மன்னார் எலும்புகளும்- பீட்டா புரளியும்

மன்­னார் நக­ரில் சதோச வளா­கம் அமைக்கும் வேலைத்­திட்­டத்­தின் ஆரம்­ப­மாக அந்­தப் பகுதி நிலத்­தைத் தோண்­டி­ய­போது மனித எலும்பு எச்­சங்­கள் தென்­பட்­டன. சட்ட வைத்­திய அதி­காரி சமிந்த ராஜ­பக்ச தலை­மை­யில் அந்­தப் பகு­தியை மேலும் தோண்­டும் பணி­கள் நடந்­தன. மிகப் பெரும் போரும், போரு­டன் ஒன்­றித்­துத் தொடர்ந்து நடந்த இனப் படு­கொ­லை­கள், மனித குலத்­துக்கு எதி­ரான நட­வ­டிக்­கை­கள் என்­பனவற்றின் பின்னணியில் இந்த மனி­தப் புதை­குழி அதிக கவ­னம் பெற்­றது.

காணா­ம­லாக்­கப்­பட்ட, கடத்­தப்­பட்ட சிறு­பான்­மை­யி­னர் பலர் பற்­றிய தக­வல்­கள் தெரி­யா­மல் அவர்­தாம் உற­வு­கள் அவர்­க­ளைத் தேடி அலைந்து கொண்­டி­ருப்­ப­தால் குறித்த மனி­தப் புதை­குழி அது­பற்­றிய சிந்­த­னை­யோடு அனை­வ­ரை­யும் தனது பக்­கம் ஈர்த்தது. ஆனால், அந்த எலும்­பு­களை ஆய்வு செய்த அமெ­ரிக்க நிறு­வ­ன­மான ‘பீட்டா அன­லட்­டிக்’ வெளி­யிட்­டி­ருக்­கும் அந்த எலும்­புக்­கூ­டு­கள் பற்­றிய அறி­விப்பு ஆச்­ச­ரி­யத்­துக்­கு­மேல் ஆச்­ச­ரி­ய­ம­ளித்து நிற்­கி­றது. இலங்கை ஆட்­சி­யா­ளர்­கள் மற்­றும் குற்­ற­மி­ழைத்த தரப்­பு­க­ளின் செல்­வாக்கு – தலை­யீடு எவ்­வ­ளவு தூரம்­வ­ரை­யில் வீரி­யத்­து­டன் செல்­வாக்­குச் செலுத்­தக்­கூ­டி­யது என்­ப­தைச் சுட்டி நிற்­கும் என்­ப­தற்கு இதை உதா­ர­ண­மா­கக் கொள்­ள­வேண்­டும் என்று இந்த விட­யம் பற்றி ஆய்ந்து, விவா­திக்­கின்ற தரப்­பு­கள் விச­னம் வெளி­யிடுகின்றன.

மன்­னா­ரில் கண்­டெ­டுக்­கப்­பட்ட எலும்­பு­க­ளின் மாதிரி அமெ­ரிக்­கா­வின் புளோ­ரி­டா­ வி­லுள்ள பீட்டா ஆய்வு மையத்­துக்கு ‘சி14’ என்­கிற கார்­பன் பரி­சோ­த­னைக்­காக அனுப்பி வைக்­கப்­பட்­டது. அதை ஆய்வு செய்த ‘பீட்டா’ வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யில் இந்த எலும்­புக்­கூ­டு­கள் கி.பி. 1499 ஆம் ஆண்­டி­லி­ருந்து 1719ஆம் ஆண்­டுக்கு இடைப்­பட்ட காலத்­துக்­குள் புதைக்­கப்­பட்­ட­வை­யாக இருக்­க­லாம் என்று கூறப்­பட்­டுள்­ளது.
மூலி­கை­க­ளா­லும், வேதிப் பொருள்­க­ளா­லும், பைப்­பி­ரஸ் எனும் ஒரு­வ­கைச் செடி­யா­லும் பேர்­வை­ய­மைத்து சட­லம் பழு­த­டை­யாத பாது­காப்­புச் சுற்­றுக்­களை மேற்­கொண்டு, இன்­னும் இதர இயற்கை வேலைப்­பா­டு­க­ளை­யும் செய்து இறந்த உடலை மண்­ணுக்­குள் புதைத்த கார­ணத்­தால், பல ஆயி­ரம் வரு­டங்­க­ளா­கி­யும் மக்­கிப்­போ­கா­மல் மீட்­கப்­பட்­டன எகிப்­திய மம்­மி­கள். ஆனால், இங்கோ எந்­த­வித பரா­ம­ரிப்பு, பாது­காப்பு முறை­க­ளு­மில்­லா­மல் வெறு­மனே மண்­ணுக்­குள் புதைக்­கப்­பட்­ட­ வர்­க­ளின் எலும்பு எச்­சங்­கள் எகிப்­திய மம்­மி­க­ளு­டன் போட்டி போடக்­கூ­டிய வகை­யில் பாது­காப்­பாக இருப்­ப­தையே அமெ­ரிக்க ஆய்வு நிறு­வ­ன­மான ‘பீட்டா’ அறிக்­கை­யிட்­டுள்­ளது.

