மைத்­தி­ரி­யின் குடி­யு­ரி­மையை பறிக்­க­லாம்

ஜே.வி.பி. யோசனை

அர­ச­மைப்பை மைத்­திரி மீறி­ விட்­டார். அவ­ருக்கு எதி­ராக நீதி­மன்­றம் தீர்ப்பு வழங்­கி­னால் அவர் குற்­ற­வாளி என்­பது உறு­திப்­ப­டுத்­தப்­ப­டும். அவ­ருக்கு எதி­ராக குற்­ற­வி­யல் தீர்­மா­னம் மாத்­தி­ரம் அல்ல, அவ­ரது குடி­யு­ரி­மை­யைக் கூட பறிக்க முடி­யும். இவ்­வாறு மக்­கள் விடு­தலை முன்­ன­ணி­யின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் விஜித ஹேரத் தெரி­வித்­தார்.

நாடா­ளு­மன்­றத்­தில் நேற்று முன்­வைக்­கப்­பட்ட சபை ஒத்­தி­வைப்­புத் தீர்­மா­னம் மீதான விவா­தத்­தில் உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.

அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

பொரு­ளா­தா­ரப் பின்­ன­டைவு
கடந்த ஒக்­ரோ­பர் மாதம் 26ஆம் திகதி மைத்­திரி எடுத்த அர­சி­யல் நகர்­வுக்­குப் பின்­னர் இந்த நாடு பொரு­ளா­தார ரீதி­யில் பின்­ன­டை­வைச் சந்­தித்­துள்­ளது. இதற்கு முழுப் பொறுப்­பை­யும் மைத்­தி­ரி­பால ஏற்­றுக்­கொள்ள வேண்­டும். இந்த தீர்­மா­னம் ஊழ­லுக்கு எதி­ரா­னது என்றே மைத்­தி­ர­பால கட்சி மாநாட்­டில் தெரி­வித்­தி­ருந்­தார். அவர் அப்­படி தீர்­மா­னம் எடுப்­ப­வ­ராக இருந்­தி­ருந்­தால், மத்­திய வங்கி ஊழல் இடம்­பெற்ற ஒரு வார காலத்­தில் ஆணைக்­குழு அமைத்து குற்­ற­வா­ளி­களை தண்­டித்­தி­ருக்க வேண்­டும். இன்­று­வரை குற்­ற­வா­ளி­களை தண்­டிக்­கும் எந்த நட­வ­டிக்­கை­யும் எடுக்­க­வில்லை.
இலஞ்ச ஊழ­லுக்கு எதி­ரா­கச் செயற்­ப­டு­வ­தாக கூறி­யது உண்மை என்­றால், மகிந்­த­வுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுத்­தி­ருக்க வேண்­டும். மாறாக குற்­ற­வா­ளி­க­ளுக்கு பத­வி­க­ளைக் கொடுத்­துள்­ளார். ஊழல் குற்­ற­வா­ளி­கள் பட்­டி­ய­லில் உள்ள பலர் இன்­றும் அர­சில்­தான் உள்­ள­னர். சிறை­யில் இருக்க வேண்­டிய பலர் நாடா­ளு­மன்­றத்­தில் அவ­ரு­டன் இணைந்­துள்­ள­னர்.

சட்­ட­மு­ரண்­பாடு
நாட்­டுக்­கா­கவே அர­சி­தழ் அறி­விப்­புக்­கள் ஐந்­தை­யும் வெளி­யிட்­ட­தாக அரச தலை­வர் தெரி­வித்­தார். தலைமை அமைச்­சர் பத­வி­யி­லி­ருந்து ரணிலை நீக்­கி­யது அர­ச­மைப்­புக்கு முர­ணா­னது. சட்­ட­வி­ரோ­த­மாக ஒரு­வரை நீக்­கி­யது மட்­டு­மல்­லாது, சட்­ட­வி­ரோ­த­மாக ஒரு­வரை நிய­மித்­த­தும் அர­ச­மைப்­புக்கு முர­ணா­னது. நாடா­ளு­மன்­றத்­தைக் கலைத்­தமை அர­ச­மைப்­பின் 19ஆவது திருத்­தத்­துக்கு முரண்­பா­டா­னது. அர­ச­மைப்பை அவர் மீறி­விட்­டார். அவர் ஒரு தடவை அல்ல பல தட­வை­கள் அதனை மீறி­விட்­டார்.

