மெல்ல மெல்ல நகரும்சீனாவும்- துள்ளிக் குதிக்கும் மேற்கும்!!

கடந்த வெள்ளிக் கிழமை நள்­ளி­ரவில் இலங்­கை­யின் நாடா­ளு­மன்­றம் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வால் வர்த்­த­மானி அறி­வித்­தல் மூலம் கலைக்­கப்­பட்­டது. ரணில் விக்­கி­ர­ம­ சிங்­க­வைத் தலைமை அமைச்­சர் பத­வி­யி­லி­ருந்து நீக்கி மகிந்த ராஜ­பக்­சவை நிய­மித்­த­தால் ஏற்­க­னவே ஆரம்­ப­மான அர­சி­யல் குழப்­ப­ நிலை நீடித்­த­போ­தும் எதை­யும் பொருட்­ப­டுத்­தா­மலே அரச தலை­வர் புதிய அமைச்­ச­ர­வையை உரு­வாக்­கு­வ­தில் கவ­னம் செலுத்­தி­னார். அவ­ருடைய மேற்­படி நட­வ­டிக்­கை­கள் தொடர்­பாக உள்­நாட்­டிலும் வெளி நாட்­டிலும் ஆத­ர­வா­க­வும் எதி­ரா­க­வும் பல்­வேறு கருத்­துக்­கள் வெளியி­டப்­பட்­டன. குறிப்­பாக அமெ­ரிக்கா, ஐரோப்­பிய ஒன்­றி­யம், பிரிட்­டன் ஆகி­யவை பகி­ரங்­க­மா­கவே தமது கண்­ட­னங்­களை வெளியிட்­டி­ருந்­தன. அப்­ப­டி­யான ஒரு நில­மை­யி­லும் அரச தலை­வர் அதி­ர­டி­யாக நாடா­ளு­மன்­றத்­தைக் கலைத்­தார்.

கலைப்புக்கு எதிராகக் குரல்கள்
நாடாளுமன்றத்தைக் கலைத்தமைக்கு எதிராகத் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு, மக்­கள் விடு­தலை முன்­னணி, சிறிலங்கா முஸ்­லிம் காங்­கி­ரஸ், அகில இலங்கை மக்­கள் காங்­கி­ரஸ், தமிழ் முற்­போக்கு முன்­னணி உட்­ப­டப் பல அமைப்­பு­க­ளும் தேர்­தல் ஆணைக்­கு­ழு­வின் உறுப்­பி­னர் ரஜீ­வன் கூல் உட்­படத் தனி­ந­பர்­க­ளும் குரல் கொடுத்தனர். நாடா­ளு­மன்­றம் கலைக்­கப்­பட்­ட­மையை நீக்கம் செய்­யும்­படி கோரிக் கடந்த திங்­க­ளன்ற உயிர்­நீ­தி­மன்­றில் மனுத்­தாக்­கல் செய்­தி­ருந்­த­னர். செவ்­வா­யன்று நாடா­ளு­மன்­றம் கலைக்­கப்­பட்­ட­மைக்கு எதிர்­வ­ரும் 7ஆம் திகதி வரை இடைக்­கா­லத்­தடை விதித்து உயர் நீதி­மன்­றம் தீர்ப்பு வழங்­கி­யுள்­ளது.

