­கள். அதே­வேளை, இந்­துப் பிர­தி­நி­தி­கள் பங்­கேற்­காத (சர்வ)மத பேர­வை­யின் கூட்­டம் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை மன்­னார் சிறிய குரு­ம­டத்­தில் கூட்­டப் பட்­டி­ருக்­கி­றது.

தற்­கா­லி­கத் தீர்­வால் விட­யம் தணிக்­கப்­பட்­டி­ருக்­கி­றது
மன்­னார் விவ­கா­ரம் நீதி­மன்­றின் தலை­யீட்­டினை அடுத்­துத் தற்­கா­லிக சுமூக நிலையை எட்டி, சிவ­ராத்­திரி அனுஷ்­டா­னங்­கள் குழப்­ப­மின்றி நடை­பெற வழி­கோ­லி­யி­ருந்­தன. இந்த விட­யம் கடந்த எட்­டாம் திகதி மீண்­டும் நீதி­மன்­றின் கவ­னத்­துக்­குக் கொண்­டு­வ­ரப்­பட்ட நிலை­யில், குழப்­பம் விளை­வித்­த­ வர்­களை கைது செய்­யு­மாறு நீதி­மன்று உத்­த­ரவு பிறப்­பித்­தி­ருக்­கி­றது. இதனை விட, சிவ­ராத்­தி­ரியை முன்­னிட்டு நிறு­வப்­பட்ட சர்ச்­சைக்­கு­ரிய வளை­வும் அகற்­றப்­பட்­டி­ருக்­கி­றது.
கோயில் உள்ள ஊரில் குடி­யி­ருப்­ப­தைப் பெரு­மை­யாகக் கொண்டு கோயில் இல்­லாத ஊரில் குடி­யி­ருக்க வேண்­டாம் என்று வலி­யு­றுத்­து­கின்ற நம் மொழி­யி­னர், மன்­னா­ரில் மத விவ­கா­ரங்­க­ளில் துரு­வங்­க­ளா­கி­யி­ருப்­பது வருத்­த­ம­ளிக்­கி­றது. மதச் சின்­னங்­களை நிறு­வு­வ­தி­லும், பிடுங்­கு­வ­தி­லும் காட்­டப்­ப­டும் கரி­சனை, அந்த அந்த மத நம்­பிக்­கை­க­ளுக்­கு­ரிய ஆசா­ரங்­க­ளைப் பின்­பற்­று­வ­தில் காட்­டப்­ப­டாமை கவ­லைக்­கு­ரி­யது. இதற்கு மதப்­பெ­ரி­யார்­கள் தலை­யிட்டு மதச் சகிப்­புத் தன்­மையை நிலை­நாட்­டு­வ­தில் கவ­னம் செலுத்த வேண்­டும். இல்­லை­யேல் ஊர் இரண்­டு­பட்ட நிலை­வ­ரத்­தால் ஏற்­பட்­டி­ருக்­கும் சூட்­டில் குளிர்­காய்­வ ­தற்­குச் சில தரப்­புக்­கள் தயா­ரா­கவே இருக்­கின்­றன.

You might also like