‘பீட்டா’ எழு­திய புது வர­லாறு
போர்த்­துக்­கே­யர் கி.பி. 1505ஆம் ஆண்­டி­லி­ருந்து 1658ஆம் ஆண்டு வரை­யி­லும், ஒல்­லாந்­தர் கி.பி1658ஆம் ஆண்­டி­லி­ருந்து 1796ஆம் ஆண்டு வரை­யி­லும், ஆங்­கி­லே­யர் 1796ஆம் ஆண்டு தொடக்­கம் 1948ஆம் ஆண்டு வரை­யி­லும் இலங்­கையை ஆக்­கி­ர­மித்து வைத்­தி­ருந்­த­னர் என்­பது வர­லாறு. ஆனால் இந்த மன்­னார்ப் புதை­குழி விவ­கா­ரத்­தைப் போர்த்­துக்­கே­யர் இலங்­கைக்கு வரு­வ­தற்கு முன்பே ஆரம்­பித்து விட்­டது ‘பீட்டா’. இதன்­மூ­லம் மேற்­படி ஆக்­கி­ர­மிப்­புக்­கா­ரர்­க­ளுக்கு முன்பே இங்­கி­ருந்த மக்­க­ளுக்­குள் முரண்­பாடு இருந்­த­தா­கப் புது வர­லாற்றை எழு­தி­யுள்­ளது. ஏறத்­தாழ 500ஆண்­டு­கள் மண்­ணில் புதை­யுண்ட எலும்­பு­கள் மக்கிப் போகாமல் இருக்­கின்­றன என்­ப­து­தான் இங்கு ‘பீட்­டா­வின்’ அறிக்கை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்ற பெரிய ஆச்­ச­ரி­யம். இலங்கை அர­சைப் பொறுத்­த­வரை இறந்­த­வர்­கள் எவர் என்று இன்­னும் அடை­யா­ளம் காணப்­ப­டாத நிலை­யில் போர்த்­துக்­கே­யர் மற்­றும் ஒல்­லாந்­தர் இலங்­கையை ஆண்ட காலத்­தில் மேற்­கொண்ட கொலை என இதை அர்த்­தப்­ப­டுத்­து­வது வேடிக்­கை­யா­னதே.

புது வர­லாற்றை எழு­திய ‘பீட்­டா’­வுக்கு
வர­லாறு வழி­யா­கவே பாடம் புகட்­ட­லாம்
மேலை நாட்டு ஆக்­கி­ர­மிப்­பா­ளர்­க­ளின் வரு­கை­யால் மன்­னா­ரில் பல­ரும் கிறிஸ்­தவ மதத்­தைத் தழு­வி­னார்­கள். அவர்­க­ளைத் தண்­டிப்­ப­தற்­கா­கச் சங்­கி­லிய மன்­ன­னின் படை அங்கு சென்­றது. அந்­தப் படைக்கு அஞ்­சிய மதம் மாறிய மக்­கள் எருக்­க­லம்­பிட்­டிக்கு அரு­கி­லுள்ள தோட்­ட­வெளி என்ற பகு­தி­யில் ஒன்று கூடி­னார்­கள். அவர்­க­ளில் பல­ரைச் சங்­கி­லி­யன் படை கழுத்து வெட்­டிக் கொலை செய்­தது. கொன்ற அந்த மக்­க­ளைக் கிறிஸ்­தவ மத நிறு­வ­னம் ‘வேத சாட்­சி­கள்’ என்று புனி­தப்­ப­டுத்­தி­யது.(மதத்­தின் பெய­ரால் சாவ­டைந்த மாவீ­ரர்­கள் அல்­லது புனி­தர்­கள்) இவ்­வாறு கொல்­லப்­பட்­ட­வர்­க­ளின் உட­லம் தோட்ட வெளித் தேவா­ல­யத்­தில் உள்ள கல்­ல­றைக்­குள் அடக்­கம் செய்­யப்­பட்­ட­தா­கக் குறிப்­பு­கள் உண்டு. இது­வும் வர­லாறே.