தீர்ப்­புக்­காக காத்­தி­ருப்பு

நீதி­மன்­றத் தீர்ப்பை மக்­கள் எதிர்­பார்த்­துள்­ள­னர். அர­ச­மைப்பை மீறி தன்­னிச்­சை­யாக அரச தலை­வர் செயற்­பட்­டது நீதி­மன்­றத் தீர்ப்பு வந்­தால் தெரி­ய­வ­ரும். நீதி­மன்­றத் தீர்ப்பு அரச தலை­வ­ருக்கு எதி­ராக வந்­தால், அரச தலை­வர் ஆச­னத்­தில் அவர் தொடர்ந்­தும் இருக்க முடி­யுமா?
அரச தலை­வர் மைத்­தி­ரி­பால, ரணில் விக்­கி­ர­ம­சிங்க நாட்டை நாச­மாக்கி விட்­டார் என்று கூறு­கின்­றார். இரு­வ­ருக்­கும் இடை­யில் உள்ள மோத­லில் நாட்டு மக்­களை எப்­ப­டித் தண்­டிக்க முடி­யும். இரு­வ­ருக்கு எதி­ரான கோபத்­தில் நாட்டை தீ வைக்­கும் செயலை மைத்­திரி முன்­னெ­டுத்­துள்­ளார். முழு நாட்­டை­யும் தீ வைத்­து­விட்டு நீரோ மன்­ன­ரைப்­போல பிடில் வாசித்­துக் கொண்­டுள்­ளார்.
கடந்த ஏப்­ரல் மாதம் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னத்­தைக் கொண்­டு­வந்­தது மகிந்த அணி­யாக இருந்­தா­லும் அத­னைத் தூண்­டி­யது மைத்­திரி அணியே. அதே­போல் இன்று நாம் நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னத்­தைக் கொண்­டு­வந்து நிறை­வேற்­றி­னோம். ஆனால் மூன்­றா­வது தட­வை­யாக நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னத்­தைக் கொண்­டு­வர மைத்­தி­ரியே கார­ணம். நாம் கொண்­டு­வந்த நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னத்­தின் முதல் சரத்தை நீக்­கி­விட்டு கொண்­டு­வா­ருங்­கள் என்று கூறி­னார். இரண்­டா­வது சரத்து இருக்­கட்­டும் என்­றார்.

தப்­பிக்­கொள்­ளும் யுக்தி

தலைமை அமைச்­சரை நீக்­கி­யது சட்­ட­வி­ரோ­த­மா­னது என்­ப­தும் நிய­மிக்­கப்­பட்ட தலைமை அமைச்­ச­ரும் ஏற்­றுக் கொள்ள முடி­யா­த­வர் என்­ப­துமே முதல் சரத்து. மகிந்த ராஜ­பக்ச மற்­றும் அவ­ரது அமைச்­ச­ரவை அனு­மதி இல்­லா­தது என்­பதே இரண்­டாம் சரத்து. இதில் முதல் சரத்தை நீக்­கக்­கோ­ரி­னார். அதன் அர்த்­தம் என்ன? சட்­ட­வி­ரோ­தச் செயலை செய்த என்னை விட்­டு­வி­டுங்­கள், என்­னைக் காப்­பாற்­றுங்­கள், அவர்­க­ளுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னத்­தைக் கொண்டு வந்­தால் எனக்­குப் பிரச்­சினை இல்லை என்­பதே மைத்­தி­ரி­யின் நிலைப்­பாடு. மகிந்­த­வுக்கு எதி­ராக என்ன செய்­தா­லும் பர­வா­யில்லை, என்­னைக் காப்­பாற்­றுங்­கள். நாளை எனக்கு எதி­ரான குற்­ற­வி­யல் தீர்­மா­னம் கொண்­டு­வ­ரப்­பட்­டால் எனக்கு சிக்­கல் வரும் என்­பதே அவ­ரது கருத்து.

