side Add

முல்லைத்தீவில்- இரு நாள்களில் – 20 க்கும் மேற்­பட்ட விபத்­துக்­கள்!!

முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் வர­லாற்­றுச் சிறப்­பு­மிக்க வற்­றாப்­பளை அம்­மன் ஆலய பொங்­கல் நிகழ்வு கடந்த 28ஆம் திகதி நடை­பெற்­றது. அதனை முன்­னிட்டு கடந்த 28, 29ஆம் திக­தி­க­ளில் ஆல­யத்­துக்­குச் சென்று திரும்­பி­ய­தில் 20இற்கும் மேற்­பட்ட விபத்­துக்­கள் இடம்­பெற்று காய­ம­டைந்த பலர் மாவட்ட மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்­சைக்­காக சேர்க்­கப்­பட்­டுள்­ளார்­கள்.

பொங்­க­லுக்­காக பல ஆயி­ரக்­க­ணக்­கான மக்­கள் நாட்­டின் பல பகு­தி­க­ளி­லும் இருந்து வருகை தந்­த­னர்.

குறிப்­பாக முல்­லைத்­தீவு புதுக்­கு­டி­யி ருப்பு வீதி, முள்­ளி­ய­வளை –மாங்­கு­ளம் வீதி மற்­றும் ஆல­யத்­துக்­குச் செல்­லும் வீதி­க­ளில் வாகன நெரி­சல் மற்­றும் அதி­வேக பய­ணம், வீதி போக்­கு­வ­ரத்து விதி­களை கடைப்­பி­டிக்­காமை போன்ற கார­ணங்­க­ளால் விபத்­துக்கள் இடம்­பெற்­றுள்­ளன என்று புதுக்­கு­டி­யி­ருப்புப் பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

You might also like
X