அந்த எலும்­புக் கூடு­க­ளுக்கு மண்­டை­யோடு இல்­லா­தி­ருக்­கும் ஏன் எனில் அவர்­க­ளின் தலை­யைத்­தானே சங்­கி­லி­யன் படை கொய்­து­விட்­டதே! கொய்த தலை­க­ளைச் சங்­கி­லி­யன் படை வண்­டில்­க­ளில் ஏற்றி வந்து வரும் வழி­யில் வேலி­க­ளில் குற்­றிக் காட்­சிக்கு வைத்­த­தா­கக் குறிப்­புண்டு. இனி­மேல் எவ­ரும் மதம் மாறக்­கூ­டாது அவ்­வாறு மாறி­னால் உங்­க­ளுக்­கும் இது­தான் கதி என்­பதே அதன் மூலம் சங்­கி­லி­யன் படை அன்று உணர்த்­திய செய்தி. சதோச எலும்­புக் கூடு­கள் பற்­றிய பீட்­டா­வின் அறிக்கை போர்த்­துக்­கே­யர் இலங்­கைக்கு வரு­வ­தற்கு முன்­னரே (மதம் மாற்­றம் நிகழ்­வ­தற்கு முன்­னரே) இந்­தக் கொலை­கள் நிகழ்ந்­துள்­ளன என்று அர்த்­தப்­ப­டு­கி­றது. அத்­தோடு கண்­டெ­டுக்­கப்­பட்ட மனித எலும்­புக்­கூ­டு­க­ளில் தலை­க­ளும் உள்­ளன. எனவே இந்த விட­யத்­தைச் சங்­கி­லிய மன்­ன­னின் தலை­யில் கட்­டித் திசை திருப்­பி­விட முடி­யாது.

ஆனால், தலை­க­ளற்ற ‘வேத சாட்­சி­களை’ அகழ்­வின் மூலம்­வெ­ளி­யில் எடுத்­துத் தலை­க­ளுள்ள மன்­னார் – சதோச எலும்­பு­க­ளு­டன் ஒப்­பிட்­டால் ‘பீட்டா’ கூறி­ய­ காலப்பகுதி பற்றிய உண்­மைத்­தன்மை வெளிப்­பட்­டு­வி­டும். ஆனால், வேத சாட்­சி­க­ளுக்கு முன்­ன­தா­கவே மண்­ணுக்­குள் புதைக் கப்­பட்­ட­தா­கப் பீட்டா கூறும் சதோசா எலும்பு எச்­சங்­கள் நல்ல நிலை­யில் இருப்­ப­தைப்­போல அதற்­குப் பிற்­பட்ட காலத்­தில் புதைக்­கப் பட்ட ‘வேத சாட்­சி­க­ளின்’ எலும்பு எச்­சங்­கள் அதி­கப்­ப­டி­யாகவே நல்ல நிலை­யில் இருக்­க­ வேண்­டும்.இதை அறி­வ­தன் மூலம் இந்த இரண்டு எலும்பு எச்­சங்­களை ஆராய்­வ­தற்கு முத­லி­லே இதை அறிந்தால் உண்மை தெரிந்­து­வி­டும் என்­பது உறுதி.