அரசமைப்பின்
மொழியாக்கங்களில் முரண்நிலை
எந்த ஒரு பிரச்­சி­னைக்­கும் அதன் அடிப்­ப­டை­யி­லேயே முடி­வெ­டுக்­கும் வகையில் உரு வாக்கப்பட்ட அர­ச ஆவ­ண­மாக அர­ச­மைப்­புச் சட்­டத்­தின் சில விதி­கள் சிங்­க­ள மொழியில் ஒரு மாதி­ரி­யா­க­வும் தமிழ், ஆங்­கி­லம் ஆகிய மொழிகளில் வேறு மாதி­ரி­யா­க­வும் அர்த்­தம் கொள்­ளப்­ப­டக் கூடி­ய­ளவு பல­வீ­ன­மா­க இருக்கின்றன என்­ப­தும் ஒரு விதி இன்­னொரு விதிக்கு முர­ணாக முன்­வைக்­கப்­படக்­ கூ­டி­ய­தா­க அ­மைந்­துள்­ளது என்­ப­தும் மேற்­படி வாதப் பிர­தி­ வா­தங்­க­ளின் மூலம் வெளித் தெரிய வந்­துள்­ளது. இனி நடை­மு­றைக்­குக் கொண்டு வர உத்­தே­சிக்­கப்­பட்­டி­ருந்த புதிய அர­ச­மைப்­பி­லும் எக்­கிய ராஜ்ய, ஒரு­மித்த நாடு என்ற சொற்­கள் சிங்­க­ளத்­தி­லும் தமி­ழி­லும் வெவ்வேறு அர்த்­தங்கள் கொண்­டிருக்கின்றன என்­ப­தும் சுட்­டிக் காட்டப்­ப­டு­கி­றது.

வெளிநாட்டுத் தலையீடுகள்
அரச தலை­வ­ரின் நட­வ­டிக்­கை­கள் உள்­நாட்­டில் இப்­ப­டி­யான குழப்­பங்­களை ஏற்­ப­டுத்­தி­ய­மை­யும் உயர்­நீ­தி­மன்­றத்தை நாட வேண்­டிய நிலை ஏற்­பட்­ட­மை­யும் ஒரு புற­மி­ருக்க இந்த நில­மை­கள் குறித்து வெளிநா­டு­கள் தீவி­ர­மான அக்­கறை காட்­டி­ய­மை­யையும், மிரட்­டல்­கள் விடுத்­த­மை யையும் அலட்­சி­யப்­ப­டுத்­தி­விட முடி­யாது. ரணில் தலைமை அமைச்­சர் பத­வி­யி­லி­ருந்து விலக்­கப்­பட்­ட­வு­ட­னேயே ஐரோப்­பிய ஒன்­றி­யம், பிரிட்­டன், அமெ­ரிக்கா ஆகிய நாடு­கள் தங்­கள் அதி­ருப்­தியை வெளியிட்­டன. அது­மட்­டு­மன்றி ஐரோப்­பிய ஒன்­றி­யப் பிர­தி­நி­தி­கள் அரச தலை­வர்,

எதிர்க்­கட்­சித் தலை­வர் உட்­ப­டச் சில தரப்­பி­ன­ரு­டன் பேச்­சுக்­களை நடத்­தி­னர். இந்­தியா இது இலங்­கை­யின் உள்­நாட்டு விவ­கா­ர­ம் எ­ன­வும் அதைத் தாங்­கள் மிக­வும் கூர்­மை­யாக அவ­தா­னித்து வரு­வ­தா­கககவும் குறிப்­பிட்டிருக்கின்ற அதே­வே­ளை­யில் மூன்று இந்­தி­யக் குழுக்­கள் கொழும்­பில் நின்று சில முயற்­சி­க­ளில் ஈடு­பட்டு வரு­வ­தா­கச் செய்­தி­கள் கசிந்­துள்­ளன. அதே­நே­ரத்­தில் பெருந்­தெ­ருக்­கள் அபி­வி­ருத்­திக்­கென அமெ­ரிக்­கா­வால் வழங்­கப்­பட ஒப்­புக் கொள்­ளப்­பட்ட 500 மில்­லி­யன் டொலர் உத­வி­யும் தொட­ருந்து சேவை­கள் அபி­வி­ருத்­திக்கு ஜப்­பா­னால் வழங்­கப்­ப­ட­வுள்ள 1.4 மில்­லி­யன் டொலர் நிதி­யு­த­வி­யும் இடை­நி­றுத்­தப்­பட்­டுள்­ள­தாக உறு­திப்­ப­டுத்­தப்­ப­டாத செய்­தி­கள் வெளிவந்­தன.

