முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை வடக்கு மாகாண சபை நடத்தும்

முள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­தலை வழமைபோன்று வடக்கு மாகாண சபையை இம்முறையும் நடத்தும். கள ஏற்பாடுகளை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொள்ளவுள்ளனர் என்று கூறப்பட்டது.

நடத்­து­வது தொடர்­பில் வடக்கு மாகாண சபை­யி­ன­ருக்­கும், யாழ்ப்­பாண பல்­க­லைக் கழக மாண­வர் ஒன்­றி­யத்­தி­ன­ருக்­கும் இடை­யில் நேற்று இடம்­பெற்ற பேச்­சுக்­க­ளில் இணக்­கப்­பாடு எட்­டப்­ப­ட­வில்லை.

இதனடிப்படையில் முள்­ளி­வாய்க்­கால் மண்­ணில் இன்று மீண்­டும் கலந்­து­ரை­யா­டல் இடம்­பெற்றது. அதில் பல்கலைக்கழக டாணவர்கள் பங்குபற்றவில்லை.

முள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­தலை கடந்த மூன்று ஆண்­டு­க­ளாக வடக்கு மாகாண சபை முன்­னெ­டுத்து வந்த நிலை­யில், யாழ்ப்­பாண பல்­க­லைக்­க­ழக மாண­வர்­கள் தாம் அதனை முன்­னெ­டுக்­கப் போவ­தாக அறி­வித்­தி­ருந்­த­னர். இத­னால் சர்ச்சை ஏற்­பட்­டி­ருந்­தது.

இந்த நிலை­யில், யாழ்ப்­பாண பல்­க­லைக்­க­ழக மாண­வர் ஒன்­றி­யத்­தி­ன­ருக்­கும், வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் தலை­மை­யி­லான குழு­வி­ன­ருக்­கும் இடை­யில் நேற்று சந்­திப்பு நடை­பெற்­றது.

யாழ்ப்­பாண பல்­க­லைக்­க­ழக மாண­வர்­கள், முள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­தல் தொடர்­பில் தாம் தயா­ரித்­துள்ள நிகழ்சி நிரலை நடை­மு­றைப்­ப­டுத்த வேண்­டும் என்­பதை ஆரம்­பத்­தி­லி­ருந்து இறுதி வரை­யில் கூட்­டத்­தில் வற்­பு­றுத்­தி­யுள்­ள­னர்.

வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் அதனை ஏற்­றுக் கொள்­ள­வில்லை. பல்­க­லைக்­க­ழக மாண­வர்­கள் இவ்­வாறு செயற்­ப­டு­வது, தங்­க­ளின் நிகழ்சி நிர­லில் நாங்­கள் செயற்­பட வேண்­டும் என்­ப­தைப் போல் உள்­ள­தா­கக் குறிப்­பிட்­டுள்­ளார்.

வடக்கு மாகாண சபை முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்­த­லுக்­காக குழு அமைத்­துள்­ள­து­டன், அது ஒரு நிகழ்சி நிர­லை­யும் தயா­ரித்­துள்­ளது. அத­ன­டிப்­ப­டை­யி­லேயே நினை­வேந்­தல் இடம்­பெ­றும் என்று குறிப்­பிட்­டுள்­ளார். இத­னால் இரண்டு தரப்­பி­னர் இடை­யே­யும் இணக்­கப்­பாடு எட்­டப்­ப­ட­வில்லை.

முள்­ளி­வாய்க்­கால் மண்­ணில், வடக்கு மாகாண சபை­யின் நினை­வேந்­தல் குழு­வின் கூட்­டம் இன்று நடை­பெ­ற்றது. கூட்­டத்­தில் நினை­வேந்­தலை நடத்­து­வ­தற்­கு­ரிய பொறுப்­புக்­கள் பகிர்ந்­த­ளிக்­கப்­ப­ட்டது.

Shares
  • Facebook
  • Twitter
  • Google+
Shares
  • Facebook
  • Twitter
  • Google+

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close