மீண்டும் மதுபாலா!!

0 324

அழகன் என்ற தமிழ் படத்தில் அறிமுகமானவர் மதுபாலா. அதன் பின்னர் வானமே எல்லை, ரோஜா, ஜென்டில்மேன், இருவர் உள்பட பல படங்களில் நடித்தார்.

தமிழில் குறைவாக நடித்திருந்தாலும் ஹிந்தியில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். நீண்ட இடைவெளிக்குப் பின்னர் வாயை மூடி பேசவும் படத்தில் மீண்டும் நடித்தார்.

தற்போது 4 வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் தமிழுக்கு வருகிறார். அக்னி தேவ் என்ற படத்தில் பாபி சிம்ஹாவுடன் மோதும் டெரர் லேடியாக, சகுந்தலாதேவி என்ற அமைச்சராக நடிக்கிறார்.

இவர்கள் தவிர, ரம்யா நம்பீசன், சதீஷ் உள்பட பலர் நடிக்கிறார்கள். இந்தப் படத்தை ஜான் பால்ராஜ், சாம் சூர்யா இயக்குகிறார்கள். ஜேக்ஸ் பெஜாய் இசை அமைக்கிறார். சியாண்டோ ஸ்டூடியோ மற்றம் ஜெய் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கிறது.

You might also like