ஆனால் நாடா­ளு­மன்­றம் கலைக்­கப்­பட்ட அடுத்த நாள் அரச தலை­வ­ருக்கு அமெ­ரிக்கா அனுப்­பி­யுள்ள கடி­தத்­தில் மீண்­டும் நாடா­ளு­மன்­றத்­தைக் கூட்டி ஜன­நா­யக வழி­மு­றை­க­ளைக் கடைப்­பி­டிக்­கும் படி­யும் அப்­ப­டிச் செய்­யா­வி­டில் எம்.சி.சி. உத­வித்­திட்­டம் உட்­பட அமெ­ரிக்­கா­வி­னு­டைய ஏனைய உத­வி­கள் நிறுத்­தப்­ப­டும் எ­ன­வும் வெளி நாட்டு முத­லீ­டு­கள் இல்­லா­மல் போகும் நிலை ஏற்­ப­டும் எ­ன­வும் தெரி­வித்­துள்­ளது. ஐேராப்­பிய ஒன்­றி­ய­மும் ‘ஜீ.எஸ்.பி.பிளஸ்’ வரிச்­ச­லு­கை­களைத் தொடர்­வதா இல்­லையா? என்­ப­தைத் தீர்­மா ­னிப்பதற்காக இலங்­கைக்கு ஒரு குழுவை அனுப்­ப­வுள்­ள­தா­கத் தெரி­கி­றது. இவ்­வாறு மேற்கு நாடு­கள், இந்­தியா, ஜப்­பான் என்­பன ஒரே நோக்­கத்­துக்­காக வெவ்வேறு வடி­வங்­க­ளில் கள­மி­றங்­கிச் செயற்­பட்டு வரு­கின்­ற­ன.

சீனாவும் மகிந்தவும்
சீனா­வும் தனது நட­வ­டிக்­கை­களை எந்த வித ஆர்ப்­பாட்­ட­மு­மின்றி இந்த விட­யத்­தில் அக்­க­றையே காட்­டாத மாதிரி மிக அமை­தி­யா­கவே மேற்­கொண்டு வரு­வ­தா­கத் தோன்­று­கி­றது. மகிந்த ராஜ­பக்ச தலைமை அமைச்­ச­ரா­கத் தெரிவு செய்­யப்­பட்­ட­வு­ட­னேயே சீனத் தூது­வர் நேர­டி­யாக அவ­ரி­டம் சென்று தனது வாழ்த்­துக்­க­ளைத் தெரி­வித்­தார். மகிந்­த­வுக்கு முதல் வாழ்த்­துத் தெரி­வித்த நாடு சீனா என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. இதை ஒரு வாழ்த்­துத் தெரி­வித்த சம்­வம் என்று கரு­து­வதை விட மேற்­கு­ல­குக்கு விடுக்­கப்­பட்ட சவால் என்றே கருத வேண்­டி­யுள்­ளது. அதைவிடச் சீனா இந்­தப் பிரச்­சினை தொடர்­பாக எவ்­வித நட­வ­டிக்­கை­யும் எடுத்­த­தாகத் தெரி­ய­வில்லை. அது எதுவித அபிப்­பி­ரா யத் தைக்கூட இது­வரை வெளியி­ட­வில்லை.

