மரியா புயலில் சிக்கி- 4600 பேர் உயிரிழப்பு -ஹார்வர்டு பல்கலைக்கழகம் வெளியிட்டது அறிக்கை!!

போர்ட்டோ ரிகோ தீவில் கடந்த செப்ரெம்பர் மாதம் மரியா புயல் தாக்கியதில் 4 ஆயிரத்து 600 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்று ஹார்வர்டு பல்கலைக்கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் சுயாட்சி அதிகாரம் பெற்ற போர்ட்டோ ரிகோ தீவை கடந்த ஆண்டு செப்ரெம்பர் மாதம் மரியா புயல் தாக்கியது. 90 ஆண்டுகளில் இல்லாத வகையில் மிகவும் வலுவான இந்த புயல் தீவை சின்னா பின்னமாக்கியது.

புயல் மற்றும் மழை வெள்ளத்தில் சிக்கி 64 பேர் இறந்தனர் என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், ஹார்வர்டு பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வு முடிவில், புயல் மழையால் இறந்ததாக அரசுத் தரப்பில் கூறிய எண்ணிக்கையை விட 70 மடங்கு அதிகம் எனக் கூறப்பட்டுள்ளது. அதாவது 4600க்கும் மேற்பட்டவர்கள் இறந்திருப்பதாக தெரியவந்துள்ளது.

இவர்களில் மூன்றில் ஒரு பகுதி நபர்கள், மின்சாரம் துண்டிக்கப்பட்டதாலும், சாலைகள் துண்டிக்கப்பட்டதாலும், போதிய மருத்துவ உதவி கிடைக்காமல் இறந்திருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close