யாருடன் நோவார்…? யார்க்கெடுத்துரைப்பார்…?

2015ஆம் ஆண்டு அரச தலை­வர் தேர்­த­லில் தோற்­க­டிக்­கப்­பட்­ட­தன் பின்­னர் மீண்­டும் ஆட்­சி­யைக் கைப்­பற்­றும் முயற்­சி­யில் தொடர்ச்­சி­யாக முயன்று வரு­ப­வர் மகிந்த ராஜ­பக்ச. இவ­ரது பலம் என்­பது ‘சிங்­கள பௌத்­தம்’ தான். இலங்­கை­யின் அர­சி­யல் குடும்­பங்­கள் எல்­லாம் அர்க்­கேட்­டுப் போன நிலை­யில், மகிந்­த­வின் சகோ­த­ரர்­கள், அவர்­க­ளின் பிள்­ளை­கள் என ஒரு பெரிய குடும்­பமே மகிந்­த­வின் கையில் உள்­ளது. மகிந்­த­வுக்கு எதி­ராக ரணில்– – சந்­தி­ரிகா – மைத்­திரி ஆகி­ய­வர்­க­ளால் உரு­வாக்­கப்­பட்ட ‘நல்­லாட்­சி’யைக் கூடாத ஆட்சி என மக்­க­ளுக்கு எடுத்­துக் காட்­டு­வ­
தையே தனது வழி முறை­யா­கக் கொண்­டி­ருந்­தார் மகிந்த. அதன் போக்­கில் ஓர் இடை­யூறை ஏற்­ப­டுத்­தி­ய­வ­ரா­கத் தற்­போது மைத்­திரி காணப்­ப­டு­கின்­றார்.

சிங்­கள நாட்­டுக்­குச் செய்த
துரோ­க­மா­கச் சித்­தி­ரிக்­கப்­ப­டு­வது?
நல்­லாட்­சி­யில் இடம்­பெற்ற மத்­திய வங்கி மோசடி மற்­றும் முத­லீ­டு­கள், அம்­பாந்­தோட்­டைத் துறை­மு­கத்­தைச் சீனா­வுக்கு விற்­றவை போன்ற விட­யங்­கள் மகிந்­த­வுக்­குச் சாத­க­மாக அமைந்­தன. நல்­லாட்சி அர­சின் மிகப் பெரிய நிதி மோச­டி­யில் மத்­திய வங்­கி­யின் ஆளு­ந­ரான அர்­ஜூன் மகேந்­தி­ரன் என்ற தமி­ழ­ரும், அவ­ரது மரு­ம­க­னான அர்­ஜூன் அலோ­சி­யஸ் ஆகி­யோ­ரும் முன்­ன­ணி­யில் காணப்­ப­டு­வ­தால், இந்த மோசடி விவ­கா­ரத்­தைத் தமி­ழர், பௌத்த -– சிங்­கள நாட்­டுக்­குச் செய்த துரோ­க­மா­கவே சிங்­கள பௌத்த தீவி­ர­வா­தப் போக்­கு­டை­ய­வர்­கள் நினைக்­கின்­ற­னர்.

