மின்சார சபையால் புதிய செயலி அறிமுகம்!!

இலங்கை மின்சார சபையால் “CEB Care” என்ற மொபைல் அப்ஸ் மின்சார பாவனையாளர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மின்சக்தி, எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சர் ரவி கருநாணாயக்கவின் பங்குபற்றுதலுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள CEB Care மொபைல் அப்ளிகேஷன் மூலம், பாவனையாளர்கள் இலகு வழியில் பல சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பாவனையாளர்கள் மின் தடங்கல்கள் தொடர்பான முறைப்பாடுகளை CEB Care அப்ளிகேஷன் ஊடாக மேற்கொள்வதுடன், மின்சார சபை மேற்கொள்ளும் நடவடிக்கைகளை CEB Care அப்ளிகேஷன் ஊடாக நிகழ்நேரத்தில் அறிந்து கொள்ளலாம்.

மேலும் திட்டமிடப்பட்ட மின் துண்டிப்புகள் தொடர்பான விபரங்கள், மின் பாவனை தொடர்பான விபரங்கள், கட்டணங்கள் மற்றும் கணக்கு நிலுவை தொடர்பான விபரங்கள் போன்றவற்றைப் பாவனையாளர்கள் CEB Care மொபைல் அப்ளிகேஷன் மூலம் இலகுவாக அறிந்து கொள்ளலாம்.

மேலும் CEB Care மொபைல் அப்ளிகேஷன் மூலம் பாவனையாளர்கள் இலகு வழியில் ஒன்லைன் மின் கட்டணங்களையும் செலுத்த முடியும்.

CEB Care மொபைல் அப்ளிகேஷனை பாவனையாளர்கள் தற்போது App Store: http://bit.ly/cebCareLK & Google Play: http://bit.ly/cebCare என்ற link இன் ஊடாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

You might also like