side Add

மைத்திரிக்கு மருத்துவம் தேவை!!

ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஹிரு­னிகா பிரே­ம­சந்­திர. இவர் தெரி­வித்த கருத்து ஒன்­றைக் கடந்த நாள்ப் பத்­தி­ரி­கை­க­ளில் காண­மு­டிந்­தது. அதன் சாராம்­சம் அரச தலை­வ­ரான மைத்­தி­ரி­பா­ல­சி­றி­சேன மன­நோ­யால் பாதிக்­கப்­பட்­டி­ருக்­கி­றார் என்­ப­தா­க­வும் அவ­ருக்கு அவ­ச­ர­மாக, இர­க­சி­ய­மான முறை­யி­லே­னும் சிகிச்­சை­ய­ளிக்­கு­மா­றும் இருந்­தது. அவ­ரு­டைய கருத்து மாத்­தி­ர­மன்றி ஒக்­ரோ­பர் மாதத்­தின் இறு­திப் பகு­தி­யில் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வின் தலை­மை­யில் இடம்­பெற்ற அதி­ரடி அர­சி­யல் மாற்­றங்­க­ளுக்­குப் பின்­னர் அதி­க­மா­ன­வர்­க­ளின் கருத்து அரச தலை­வர் மைத்­திரி பால­வைச் சாடு­வ­தாக அமைந்­தி­ருப்­ப­தையே காண முடி­ கின்­றது.

மைத்­தி­ரி­யின் மகள் இட்ட பதிவு
ஒக்­ரோ­பர் 26ஆம் திகதி நள்­ளி­ர­வன்று நாட்­டின் அதி­கா­ரத்­தி­லி­ருந்த தலைமை அமைச்­சரை நீக்கி, புதிய தலைமை அமைச்­சரை நிய­மித்து அதி­ரடி அர­சி­ய­லில் இறங்­கி­யி­ருந்­தார் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால. அதன் பின்­னர் நாடா­ளு­மன்­றத்­தில் அவ­ரும், அவர் நிய­மித்த புதிய தலைமை அமைச்­ச­ரும் பெரும்­பான்­மையை நிரூ­பிக்­க­வேண்­டிய கட்­டா­யம் எழுந்­தது. அப்­போ­து­தான் அரச தலை­வ­ரின் அடுத்த அதி­ர­டி­யும் அரங்­கே­றி­யது. அதா­வது அவர் நாடா­ளு­மன்­றத்­தைக் கலைத்து உத்­த­ர­விட்­டார். அதன் பின்­னர் அவ­ரு­டைய கலைப்பு உத்­த­ர­வுக்கு நீதி­மன்று இடைக்­கா­லத் தடை விதித்­தமை, கூடிய மன்­று­க­ளில் அடி­தடி ஏற்­பட்­டமை எல்­லாம் அனை­வ­ரும் அறிந்­தவையே.

இதற்­கி­டை­ யில் அரச தலை­வ­ரான மைத்­தி­ரி­பால சிறி­சே­னா­வின் மகள் பதி­விட்­ட­தாக இணை­யப் பதி­வொன்று இள­சு­கள் மத்­தி­யில் உலா­வி­யது. ‘ஜனா­தி­பதி தாத்தா’ என்ற தலைப்­பில் அவர் எழு­திய புத்­த­கம் ஒன்­றில் சிறு­வ­ய­தில் தன்­னு­டைய தந்தை அவ­ருக்­குண்­டான கோபத்­தால் நன்கு முற்றி விளைந்­தி­ருந்த முழு வய­லை­யும் எரித்­தா­த­கக் குறிப்­பிட்­டி ­ருந்த பகு­தியே அது. அப்­போது அரச தலை­வர் முழு வய­லை­யும் எரித்­த­தற்கு ஒப்­பா­ன­தா­கவே நாடா­ளு­மன்­றைக் கலைத்த நட­வ­டிக்கை இருப்­ப­தாக அதற்­குக் கருத்­துக்­கள் குவிந்­த­மை­யும் குறிப்­பி­டத்­தக்­கது.

