முகநூல் பாவனையாளர்களுக்கு எச்சரிக்கை!!

இந்த ஆண்டில் மாத்திரம் சமுக வலைதளங்கள் தொடர்பில் தங்களுக்கு ஆயிரத்து 100 முறைபாடுகளுக்கு மேல் கிடைக்கப்பெற்றுள்ளது என்று கணினி அவசர தயார்நிலை குழு தெரிவித்துள்ளது.

அத்துடன் முக்கியமான 10 வர்த்தகர்களின் மின்னஞ்சல் கணக்குகளை ஊடுருவும் செயற்பாடு குறித்த முறைப்பாடும் கிடைக்கப்பெற்றுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் முகநூல் பாவனையாளர்கள் தங்களது பாதுகாப்பு மற்றும் தனியுரிமை தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றும், குறிப்பாக தங்களது படங்களை தரவேற்றும் போது அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, படங்களை தரவேற்றும் போது நண்பர்கள் மாத்திரம் பார்க்கக்கூடிய வகையில் தனியுரிமையை வகைப்படுத்துவது சிறந்தது என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close