மகிந்த – ரணில்
அதிகாரப் போட்டிக்குள் ஒளிந்திருப்பது
மகிந்த ராஜ­பக்ச தலை­மை­யி­லான தரப்­பி­ன­ருக்­கும் ரணில் விக்­கி­ரமசிங்க தலை­மை­யி­லான தரப்­பி­ன­ருக்­கும் இ­டை­யே­யான அதி­கா­ரப்­போட்­டியே இப்­ப­டி­யான குழப்ப நிலைக்கு அடிப்­ப­டை­யான கார­ணம் என்று வெளிப்­ப­டை­யா­கத் தோற்­ற­ம­ளித்த போதும் அதன் பின்­னால் வலி­மை­யான கரங்­கள் இரப்­பதை உணர முடி­யும். நாடா­ளு­மன்­றம் கலைக்­கப்­பட்­ட­மைக்கு எதி­ரான மேற்கு நாடு­க­ளின் கொதிப்பு ஜன­நா­ய­கத்­தைக் காப்­பாற்­றவே என்று கூறப்­பட்ட போதி­லும் அதன் பின்­னால் அவர்­க­ளின் நலன்­கள் பொதிந்­தி­ருப்­பதை அவ­தா­னிக்க முடியும். இறுதிப்போர்க் காலத்தில் இலங்கை மீது இல்லாத ஜனநாயக அக்கறை இப்போது பிறந்திருப்பது கவ னிக்கத்தக்கது.

சீனாவின் ஆதிக்கமும்
மேற்குலகின் இறுக்கமும்
மகிந்த ராஜ­பக்ச ஆட்­சி­யி­லி­ருந்த கால கட்­டத்­தில் இலங்­கை­யில் சீனா­வின் ஆதிக்­கம் வலுப்­பெற்­றி­ருந்­தது. வீதிகள், துறை­மு­கங் கள், வானூர்தி நிலை­யம் என்­பன சீனா­வி­னாலேயே அபி­வி­ருத்தி என்ற பேரில் மேற்­கொள்­ளப்­பட்­டன. அம்பாந்தோட்டை துறை­மு­கம், கொழும்புத் துறை­முக நக­ரம் என்­ப­வற்­றின் உரி­மை­யில் சீனா­வுக்கு ஆதிக்­கம் செலுத்­து­ம­ள­வுக்குப் பெரும் பகுதி பங்கு வழங்­கப்­பட்­டது. இவற்­றைக் கட்­டுப்­ப­டுத்­தும் முக­மாக இலங்­கை­யில் இடம்­பெற்ற போர்க்­குற்­றங்­கள், மனித உரிமை மீறல்­கள், ஜீ.எஸ்.பி. வரிச்­ச­லுகை, இலங்­கை­யி­லி­ருந்து ஐரோப்­பிய நாடு­க­ளுக்­கான ஏற்­று­மதி, இறக்­கு­மதி போன்ற விட­யங்­க­ ளில் மேற்­கு­ல­கம் இலங்­கைக்கு எதி­ரா­க அழுத்­தம் கொடுக்­கும் வகை­யி­லான பல நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டது. ஆனாலும் மகிந்த ராஜ­பக்ச விட்டுக் கொடுக்­க­வில்லை. சீனா தனது பட்­டுப்­பா­தைத் திட்­டத்தை இலங்­கையை ஒரு முக்­கிய மைய­மா­கக் கொண்டு செயற்­ப­டுத்­தும் வித­மாக நகர்­வு­களை மேற்­கொண்­டது. இந்த நிலை­யில்­தான் மைத்­தி­ரியை மகிந்­த­வி­ட­மி­ருந்து உடைத்­தெ­றிந்து மகிந்­த­வின் ஆட்­சியை விழுத்தி மைத்­தி­ரியை அரச தலை­வ­ரா­க­வும் ரணிலைத் தலைமை அமைச்­ச­ரா­க­வும் கொண்ட ஆட்சி உரு­வாக்­கப்­பட்­டது. அர­சி­லும் அமைச்­ச­ர­வை­யி­லும் ரணி­லின் கையே ஓங்­கி­யி­ருந்­தது.