மக்­கள் விடு­தலை முன்­ன­ணி­யின் கருத்து
மைத்­தி­ரிக்கு மருத்­து­வம் தேவைப்­ப­டு­வ­தா­கக் ஹிரு­னிகா குறிப்­பி­டு­வ­தைப்­போ­லவே மைத்­திரி ஏற்­ப­டுத்­திய அர­சி­யல் நெருக்­க­டிக்­குப் பல­த­ரப்­பி­ன­ரும் எதிர்­வினை புரிந்­துள்­ள­ னர். தான் ஏற்­ப­டுத்திய நெருக்­க­டி­யின் முடி­வில் அத­னால், பாதிக்­கப்­பட்­டி­ருப்­ப­தும் அரச தலை­வர் மைத்­தி­ரி­பா­லவே. இந்த அரச தலை­வர் குறித்து எங்­க­ளுக்கு ஆச்­ச­ரி­ய­மாக உள்­ளது என்­றும், இவர் மன­நல ரீதி­யா­கப் பாதிக்­கப்­பட்­டுள்­ளார் என்­றும், அவரை வெளி­நாட்­டுக்­கே­னும் அழைத்­துச் சென்று சிகிச்சை வழங்­கு­மா­றும் மைத்­தி­ரி­பா­ல­வின் மனைவி – மக­ளி­டம் தான் கேட்­டுக்­கொள்­வ­தா­கக் குறிப்­பிட்ட ஹிரு­னிகா மாத்­தி­ரம் மைத்­தி­ரி­யின் விட­யத்­தில் மைத்­திரி பற்­றிக் கருத்­துத் தெரி­விக்­க­வில்லை. அவ­ரைப்­போன்றே அண்­மைய பத்­தி­ரி­கை­யில் மக்­கள் விடு­தலை முன்­ன­ணி­யின் சார்­பாக அதன் உறுப்­பி­னர் ஒரு­வர் வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்ற கருத்­தும் அமைந்­தி­ருந்­தது. அவர் மைத்­தி­ரியை மற்­றொரு விதத்­தில் அணு­கி­யி­ருந்­தார்.

சதி­க­ளில் தோல்­வி­ய­டைந்த மைத்­திரி தற்­போது இறு­திச் சந்­தர்ப்­பத்­தி­லும் மீண்­டும் காட்­டிக்­கொ­டுத்­துத் தம்மை மீட்­ப­தற்­கான செயற்­ப­டு­க­ளில் ஈடு­ப­டு­வ­தைக் காண முடி­கின்­றது என்­றும், நாடா­ளு­மன்­றத்­தில் நிறை­வே­றிய நம்­பிக்­கை­யில்­லாப் பிரே­ர­ணை­யில் தமக்­குப் பாத­க­மான பகு­தியை அகற்­றி­விட்டு மகிந்­த­வின் தலைமை அமைச்­சர் பதவி இல்­லா­மல் போகும் யோச­னை­யில் மைத்­திரி தலை­யீடு செய்து வரு­வ­தா­க­வும் அது உண்­மை­யா­னால், இது மைத்­தி­ரி­யின் அர­சி­யல் சூழ்ச்­சி­யையே வெளிப்­ப­டுத்தி நிற்­ப­தா­க­வும் வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்­தார்.

அரச தலை­வர் பதவி ஆசை
அடுத்த அரச தலை­வர் தேர்­த­லில் தனக்­குப் போட்­டி­யி­டும் எண்­ணம் இல்லை என்று அது­வரை கால­மும் மைத்­திரி பால சிறி­சேன கூறி­வந்­த­மையும் தற்­போது பேசு­பொ­ரு­ளா­கி­யுள்­ளது. அரச தலை­வர் முன்­னெ­டுத்த திடீர் அர­சி­யல் முடிவு அவ­ரு­டைய அடுத்த அரச தலை­வர் பதவி ஆசை­யையே வெளிப்­ப­டுத்­து­வ­தா­க­வும் பர­வ­லா­கக் கருத்­துக்கள் நில­வு­ கின்­றன.
எது எப்­ப­டி­யி­ருப்­பி­னும் முதல் நாள் ஒன்­றாக விருந்­துண்­டு­விட்டு மகிந்­த­வைப் புற­ மொ­துக்­கி­யது, கூட்­டாக ஆட்­சி­ய­மைத்து, கூட்­டாக இருந்­து­வந்த ரணி­லைத் திடீ­ரெ­னப் பத­வி­யி­லி­ருந்து அகற்­றி­யது என்ற மைத்­தி­ரி­யின் பல­த­ரப்­பட்ட முன்­னெ­டுப்­புக்­கள் பற்­றி­யும் அவ­ரு­டைய தனிப்­பட்ட பழக்க வழக்­கங்­கள் சார்ந்­தும் பொது­வெளி இந்த அர­சி­யல் சுழ­லுக்­குப் பிறகு அதி­கம் சிலா­கிக்­கத் தொடங்­கி­யி­ருப்­பது கவ­னிக்­கத்­தக்­கது.

You might also like