யங்ஹென்றிஸை வீழ்த்தி  பாடும்மீன் சம்பியனானது

குரு­ந­கர் பாடும்­மீன் விளை­யாட்­டுக் கழ­கம் நடத்­திய தூய­வொளி வெற் றிக் கிண்­ணத்­துக்­கான கால்­பந்­தாட்­டத் தொட­ரில் குரு­ந­கர் பாடும்­மீன் அணி கிண்­ணம் வென்­றது.

யாழ்ப்­பா­ணம் துரை­யப்பா விளை­யாட்டு மைதா­னத்­தில் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்ற இறு­தி­யாட்­டத்­தில் இள­வாலை யங்­ஹென்­றிஸ் அணியை எதிர்த்து குரு­ந­கர் பாடும்­மீன் அணி மோதி­யது.

ஆட்­டத்­தின் 7ஆவது நிமி­டத்­தில் யங்­ஹென்­றிஸ் அணி­யின் முத­லா­வது கோலைப் பதி­வு­செய்­தார் தனேஸ். ஆட்­டத்­தின் 15ஆவது நிமி­டத்­தில் யங்­ஹென்­றி­ஸின் இரண்­டா­வது கோலை மகி­பன் பதி­வு­செய்­தார்.

40ஆவது நிமி­டத்­தில் கீதன் பாடும்­மீன் அணி­யின் முத­லா­வது கோலைப் பதி­வு­செய்ய முதல் பாதி­யின் முடி­வில் 2:1 என்ற கோல் கணக்­கில் யங்­ஹென்­றிஸ் அணி முன்­னிலை வகித்­தது.

ஆட்­டத்­தின் 65ஆவது நிமி­டத்­தில் குரு­ந­கர் பாடும்­மீன் அணி­யின் இரண்­டா­வது கோலை­யும் கீதன் பதி­வு­செய்­தார். தற்­போது கோல் கணக்கு 2:2. மாற்­றங்­கள் ஏற்­ப­ட­வில்லை. நிர்­ண­யிக்­கப்­பட்ட நிமி­டங்­க­ளின் நிறை­வில் இரண்டு அணி­க­ளும் தலா இரு கோல்­க­ளைப் பெற்­ற­தை­ய­டுத்து சம­நி­லைத் தவிர்ப்பு உதை­க­ளில் வெற்­றி­யைத் தீர்­மா­னிக்க வேண்­டிய நிலை ஏற்­பட்­டது. 7:6 என்ற கோல் கணக்­கில் பாடும்­மீன் அணி வெற்­றி ­பெற்று கிண்­ணம் வென்­றது.

சிறந்த வீர­னாக குரு­ந­கர் பாடும்­மீன் அணி­யின் கீதன். சிறந்த கோல் காப்­பா­ள­ராக இள­வாலை யங்­ஹென்­றிஸ் அணி­ யின் கோல் காப்­பா­ளர் அமல்­ராஜ் ஆகி­யோர் தெரி­வா­கி­னர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close