side Add

முன்னோடிப் பத்திரிகையாளர்- எஸ்.எம்.கோபாலரத்தினம்!!

கோபு, எஸ்.எம்.ஜி என்று ஒரு காலத்­தில் தமிழ்ப் பத்­தி­ரி­கை­யு­ல­கில் பிர­ப­ல­முற்­றி­ருந்த எஸ்.எம்.கோபா­ல­ரத்­தி­னம் அம­ர­ராகி ஒரு வரு­டம் பூர்த்­தி­யா­கி­விட்­டது. யாழ்ப்­பா­ணத்­தில் தமிழ் நாளேடு ஒன்றை வெற்­றி­க­ர­மாக நடத்­த­மு­டி­யாது என்­றி­ருந்த நில­மையை மாற்றி அதை ஒரு சவா­லாக ஏற்­றுப் பணி­பு­ரிந்து வெற்றி கண்­ட­வர்­க­ளில் ஒரு­வர் அம­ரர் கோபா­ல­ரத்­தி­னம். யாழ்ப்­பா­ணம் – வண்­ணார்­பண்­ணை­யில் பிறந்து, வளர்ந்து வைத்­தீஸ்­வர வித்­தி­யா­ல­யத்­தில் கல்வி கற்ற அவர் சிறு­வ­ய­தி­லேயே பெற்­றா­ரின் அர­வ­ணைப்பை இழந்­த­மை­யால் ஆசி­ரி­யர் சீனி­வா­ச­கத்­தின் பெறா­ம­க­னா­கப் பரா­ம­ரிக்­கப்­பட்­டார்.

அவ­ரு­டைய பெற்­றோ­ரின் பூர்­வீ­கம் கிழக்­கி­ லங்­கை­யைச் சார்ந்­தது. இளம் வய­தி­லேயே காதல் வயப்­பட்டு, அதில் ஏற்­பட்ட தோல்­வி­யால் விரக்­தி­யுற்­றுக் கிழக்­கி­லங்­கைக்­குச் சென்­றார். அங்­கும் வெகு­கா­லம் தரிக்­கா­மல் கொழும்பு சென்­றார். கொழும்­பில் சில நண்­பர்­க­ளின் உத­வி­யால் வீர­கே­ச­ரிப் பத்­தி­ரி­கை­யில் ஒப்­பு­நோக்­கு­ந­ரா­னார். அந்­தப் பத­வி­லி­ருந்­த­ப­டியே தன்னை மேன்­மைப்­ப­டுத்­திக் கொண்டு ஆசி­ரி­யர் பீடத்­தி­லும் இடம்­பி­டித்­தார்.

பத்­தி­ரி­கைப் பணி­யில் ஒளிர்ந்­தார்
வீர­கே­ச­ரிப் பத்­தி­ரி­கை­யில் அப்­போது பணி­யாற்­றி­வந்த பட்­ட­தா­ரி­க­ளும், அனு­ப­வ­சா­லி­க­ளும் பொறாமை கொள்­ளும் வகை­யில் ஆசி­ரி­யர் பீடத்­தில் தன்­னு­டைய திற­மை­களை வெளிப்­ப­டுத்­தி­னார் கோபா­ல­ரத்­தி­னம். அவ­ரது ஆக்­கங்­கள் பத்­தி­ரி­கை­யைப் பிர­கா­ச­மு­றச் செய்­தன. சம காலத்­தில் அந்­தப் பத்­தி­ரி­கை­யின் விளை­யாட்­டுத்­துறை நிரு­ப­ரா­க­வி­ருந்த டி றோஸ் என்­ப­வ­ரின் இளைய சகோ­த­ரி­யைக் காத­லித்­துக் கைபி­டித்­தார். மூன்று ஆண்­க­ளும், இரண்டு பெண்­க­ளு­ மாக ஐந்து பிள்­ளை­க­ளைக் குடும்­ப­வாழ்­வின் பய­னா­கப் பெற்­றெ­டுத்­தார்­கள்.

வீர­கே­ச­ரி­யில் ஏற்­பட்ட தொழி­லா­ளர் பிரச்­சி­னை­யா­னது வேலை நிறுத்­த­மா­க­வும் கத­வ­டைப்­பா­க­வும் தீவி­ர­ம­டைந்­தி­ருந்த கால­கட்­டத்­தில் யாழ்ப்­பா­ணத்­தில் கே.சி.தங்­க­ராசா சகோ­த­ரர்­க­ளால் ஆரம்­பிக்­கப்­பட்ட ஈழ­நாடு பத்­தி­ரி­கை­யில் செய்தி ஆசி­ரி­ய­ரா­கக் கோபு வந்து இணைந்­தார். முதன்மை நிர்­வாக ஆசி­ரி­ய­ரா­கக் கே.பி.ஹர­னும் ஆசி­ரி­ய­ராக ராஜ­அ­ரி­ய­ரத்­தி­ன­மும் பொறுப்­பேற்­றி­ருந்­தார்­கள். வீர­கே­ச­ரி­யி­லி­ருந்து டி.எம்.முரு­கையா, எஸ்.பெரு­மாள், எஸ்.சபா­ரத்­தி­னம் ஆகி­யோர் கோபு­வு­டன் ஆசி­ரி­யர் பீடத்­தில் இணைந்­தி­ருந்­தார்­கள்.

