மோடி­யின் வெற்­றி­யும் ஈழத் தமி­ழர் எதிர்­கா­ல­மும்

இந்தியப் பொதுத் தேர்­த­லில் அமோக வெற்றி பெற்று அதன் தற்­போ­தைய தலைமை அமைச்­சர் நரேந்­திர மோடி மீண்­டும் ஆட்சி அமைக்­கி­றார். பார­தீய ஜன­தாக் கட்சி தலை­மை­யி­லான தேசிய மக்­க­ளாட்­சிக் கூட்­ட­மைப்பு 350 ஆச­னங்­க­ளைக் கைப்­பற்றி பெரும் வெற்­றி­யைப் பதிவு செய்­துள்­ளது. பார­தீய ஜன­தாக் கட்சி 303 ஆச­னங்­க­ளைப் பெற்­றுத் தனிப் பெரும் கட்­சி­யாக மாறி­யி­ருக்­கி­றது. .

543 ஆச­னங்­க­ளைக் கொண்ட இந்­திய நாடா­ளு­மன்­றத்­தில் ஆட்­சி­ய­மைக்க 272 ஆச­னங்­கள் என்­கிற பெரும்­பான்­மை­யைப் பெற்­றாலே போதும். பா.ஜ.க. தனித்தே ஆட்­சி­ய­மைக்­கக்­கூ­டிய பெரும்­பான்­மை­யைப் பெற்­றுள்­ளது. அதன் கூட்­டணி பெற்­றுள்ள 350 ஆச­னங்­கள் என்­கிற பெரும்­பான்மை மோடி இரண்­டா­வது தட­வை­யா­க­வும் ஓர் உறு­தி­யான ஆட்­சியை அமைப்­பார் என்­பதை உறு­திப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது.

மோடி ஆட்­சி­யின் மீது பல்­வேறு குற்­றச்­சாட்­டுக்­கள் இருந்­தா­லும் அவற்றை எல்­லாம் புறந்­தள்ளி இந்­திய மக்­கள் பாஜ­கா­வுக்கு மீண்­டும் ஒரு தடவை தேர்­த­லில் மிகப் பெரும் வெற்­றி­யைக் கொடுத்­தி­ருக்­கி­றார்­கள். வழக்­கம்­போ­லவே தமிழ்­நாடு, கேளரா போன்ற தென் மாநி­லங்­க­ளில் பா.ஜ.க. அடி­யோடு நிரா­க­ரிக்­கப்­பட்­டி­ருக்­கின்­ற­போ­தும் அது மோடி­யின் ஆட்­சி­யில் பெரும் மாற்­றங்­க­ளைக் கொண்­டு­வ­ரப்­போ­வ­தில்லை.

தெற்­கா­சிய வட்­ட­கை­யில் இந்­தி­யாவை ஒரு வல்­ல­ர­சாக, சீனா­வுக்கு எதி­ரான உறு­தி­யான அர­ணாக நிமிர்த்தி வைப்­ப­தற்கு உல­கப் பூகோள அர­சி­யல் சக்­தி­கள் முயன்­று­வ­ரும் நிலை­யில் மோடி­யின் வெற்றி அதற்கு உறு­து­ணை­யாக அமை­யும். அதே­நே­ரம் இரண்­டா­வது தவ­ணைக்­கான மோடி­யின் இந்த மிகப் பெரும் வெற்றி இந்­துத்­து­வா­வின் வீறு கொண்ட எழுச்­சிக்­கும் பக்­க­ப­ல­மாக அமை­யும். அதற்­கூ­டா­கவே பாஜக இந்த வெற்­றி­யைச் சாத்­தி­ய­மாக்­கி­யி­ருக்­கி­றது என்­ப­தால் இன்­னும் எழுச்­சி­யோடு இந்­தி­யா­வில் இந்­துத்­துவா வீறு நடை போடும்.

