மாமுனை கடற்­ப­ரப்­பில்- 233 கிலோ கஞ்சா மீட்பு!!

யாழ்ப்­பா­ணம்,  வட­ம­ராட்சி கிழக்கு மாமு­னைக் கடற்­ப­ரப்­பில் கஞ்­சா­வு­டன் பய­ணித்த பட­கைக் கைப்­பற்­றி­யுள்­ள­தா­கக் கடற்­ப­டை­யி­னர் தெரி­வித்­த­னர். பட­கில் பய­ணித்த மரு­தங்­கே­ணி­யைச் சேர்ந்த இரு­வ­ரைக் கைது செய்­துள்­ள­தா­க­வும் அவர்­கள் கூறி­னர்.

பொலிஸ் போதைத் தடுப்­புப் பிரி­வி­ன­ரும் காங்­கே­சன்­துறை கடற்­ப­டை­யி­ன­ரும் இணைந்து சுற்­றுக் காவல் நட­வ­டிக்­கை­யில் ஈடு­பட்­ட­னர். நேற்று அதி­காலை 2 மணி­ய­ள­வில் மாமு­னைக் கடற்­ப­ரப்­பில் சந்­தே­கத்­துக்கு இட­மான படகை அவ­தா­னித்­த­னர்.

அதனை மடக்­கிச் சோத­னை­யிட்­ட­போது அதி­லி­ருந்து 233 கிலோ கேர­ளக் கஞ்சா மீட்­கப்­பட்­ட­தா­க­வும், அவை 111 பொதி­க­ளில் அடைக்­கப்­பட்­டி­ருந்­த­தா­க­வும் தெரி­வித்த கடற்­ப­டை­யி­னர், பட­கில் பய­ணித்த இரு­வரை சந்­தே­கத்­தில் கைது செய்­துள்­ள­தா­க­வும் குறிப்­பிட்­ட­னர்.

கஞ்­சா­வை­யும், கைதா­ன­வர்­க­ளை­யும் காங்­கே­சன்­து­றைப் பொலிஸ் நிலை­யத்­தில் கடற்­ப­டை­யி­னர் நேற்று மாலை பாரப்­ப­டுத்­தி­னர்.

You might also like