ரணிலின் ஆட்சிக்கு மாற்று
கொழும்பு துறை­முக நக­ரம், கொள்­க­லன் இறக்­கு­துறை, அம்­பாந்­தோட்டை துறை­மு­கம் போன்ற முதன்மை மையங்­க­ளில் சீன ஆதிக்­கத்தை உடைக்க முடி­ய­ வில்லை. வழங்­கி­யி­ருந்த பெருந்­தொ­கை­யைப் பயன்­ப­டுத்தி தனக்கு ஏற்­க­னவே பகு­தி­ய­ள­வில் வழங்­கப்­பட்­டி­ருந்த மேற்­படி நிறு­வ­னங்­களை முழு­மை­யா ­கவே 99 வரு­டக் குத்­த­கைக்­குப் பெற்­றுக் கொண்­டது. அந்த விட­யத்­தில் வெற்றி கொள்ள முடி­யாத மேற்­கு­ல­க­மும் ரணில் ஆட்­சி­யும் மாற்று வழி­க­ளில் இறங்­கத் திட்­ட­மிட்­டன. அதா­வது அம்­பாந்­தோட்­டைத் துறை­மு­கம் சீனா­வின் ஆதிக்­கத்­தில் உள்ள அதே­நி­லை­யில் மேற்­கு ­நா­டு­கள் இந்­தியா என்­ப­ன­வற்றுக்காகச் சுதந்­தி­ர­மான பாவ­னைக்­கென உப துறை­ம­கம் ஒன்றை அமைப்பதற்குத் திட்­ட­மி­டப் பட்­டது. கொழும்புத் துறை­மு­கத்­தி­ லும் புதி­தாக ஒரு கொள்­க­லன் இறங்­கு­துறை அமைக்­க­வும் ஏற்­பா­டு­கள் ஆரம்­பிக்­கப்­பட்­டன.

இவை சீனா­வின் பட்­டுப்­பா­தைத் திட்­டத்தை வேவு பார்க்­க­வும் மறை­முக இடை­யூ­று­களை விளை­விக்­க­வுமே உரு­வாக்­கப்­ப­டு­கின்­றன என்­ப­தைச் சீனா நன்­க­றி­யும்.

இப்­ப­டி­யான ஒரு நிலை­யி­லேயே ரணி­லுக்­கும் மைத்­தி­ரிக்­கு இ­டை­யி­லான முறு­கல் நிலை­யும் மகிந்த மைத்­தி­ரிக்­கு­மி­டை­யி­லான இர­க­சி­யப் பேச்­சுக்­க­ளும் இடம்­பெற்­றன. அவற்­றின் விளை­ப­லனே ரணில் தலைமை அமைச்­சர் பத­வி­யி­லி­ருந்து நீக்­கப்­பட்­டது முதல் நாடா­ளு­மன்­றம் கலைப்பு வரை இடம்­பெற்­ற­வை­யா­கும்.

தற்­ச­ம­யம் உயர் நீதி­மன்­றம் நாடாளு மன்றம் கலைக்­கப்­பட்­ட­மைக்கு இடைக்­ கா­லத்­தடை விதித்­த­தன் கார­ண­மாக 14ஆம் திகதி நாடா­ளு­மன்­றம் கூட்­டப்­பட்டுத் தலைமை அமைச்­சர் மகிந்­த­வுக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னம் சமர்ப்­பிக்­கப்­பட்­டு­விட்­டது. இலங்­கை­யைத் தள­மா­கக் கொண்டு இடம்­பெற்று வரும் சீனா­வுக்­கும் மேற்­கு­லக ஏகா­தி­பத்­தி­யத்­துக்­கும் இடை­யி­லான மோதலுக்கு இதன் மூலம் தற்­கா­லி­க­மாகத் தீர்வு எட்­டப்­பட முடி­யும் எனத் தோன்­றக்­கூ­டும். ஆனால் அது தொட­ரும்.

இலங்கை மக்­க­ளின் ஜன­நா­ய­கம், சுதந்­தி­ரம் என்­பன இரண்டு தரப்­பி­ன­ரா­லும் விழுங்­கப்­பட்டு வரு­கி­றது என்­பதை எமது அர­சி­யல்­வா­தி­கள் எவ­ருமே பொருட்­ப­டுத்­து­வ­தில்லை. எமது உரி­மை­கள் என்­பது வெறும் தேர்­தல் காலக் கோசங்­கள் மட்­டுமே.

You might also like