ரணி­லின் மூளைப்­ப­ல­மும் மகிந்­த­வின் புஜ­ப­ல­மும்
அம்­பாந்­தோட்­டையை விற்று அதில் பெற்ற பணத்தை வெளி­நாட்டு ஒதுக்­கீ­டு­க­ளுக்கு(எக்ஸ்­.ரேர்னல் றிசோர்ஸ்) வைப்­பி­லிட்­ட­தா­லேயே நாட்­டுக்­குத் தேவை­யான உண­வுப் பொருள்­க­ளை­யா­வது வாங்­கக் கூடிய நிலை அப்­போது ஏற்­பட்­டது. ரணில் இத்­த­கைய நட­வ­டிக்கை ஒன்றை மேற்­கொள்­ளாது இருந்­தி­ருந்­தால் நாட்­டில் பட்­டி­னிச் சாவு ஏற்­பட்­டி­ருக்­கும். நல்­லாட்சி அரசு ரணி­லின் மூளைப் பலத்­தால் ஓடிக்­கொண்­டி­ருக்க மகிந்­த தனது புஜ­ப­லத்­தால் அதை முடக்­கும் விட­யங்­க­ளில் ஈடு­பட்­டார். ரணி­லின் செயற்­பாட்­டுக்கு அமெ­ரிக்க, ஐரோப்­பிய நாடு­கள் பின்­ன­ணி­யில் இருக்க, மகிந்தவின் பின்னணியில் சீனா இருந்தது. ஒக்­ரோ­பர் 26ஆம் திக­தி­யன்று மகிந்த இர­வோடு இர­வா­கத் தலைமை அமைச்­ச­ராக்­கப்­பட்­ட­தன் பின்­னர் நவம்­பர் 14ஆம் திகதி நாடா­ளு­மன்­றம் கூட்­டப்­ப­டும் வரை அமெ­ரிக்க, ஐரோப்­பிய, இந்­திய இரா­ஜ­தந்­தி­ரி­க­ளு­ட­னேயே தனது கலந்­து­ரை­யா­டல்­களை மேற்­கொண்­டி­ருந்­தார் ரணில். அரச தலை­வ­ரின் கட்­டுப்­பட்­டுக்­குள் ஊட­கப்­பி­ரிவு கொண்டு வரப்­ப­ட்டதால் வெளி நாட்­டுப் பத்­தி­ரி­கை­யா­ளர்­க­ளை­யும், ஊட­கர்­க­ளை­யும் நாடா­ளு­மன்­றத்­துக்­குள் கொண்டு வந்து நாடா­ளு­மன்ற ஜன­நா­ய­கம் மீறப்­பட்­டி­ருப்­பதை வெளி­யு­ல­குக்கு காட்­டி­யி­ருக்­கி­றார்.

அலரி மாளி­கையை விட்டு ரணிலை
வெளி­யேற்­று­வ­தில் தீவி­ரம்
அலரி மாளிகை உறங்­காத
மாளி­கை­யாக இருந்­தது
கிடைக்­கின்ற வாய்ப்­புக்­களை ரணில் தனக்­குச் சாத­க­மாக மாற்­றிக் கொள்­வா­ரென்­பது மகிந்த – மைத்­திரி ஆகிய இரு­வ­ருக்­கும் நன்கு தெரிந்­தி­ருந்­த­தால் தான் ரணிலை அலரி மாளி­கையை விட்டு வெளி­யேற்­றும் விட­யத்­தில் அதிக நெருக்­க­டி­களை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தார்­கள். விடாப் பிடி­யாக ரணில் அலரி மாளி­கைக்­குள் நிலை­யெ­டுத்­துக் கொண்­டார். இரா­ணு­வத்­தையோ, பொலி­சா­ரையோ ரணி­லுக்கு எதி­ரா­கப் பயன்­ப­டுத்­தும் துணிவு முப்­ப­டை­க­ளின் தலை­வ­ரான அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு இருக்­க­வில்லை. அவ்­வாறு நடந்து கொண்­டால், இல­கு­வாக வெளி­நாட்­டுத் தலை­யீ­டு­கள் ஏற்­பட்­டு­வி­டும் என்ற அச்­சம் அவ­ருக்கு இருந்­தி­ருக்­கக்­கூ­டும். இந்த நிலை­யில் மகிந்­த­வும் ரணிலை வெளி­யேற்ற முனை­ய­வில்லை. பல முக்­கி­யஸ்­தர்­கள் அலரி மாளி­கைக்­குள் சென்று ரணி­லைச் சந்­தித்து இருந்­தார்­கள். இரவு, பகல் வேறு­பா­டு­க­ளின்றி அலரி மாளிகை உறங்­காத மாளி­கை­யாக இருந்­தது. அவ்­வாறு ரணி­லைச் சந்­தித்­த­வர்­களி;ல மகிந்­த­வின் சகோ­த­ரர்­க­ளான கோத்­த­பாய ராஜ­பக்­ச­வும், பசில் ராஜ பக்­ச­வும்­கூட இடம்­பெற்­றி­ருந்­தார்­கள்.

கூட்­ட­மைப்­பும், ஜே.வி.பியும்
பிள்­ளை­யார் சுழி போட, ரணில் காய் நகர்த்­தி­னார்
14.11.2018அன்று நாடா­ளு­மன்­றம் கூடி­ய­போது 122நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் தனக்­குச் சார்­பாக இருப்­ப­தா­க­வும் புதிய அமைச்­ச­ரவை என்­பது ஒரு ‘காட்­போட்’ அமைச்­ச­ரவை என­வும் ஏற்­க­னவே இருந்த அமைச்­ச­ர­வை­யைக் கலைத்­தமை, நாடா­ளு­மன்­றைக் கலைத்­தமை எல்­லாமே ஜன­நா­யக மீறல்­கள் என்­ப­தைத் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு மற்­றும் ஜே.வி.பி. உறுப்­பி­னர்­கள் முன்­மொ­ழிந்­த­ போது அவர்­க­ளின் கேள்­விக்­குப் பதி­லா­கச் சபை நட­வ­டிக்கை தொடர்ந்­தது. பெரும்­பான்­மையை ரணில் தரப்பு நிரூ­பித்­த­தும் மகிந்த ராஜ­பக்ச நாடா­ளு­மன்றை விட்டு வெளி­யே­றி­னார்.