இது இந்­தி­யா­வைச் சுற்­றி­யுள்ள அயல் நாடு­க­ளை­யும் பாதிக்­கும். குறிப்­பாக இலங்­கை­யைப் பாதிக்­கும். இங்­கும் பௌத்­தம் மீண்­டும் வீறு­கொள்­வ­தற்கு இந்­தத் தரு­ணத்­தைப் பயன்­ப­டுத்­தும். இந்­தி­யா­வில் இந்து மதம் பெரும்­பான்மை என்­ப­தால் அது ஆட்­சி­யா­ளர்­க­ளின் ஆத­ர­வைப் பெற்று எழுச்­சி­ய­டை­வ­தைப் போன்றே இங்­கும் பெரும்­பான்மை மத­மான பௌத்­தம் ஆட்­சி­யா­ளர்­க­ளின் ஆத­ரவோடு தன்னை இன்­னும் விரி­வாக்­கிக் கொள்ள எத்­த­ணிக்­கும். அது­மட்­டு­மின்றி இந்­தி­யா­வின் இந்து எழுச்­சியை இலங்­கை­யின் பௌத்­தம் எப்­போ­தும் அச்­சத்­து­ட­னேயே அணு­கும் என்­ப­தா­லும் இங்­குள்ள பௌத்­தம் தன்னை இன்­னும் வலுப்­ப­டுத்­திக்­கொண்டு விரி­வாக்­கவே முயற்­சிக்­கும்.

இந்த நிலை இலங்­கை­யில் ஏனைய மத மற்­றும் இன சிறு­பான்­மை­யி­ன­ரைப் பெரி­தும் பாதிக்­கும். ஏற்­க­னவே மத ரீதி­யான பிள­வு­க­ளை­யும் உள்­ள­டக்­கிய இனப் பிள­வு­க­ளால் கூர்­மை­ய­டைந்­துள்ள இலங்­கை­யின் முரண்­பாடு இன்­னும் தீவி­ரம் பெறும் வாய்ப்­புக்­களை மோடி­யின் வெற்றி அதி­க­மாக்­கும். மாநி­லத் தலை­வ­ராக இருந்­த­போது மாநி­லங்­க­ளுக்கு அதி­க­ளவு அதி­கா­ரம் வழங்­கப்­ப­ட­வேண்­டும் என்று வலி­யு­றுத்தி வந்­த­வ­ரான மோடி, டில்­லி­யின் ஆட்­சிக் கட்­டில் ஏறி­ய­தும் ‘‘கூட்­டு­ற­வுக் கூட்­டாட்சி’’ என்­கிற தத்­து­வத்தை முன்­வைத்­தார்.

இலங்­கை­யில் ஆற்­றிய உரை­யி­லும்­கூட இங்­குள்ள பிரச்­சி­னைக்­கான தீர்­வாக அதனை அவர் முன்­வைத்­தி­ருந்­தார். ஆனால், அந்­தக் கூட்­டு­ற­வுக் கூட்­டாட்­சித் தத்­து­வத்­தைக் கைவிட்டு மாநி­லங்­க­ளின் உரி­மை­களை மேலும் பறிக்­கும் வகை­யி­லான மத்­தி­யின் நகர்­வு­க­ளையே மோடி ஆட்சி முன்­னெ­டுத்து வந்­துள்­ளது. மோடி­யின் இரண்­டா­வது ஆட்­சிக் காலத்­தில் அந்­தப் போக்கு இன்­னும் தீவி­ர­ம­டை­யும்­பட்­சத்­தில் இலங்­கை­யில் அதி­கா­ரப் பகிர்­வு­ட­னான ஓர் தீர்­வுக்கு கொழும்பு இணங்­கி­வ­ரும் சாத்­தி­யங்­க­ளும் அரு­கிப்­போ­கும் நிலையே ஏற்­ப­டும்.
எனவே பல வழி­க­ளி­லும் மோடி­யின் இரண்­டா­வது ஆட்­சிக் காலம் இலங்­கைத் தமிழ் பேசும் மக்­க­ளுக்கு கடு­மை­யான தாக்­கம் நிறைந்­த­தா­கவே அமை­யும்.

You might also like