side Add

முத­லில் தன் கட்­சிக்­குள் ரணில் ஜன­நா­ய­கத்தைக் காக்­கட்­டும்

இப்­படி எகி­று­கி­றார் அரச தலை­வர்

25 ஆண்­டு­க­ளாக ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் தலை­வ­ரா­கச் செயற்­ப­டும் ரணில் அதன் பின்­வ­ரிசை உறுப்­பி­னர்­கள் முன்­னேற இட­ம­ளிக்­க­வில்லை. நாட்­டின் சட்­டம், ஜன­நா­ய­கம் தொடர்­பில் கருத்­துத் தெரி­விக்­கும் அவர், முத­லில் தனது கட்­சிக்­குள் ஜன­நா­ய­கத்தை ஏற்­ப­டுத்த வேண்­டும். இவ்­வாறு அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­துள்­ளார்.

அரச தலை­வர் செய­ல­கத்­தில் நேற்று இடம்­பெற்ற கலந்­து­ரை­யா­ட­லின்­போதே அவர் மேற்­கண்­ட­வாறு கூறி­யுள்­ள­தாக, அரச தலை­வர் ஊட­கப் பிரிவு அனுப்பி வைத்­துள்ள செய்­திக் குறிப்­பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

ஊடக அறிக்­கை­யில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

நாட்­டின் தற்­போ­தைய அர­சி­யல் அமை­தி­யின்­மையை ஒரு பிரச்­சி­னை­யா­கக் கரு­தாது பொது­மக்­க­ளுக்­கான சேவை­க­ளை­யும் அபி­வி­ருத்தி செயற்­திட்­டங்­க­ளை­யும் தொடர்ச்­சி­யாக முன்­னெ­டுத்­துச் செல்ல அதி­கா­ரி­கள் அர்ப்­ப­ணிப்­பு­டன் செயற்­பட வேண்­டும்.
மக்­க­ளின் நலன்­க­ருதி அரச தலை­வர் செய­ல­கத்­தின் கீழ் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள சகல கருத்­திட்­டங்­க­ளும் 2019ஆம் ஆண்­டில் புதிய உத்­வே­கத்­து­ட­னும் வலு­வு­ட­னும் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டு­வ­தற்­கான திட்­டங்­க­ளைத் தயா­ரிக்க வேண்­டும்.

வறு­மையை இல்­லா­தொ­ழிப்­ப­தற்­காக அரச தலை­வர் செய­ல­கத்­தின் கீழ் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள கிரா­ம­சக்தி மக்­கள் இயக்­கத்­தின் செயற்­பா­டு­க­ளை­யும் எதிர்­வ­ரும் வரு­டம் வலு­வு­டன் நடை­மு­றைப்­ப­டுத்­த­வேண்­டும். மாவட்ட மட்­டத்­தில் நிய­மிக்­கப்­பட்­டுள்ள கிரா­ம­சக்தி ஒருங்­கி­ணைப்­பா­ளர்­கள் தமது கட­மை­களை உரி­ய­வாறு நிறை­வேற்­ற­வேண்­டும்.

கடந்த மூன்­றரை வருட கால­மாக உரி­ய­வாறு கவ­னம் செலுத்­தப்­ப­டாத வடக்கு, கிழக்கு மக்­க­ளின் அபி­வி­ருத்தி தேவை­களை நிறை­வேற்­று­வ­தற்கு நிய­மிக்­கப்­பட்ட வடக்கு, கிழக்கு அபி­வி­ருத்­திக்­கான செய­லணி குறிப்­பி­டத்­தக்க வகை­யில் செயற்­பா­டு­களை நிறை­வேற்றி வரு­கின்­றது – என்­றார்.

இந்­தச் சந்­திப்­பில் அர­சி­யல் நிலமை தொடர்­பில் கருத்­துத் தெரி­வித்த மைத்­தி­ரி­பால, நமது கட்­சிக்­குள் இல்­லாத ஜன­நா­ய­கத்தை நாட்­டில் ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான ஆற்­றல் ரணி­லுக்கு இல்லை – என்­றார்.

You might also like