சதோசா விட­யத்­தில் சந்­தே­கங்­கள்
500 வரு­டங்­க­ளுக்கு முற்­பட்ட எலும்பு எச்­சங்­கள் எவ்­வித பாது­காப்பு வழி­மு­றை­க­ளு­மின்றி மண்­ணுக்­குள் மக்­கிப்­போ­கா­மல் இருக்­கின்ற ஆச்­ச­ரி­யம்­போக சதோசா புதை­குழி அகழ்வில் இன் னும்­பல ஆச்­ச­ரி­யங்­களும் கொட்­டிக் கிடக்­கத்­தான் செய்­கின்­றன. அங்கு கண்­டெ­டுக்­கப்­பட்ட எலும்­புக்­கூ­டு­க­ளில் சிலவற்றின் கைகள் கம்­பி­கள், சங்­கி­லி­கள் கொண்டு கட்­டப்­பட்ட நிலை­யில் மீட்­கப்­பட்­ட­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது. இத­னால் குறித்த மனி­தர்­கள் துன்­பு­றுத்­தப்­பட்ட பின்பு கொலை செய்து புதைக்­கப்­பட்­டார் கள் என்று சந்­தே­கிக்­கப்­பட்­டது. இந்த எலும்பு எச்­சங்­களை ஆய்­வுக்­குட்­ப­டுத்­தி­ய­போதே இவை போர்த்­துக்­கே­ய­ரின் காலத்­துக்கு முன்பே புதைக்­கப்­பட்­ட­தா­கக் கூறு­கி­றது பீட்டா. அவ்­வா­றா­யின் இந்த மனி­தர்­க­ளின் கைக­ளைக் கட்­டி­யி­ருந்த இரும்­புச் சங்­கி­லி­கள், கம்­பி­க­ளும் போர்த்­துக்­கே­யர் காலத்­துக்கு முற்­பட்­ட­ வை­யாக இருக்­கின்­றன. இவ்­வாறு போர்த்­துக்­கே­யர் காலத்­துக்கு முற்­பட்ட இந்த இரும்பு உலோ­கங்­கள் இவ்­வ­ளவு காலங்­கள் மண்­ணுக்­குள் புதைந்­தி­ ருந்­தும் உக்­கிப்­போ­கா­தது ஏன்? அத்­தோடு இந்­தப் புதை­கு­ழி­யில் கண்­டெ­டுக்­கப்­பட்­ட­தா­கக் கூறப்­ப­டும் ஆப­ர­ணங்­கள், அணி­க­லன்­கள் தொடர்­பி­லும் விசா­ர­ணை­கள், ஆய்­வு­களை மேற்­கொள்­வ­தன் மூலம் பீட்­டா­வின் போர்த்­துக்­கே­யர் காலத்­துக்கு முன்­பான மனி­தப் புதை­குழி என்­கிற புரளி தகர்க்­கப்­பட வாய்ப்­புண்டு.

சந்­தி­ரிகா மீது குவி­யும்
சந்­தே­கக் கண்­கள்
2002ஆம் ஆண்டு நோர்­வே­யின் தலை­யீட்­டு­டன் சமா­தான ஒப்­பந்­தம் கொண்­டு­வ­ரப்­ப­டு­வ­தற்கு முன்­னர் (சந்­தி­ரிகா அரச தலை­வ­ராக இருந்த காலம்) விடு­த­லைப் புலி­க­ளின் பகு­தி­க­ளுக்­குள் இருந்து மிக­வும் ரக­சி­ய­மா­கத் தமிழ்க் குடும்­பங்­கள் பல மன்­னாரை அண்­மித்த பகு­தி­கள் நோக்கி நகர்ந்­தன. அங்­கி­ருந்து குடும்­பம் குடும்­ப­மா­கப் பட­கு­கள் மூலம் கள­வாக இந்­தியா செல்­வ­தற்கு முற்­பட்­ட­னர். அதில் ஒரு­தொகை மக்­க­ளுக்கே இந்த அவ­லம் நடந்­த­தா­கப் பர­வ­லாக நம்­பப்படு­கி­றது. மன்­னார் பகு­திக்­குள் நுழைந்­த­தன் பின் அவர்­கள் என்ன ஆனார்­கள் என்­பது எவ­ருக்­கும் தெரி­யா­தி­ருந்­தது. அவர்­கள் கடல் மார்க்­க­மாக இந்­தி­யா­வுக்­குச் சென்­று­விட்­ட­தா­கவே நம்­பப்­பட்டு வரு­கி­றது.