தடு­மா­று­கின்­றார்

அரச தலை­வ­ருக்கு எதி­ராக குற்­ற­வி­யல் தீர்­மா­னம் மட்­டு­மல்ல, அவ­ரது குடி­யு­ரி­மை­யை­யும் பறிக்க முடி­யும். அவர் செய்­துள்ள தவறு சாத­ர­ண­மா­னது அல்ல. அரச தலை­வர் அச்­சத்­தில் இவ்­வாறு தடு­மா­று­கின்­றார். ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் சிலர் அரச தலை­வர் மீது நம்­பிக்கை வைத்து அவ­ரின் வேண்­டு­கோ­ளுக்கு இணங்க மீண்­டு­மொரு தீர்­மா­னத்­தைக் கொண்­டு­வந்­துள்­ளார். இதில் முதல் சரத்து நீக்­க­பட்­டுள்­ளது. இதனை எவ்­வாறு நீக்க முடி­யும்? இவர்­கள் ‘டீல்’ ஒன்றை போட்­டு­விட்­ட­னர். அரச தலை­வ­ரின் கதைக்கு இணைங்கி இவர்­கள் இத­னைச் செய்­துள்­ளார். அத­னைச் செய்ய முடி­யாது. அவர் குற்­ற­வா­ளி­யா­கி­விட்­டார். இப்­போ­தும் ஐக்­கிய தேசி­யக் கட்சி அரச தலை­வ­ரு­டன் டீல் போட்­டுக்­கொண்டு செயற்­ப­டு­கின்­ற­னர். அன்று ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ரா­க­வும் இன்று மகிந்த ராஜ­பக்­ச­வுக்கு எதி­ரா­க­வும் நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னத்­தைக் கொண்­டு­வந்­தது மைத்­தி­ர­பால சிறி­சே­னவே.

மகிந்­தவை நாச­மாக்­கி­விட்­டார்

ஏதோ ஒரு வழி­யில் தலை­தூக்க முயற்­சித்­து­வந்த மகிந்­தவை மீண்­டும் இணைத்­துக்­கொண்டு அவ­ருக்கு அமைச்­சுப்­ப­த­வி­க­ளைக் கொடுத்து முழு­மை­யாக நாச­மாக்­கி­விட்­டார். அவ­ரு­டன் இருந்து அப்­பம் சாப்­பிட்டு இறு­தி­யில் அவ­ருக்கே துரோ­கம் செய்­ததை போல இன்­றும் மகிந்­த­வுக்கு ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் மூல­மாக துரோ­கம் செய்­யவே முயற்சி செய்து வரு­கின்­றார். மகிந்த இப்­போ­தா­வது இந்­தச் சூழ்­சி­களை அறிந்­து­கொள்ள வேண்­டும்.
போரில் பாதிக்­கப்­பட்ட அனை­வ­ருக்­கும் இழப்­பீடு வழங்­கும் தீர்­மா­னம் நிறை­வேற்­றப்­பட்­டது. இது புலி­களை ஆத­ரிக்­கும் தீர்­மா­னம் அல்ல. அப்­போது மகிந்த அணி­யி­னர் இன­வா­தத்­தைத் தூண்டி தடுக்­கும் நட­வ­டிக்கை எடுத்­த­னர். ஆனால் அவர்­களே இன்று விடு­த­லைப் புலி­களை விடு­தலை செய்­வ­தா­கக் கூறு­கின்­ற­னர். அதையே நாம் அன்று கூறும்­போது இன­வா­தம் பேசி­னார். இன்று அதையே அவர்­க­ளும் செய்­கின்­ற­னர்.

பொய்­யும் புர­ளி­யும்

இன்று வடக்­கில் மாவீ­ரர் தினம் நடக்­கும் போது இவர்­கள் வாய் திறக்­க­வில்லை. பொலிஸ் அதி­கா­ரி­கள் இரு­வர் கொலை செய்­யப்­பட்­ட­தற்­கும் முன்­னைய ஆட்­சி­யா­ளர் கார­ணம் என்று கூறி­னர். சுட்­டுக்­கொலை செய்­யப்­பட்ட இடத்­தில் இருந்து 200 மீற்­றர் தூரத்­தில் வானூர்­திப் படை முகாம் உள்­ளது. இவர்­கள் பொய்­யி­லும் புர­ளி­யி­லும் ஆட்­சி­யைச் செய்து வரு­கின்­ற­னர் – என்­றார்.

You might also like