side Add

முல்­லைத்­தீவு செல்­வ­பு­ரத்­தில் வீடு­க­ளுக்­குள் மழை­வெள்­ளம்

மிக­வி­ரை­வில் நிலமை சீர்­செய்­யப்­ப­டும் என்று கரை­து­றைப்­பற்று பிர­தேச செய­லர் தெரி­விப்பு

அதி­க­ரித்த மழை கார­ணமாக முல்­லைத்­தீவு, – செல்­வ­பு­ரம் பகு­தி­யில் வீட்டுக் காணிகளுக்குள் மழை­வெள்­ளம் தேங்கி நிற்­கி­றது. இதனால் சுமார் நூற்­றுக்­கும் மேற்­பட்ட குடும்­பங்­கள் பாதிக்­கப்­பட்­டுள்­ளன என்று அந்­தப் பகுதி மக்­கள் குற்­றஞ்­சாட்­டு­கின்­ற­னர்.

2004ஆம் ஆண்டு ஏற்­பட்ட ஆழிப்பேரலை இட­ரின் பின்­னர் செல்­வ­பு­ரம் கடற்­க­ரைப் பக்­கம் உள்ள காணி­க­ளில் மழை­வெள்­ளம் வடிந்து செல்­ல­மு­டி­யாத நிலை காணப்­ப­டு­கின்­றது. இது தொடர்­பில் கடந்த காலங்­க­ளில் அரச அதி­கா­ரி­க­ளுக்கு எடுத்­துக்­கூ­றி­யும் எது­வித நட­வ­டிக்­கை­யும் எடுக்­க­வில்லை என்று அந்­தப் பகுதி மக்­கள் மேலும் தெரி­விக்­கின்­ற­னர்.
இது­தொ­டர்­பில் முல்­லைத்­தீவு மாவட்ட இடர் முகா­மைத்­துவ நிலை­யத்­தைத் தொடர்பு கொண்டு கேட்­ட­போது, ‘‘மக்­க­ளின் வாழ்­வி­டங்­க­ளில் தேங்­கி­யுள்ள வெள்­ளம் வழிந்­தோட முடி­யாத நிலை­யில் காணப்­ப­டு­கின்­றது. வாய்க்­கால் வெட்டி வெள்­ளத்தை வழிந்­தோ­டக்­கூ­டி­ய­வாறு செய்­வ­தற்கு ஒழுங்­கு­கள் செய்­யப்­பட்­டுள்­ளன’’ என்று தெரி­விக்­கப்­பட்­டது.

இது­தொ­டர்­பில் கரை­து­றைப்­பற்று பிர­தேச சபைத் தவி­சா­ள­ரி­டம் கேட்­ட­போது, ‘‘குறித்த பகு­திக்குச் சென்று நேர­டி­யாக நில­மை­களை ஆராய்ந்­துள்­ள­து­டன் மக்­களின் வாழ்­வி­டங்­க­ளில் உள்ள வெள்ள நீர் வழிந்தோடக்­கூ­டிய வகை­யி­லான செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்­க­வுள்­ளோம்’’ – என்று தெரி­வித்­தார்.

 

You might also like