முச்சக்கர வண்டி சாரதி மீது தாக்குதல் – சி.சி.ரி.வி. கமராவில் சம்பவம் பதிவு!!

முச்சக்கரவண்டி சாரதி மீது மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞன் ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் இருந்த சி.சி.ரி.வி. கமராவில் பதிவாகியுள்ளது.

வவுனியா பட்டானிச்சூர் பகுதியில் நேற்று மாலை சம்பவம் நடந்துள்ளது.

வவுனியா புதிய பேருந்து நிலையத்திலிருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு பட்டானிச்சூர் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கரவண்டியை, பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞன், முச்சக்கரவண்டி சாரதியை வழிமறித்து தாக்குதல் நடத்தியுள்ளார்.

தாக்குதலுக்குள்ளான முச்சக்கரவண்டி சாரதி வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு தெரிவித்துள்ளார்.

வவுனியா பொலிஸார் சி.சி.ரி.வி கமரா உதவியுடன் தாக்குதல் மேற்கொண்ட நபரை கைது செய்வதற்குரிய நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like