மீண்டும் ஈரநிலம் நந்திதா!!

பிரபல டான்ஸ் மாஸ்டர் சின்னாவின் மகள் ஜெனிபர். சினிமாவில் நடனமாடி வந்த இவரை, பாரதிராஜா தனது ஈரநிலம் படத்தில் நந்திதா என்று பெயரை மாற்றி ஹீரோயின் ஆக்கினார்.

அதன் பிறகு சில படங்களில் ஹீரோயினாக நடித்தாலும் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்காததால் மீண்டும் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார்.

அந்த வாய்ப்புகளும் குறையவே சின்னத்திரை தொடர்களில் நடிக்க ஆரம்பித்தார். இடையிடையே அக்கா அண்ணி பாத்திரங்களில் சினிமாவில் நடித்தார்.

6 ஆண்டுகளுக்கு முன்பு ராவணதேசம் படத்தில் நடித்தார். அது தான் அவரது கடைசி படம்.தற்போது, குடிமகன் என்ற படத்தில் கதையின் நாயகியாக நடித்துள்ளார்.

ஜெய்குமார் என்ற புதுமுகம் ஹீரோ. மாஸ்டர் ஆகாஷ், வீரசமர், பாலாசிங், கிரண் உள்பட பலர் நடித்துள்ளனர். அருள் செல்வன் ஒளிப்பதிவு செய்துள்ளார், எஸ்.எம்.பிரசாந்த் இசை அமைத்துள்ளார். சத்தீஷ்வரன் இயக்கி உள்ளார்.

இது மதுவுக்கு எதிரான படம். குடிப்பவர்கள் நிம்மதியாக உறங்கி விடுகிறார்கள். குடும்பத்தில் உள்ளவர்களுக்கு தான் உறக்கம் போய்விடுகிறது என்கிற கருத்தினை மையமாகக் கொண்டு உருவாகியிருக்கிறது. பெரும் குடிகாரனின் மனைவியாகவும், 8 வயது மகனுக்கு தாயாகவும் நடித்துள்ளார் நந்திதா என்கிற ஜெனிபர்.

You might also like