ஈழ­நாடு பத்­தி­ரி­கை­யில் கோபு
தமிழ் அர­சுக் கட்­சி­யின் உரி­மைப் போராட்­டம் தீவி­ர­ம­டைந்து, அறவழி போன்ற நிகழ்­வு­கள் விரி­வ­டைந்­த­போது ஈழ­நாடு பத்­தி­ரி­கை­யின் பணி­கள் மும்­மு­ர­ம­டைந்­தன. அதில் கோபு­வின் பங்­கைக் குறைத்து மதிப்­பிட்­டு­விட முடி­யாது. இரவு பக­லாக ஓய்­வின்றி உழைத்­தார். அதன் கார­ண­மாக வாரப் பத்­தி­ரி­கை­யா­க­வி­ருந்த ஈழ­நாடு வாரம் இரண்டு என வெளி­வந்து நாளே­டாக மட்­டு­மல்ல தின­மும் இரண்டு பதிப்­பு­கள் வெளி­வ­ரு­வ­தா­க­வும் பரி­ண­மித்­தது. கோபு­வின் வாழ்க்கை பெரும் போராட்­ட­மா­கவே ஆரம்­பம் முதல் இருந்­துள்­ளது. அவை பற்றி விரி­வா­கக் குறிப்­பிட இது சந்­தர்ப்­ப­மன்று. ஈழ­நாடு நிர்­வாக மாற்­றங்­க­ளை­ய­டுத்து ஏற்­பட்ட முரண்­பா­டு­க­ளால் ஈழ­நா­டு­வில் இருந்து கோபு விலக நேர்ந்­தது. அதன் பின் பல பத்­தி­ரி­கை­க­ளில் அவர் பணி­யாற்­றி­னார்.

விடு­த­லைப் புலி­க­ளின் பத்­தி­ரிகை ஆசி­ரி­ய­ராக
இந்­திய இரா­ணு­வப் படை­கள் இலங்கை வந்­த­போது தமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளின் பத்­தி­ரிகை ஒன்­றில் பொறுப்­பா­சி­ரி­ய­ரா­க­வி­ருந்­தார் கோபு. அந்­தப் பத்­தி­ரி­கையை இந்­தி­யப் படை­கள் தடை செய்து கெடு­பி­டி­களை முன்­னெ­டுத்­த­போது தலை­ம­றை­வாகி அந்­தப் பத்­தி­ரி­கை­யில் சில பதிப்­புக்­களை வெளி­யிட்­டார். கோபு­வின் துணிச்­சல் இவ்­வாறு பல சந்­தர்ப்­பங்­க­ளில் வெளி­வந்­தி­ருந்­தது. இந்­தி­யப் படை­க­ளால் பின்­னர் அவர் கைது செய்­யப்­பட்டு இரண்டு மாத காலம் தடுப்­புக்­கா­வ­லில் வைக்­கப்­பட்­டி­ருந்­தார். காவ­லில் இருந்து வெளி­வந்­த­தன் பின்­னர் ஈழ­மண்­ணில் இந்­தி­யச் சிறை என்­ப­தா­கக் கட்­டுரை எழுதி அதை நூலாக வெளி­யிட்­டார்.

கோபு பத்­தி­ரி­கை­யா­ளர் மாத்­தி­ர­மல்ல
கோபு வெறும் பத்­தி­ரி­கை­யா­ள­ராக மட்­டும் இருந்­து­வி­டல்லை. சமூக நீதிக்­கா­க­வும், பின்­தங்­கிய சமூ­கங்­க­ளின் முன்­னேற்­றத்­துக்­கா­க­வும் பெரி­தும் பாடு­பட்­டார். களத்­தில் இறங்­கிச் செயற்­பட்­டார் என்று கூறு­வது பொருந்­தாது, தான் சார்ந்­தி­ருந்த பத்­தி­ரி­கை­கள் மூலம் இந்­தப் பணி­களை முன்­னெ­டுத்­தார் என்­பதே பொருந்­தும். கட்­டு­ரை­க­ளா­க­வும் படங்­க­ளா­க­வும் ஆசி­ரிய தலை­யங்­க­ளா­க­வும் அவ­ரு­டைய இந்­தப் பணி வெளிப்­பட்­டது. அப்­போது செயற்­பட்ட அனைத்து அர­சி­யல் கட்­சி­க­ளி­லும் அவ­ருக்கு நெருங்­கிய நண்­பர்­கள் இருந்­தார்­கள்.

அதே­ச­ம­யம் பகை­வர்­க­ளும் இருந்­தார்­கள். பொது­நிலை பத்­தி­ரி­கை­யா­ளர்­கள் அனை­வ­ருமே எதிர்­கொள்­ளும் ஒரு நில­மை­தான் இது. கோபா­ல­ரத்­தி­னத்­தின் தனிப்­பட்ட வாழ்க்­கை­யா­னது எவ­ருக்­கும் முன்­மா­தி­ரி­யாக இருந்­தது என்று சொல்­வது சரி­யாக இருக்­கும் என்று கொள்ள முடி­யாது. ஆனால் பத்­தி­ரி­கைத் துறை­யில் அவர் பய­ணித்த கர­டு­மு­ர­டான பாதை வள­ரும் பத்­தி­ரி­கை­யா­ளர்­க­ளுக்கு நல்ல முன்­மா­தி ரி­யா­கவே இருந்­துள்­ளது. அவ­ரால் பயிற்­று­விக்­கப்­பட்ட பத்­தி­ரி­கை­யா­ளர்­கள் பலர் உள்­நாட்­டி­லும் வெளி­நா­டு­க­ளி­லும் ஊட­கத் துறை­க­ளில் பணி­யாற்­றி­வ­ரு­கின்­றார்­கள்.

You might also like