புலி­கள் மீது சுமத்­தப்­ப­ட­வி­ருந்த
பழி இது
அறிக்கை வெளி வந்த பின் பல­ருக்கு அதிர்ச்­சி­யாக இருக்­கும் என்று பீட்­டா­வின் இந்­தக் கார்­பன் மதிப்­பீட்டு அறிக்கை முடிவு தொடர்­பில் தமிழ்த்­தே­சி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சுமந்­தி­ரன் ஏற்­க­னவே தெரி­வித்­தி­ருந்­தார். இந்த மனி­தர்­க­ளைப் புலி­கள் கொன்­ற­தாக முடிக்­கப் போகி­றார்­கள் என்றே அடி­மட்­டத் தமி­ழர்­க­ளுக்­குள் பேச்­சா­டல்­கள் உலா­ வின. ஆனால் கொலை செய்­யப்­பட்ட, புதை­கு­ழி­ யுள்ள அந்­தப் பகு­தி­யைப் புலி­கள் ஒரு­போ­தும் தமது கட்­டுப்­பாட்­டுப் பகு­தி­யாக வைத்­தி­ருக்­க­வில்லை என்­ப­தும் புதை குழி­யுள்ள பகு­தி­யில் நிரந்­த­ர­மாக வாழ்ந்த மக்­கள் ஏற்­க­னவே படகு மூலம் இந்­தி­யா­வுக்­குச் சென்­று­விட்­டார்­கள் என்­ப­தும் குறிப்­பி­ டத்­தக்க விட­ய­மாக இருக்­கி­றது.

அர­சின் செல்­வாக்­கும்
அமெ­ரிக்­கா­வின் வர­லா­றும்
தமி­ழ­ருக்­குப் பாதிப்­பாக அர­சி­யல் ரீதி­யில் இலங்கை அரசு எடுத்த யுக்­தி­கள் கார­ண­மா­கவே இந்த அறிக்கை இவ்­வாறு வந்­தி­ருக்­கி­றது என்றே பல­ரா­லும் நம்­பப்­ப­டு­கி­றது. பீட்டா நிறு­வ­னம் பக்­கச் சார்­பாக நடந்­தி­ருக்­கி­றது என்­றும் விமர்­ச­னங்­கள் எழுந்­துள்­ளன. முதன் முத­லில் நீல் ஆம்ஸ்­ரொங் நில­வில் கால் பதித்­த­தாக அமெ­ரிக்கா வெளி­யிட்ட ஒளிப்­ப­டத்­தில் அமெ­ரிக்­கக் கொடி காற்­றில் அவைவது தெளி­வா­கத் தெரிந்­தது. காற்று இல்­லாத பகு­தி­யில் நடப்பட்ட கொடி அசை­வ­தால் அமெ­ரிக்­கா­வின் விண்­வெ­ளி­யா­ளர்­கள் நில­வில் கால் பதித்­தது பொய் என்று வாதிட்­டார்­கள் ஏனைய நாட்டு விஞ்­ஞா­னி­க­ளும் அறி­வி­ய­லா­ளர்­க­ளும். அதைப்போன்­ற­தொரு பொய் விட­யத்­தையே மன்­னார் மனி­தப் புதை­குழி விட­யத்­தி­லும் அமெ­ரிக்க நிறு­வ­ன­மான பீட்டா வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளது.

இந்­தக் கொலை­க­ளைச் செய்து புதைத்­த­வர்­கள் இலங்­கை­யில் எங்கோ ஒரு மூலை­யில் இருந்­த­படி பீட்டா ஆய்­வ­றிக்­கை­யைப் பார்த்­துச் சிரிப்­ப­தும் நிக­ழ­லாம். தமி­ழ­ரில் காபன் பரி­சோ­தனை சார்ந்த துறை­க­ளில் கைதேர்ந்­த­வர்­கள் பலர் உல­கம் முழு­தும் உள்­ள­னர். தமிழ்த் தலை­வர்­கள் நல்­ல­தொரு நடு­நி­லை­யான ஆய்வை மேற்­கொண்டு இந்த மனி­தப் புதை குழி பற்­றிய மர்­மங்­க­ளுக்கு முற்­றுப் புள்ளி வைக்க வேண்­டும். இந்த எலும்­புக்­கூ­டு­க­ளின் விட­யத்­தில் இலங்கை அரசு பொறுப்­பா­கச் செயற்­ப­டும் என்று தமிழ் மக்­கள் எதிர்­பார்க்க முடி­யாது. தாம் வாக்­க­ளித்து நாடா­ளு­மன்­றுக்கு அனுப்­பிய பிர­தி­நி­தி­கள் பொறுப்­புக் கூற வேண்­டும் என்று எதிர்­பார்ப்­பது முறை­யா­னது.

You might also like