அரச தலை­வர் மீதான நம்­பிக்­கை­யில்­லாத்
தீர்­மா­னம் சிக்­க­லா­னது
ரணில் தலை­மை­யி­லான அணி­யி­னர் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்­லாப் பிரே­ரணை ஒன்­றைக் கொண்­டு­வர முடி­யும். ஆனால், அதற்­கான நாடா­ளு­மன்ற நடை­முறை மிக­வும் சிக்­க­லா­னது. முத­லில் நடா­ளு­மன்­றில் 3/2 என்­கிற வீதத்­தில் பெரும்­பான்­மை­யைக் காண்­பிக்க வேண்­டும். பின்­னர் நீதி­மன்ற நடை­மு­றை­க­ளுக்­குச் செல்ல வேண்­டும். நீதி­மன்­றத் தீர்ப்­புச் சாத­க­மாக இருப்­பி­னும் மீண்­டும் நாடா­ளு­மன்­றத்­தில் 3/2 பெரும்­பான்­மையை நிரூ­பிக்க வேண்­டி­யி­ருக்­கும். இது நடை­மு­றை­யில் சாத்­தி­ய­மா­ன­தல்ல. இத­னால் அரச தலை­வ­ரின் பத­வி­யில் கைவைக்க முடி­யாத சூழல் உண்டு.

மகிந்­த­வுக்கு மீண்­டும் பின்­ன­டைவு
நல்­லாட்சி அரசை 2020ஆம் ஆண்டு வரை இழுத்­துச் செல்­வ­தற்கு அனு­ம­திப்­ப­தன் மூலம் அதை மிக மோச­மான கூட்டு என்­ப­தைச் சிங்­கள மக்­கள் மத்­தி­யில் ஏற்­ப­டுத்­து­வ­தற்கு முயன்­ற­தால், அவ­ச­ர­மாக ஆட்­சி­யைக் கைப்­பற்­றும் நோக்­கம் மகிந்­த­வுக்கு இருக்­க­வில்லை. இந்த நிலை­யில், அரச தலை­வர் மைத்­தி­ரி­பால மகிந்த தரப்­பி­டம் ஒதுங்­கி­ய­போது சற்­றும் எதிர்­பா­ரா­மல் அர­சி­யல் சூழல் மாறி­யது. இதன்­மூ­லம் மகிந்த தேர்­தல் மூலம் வென்று ஆட்­சி­யைக் கைப்­பற்­றும் மூலோ­பா­யம் குழப்­பப்­பட்­டது. இதன்­மூ­லம் 2015ஆம் ஆண்­டுத் தேர்­த­லில் மகிந்­த­வுக்கு ஏற்­பட்ட அதே பின்­ன­டைவு மீண்­டும் ஏற்­பட்­டது.

சிறு­பான்­மை­யி­னர் மீது மகிந்­த­வின் சுடு பார்வை
மகிந்­த­வின் பின்­ன­டை­வுக்கு அரச தலை­வர் மீண்­டும் கார­ண­மாக இருந்­தி­ருக்­கி­றார் என்­ப­து­டன் தமிழ்த்­தே­சி­யக் கூட்­ட­மைப்­பும் முஸ்­லிம் கட்­சி­க­ளும் மீண்­டும் முதன்­மைக் கார­ணி­க­ளாக அமைந்­துள்­ளன. இத­னால், மகிந்­த­வின் சினம் இரண்டு சிறு­பான்மை இனங்­க­ளின் மீது நிரந்­த­ர­மா­கி­விட்­டது. இதன் மூலம் பௌத்த பிக்­கு­கள் மற்­றும் சிங்­க­ளத் தீவி­ர­வா­தப் போக்­கு­டை­ய­வர்­கள் மீண்­டும் வீறு­கொண்டு எழும் வாய்ப்பு வழங்­கப்­பட்­டுள்­ளது. ரணி­லின் ஆட்­சி­யில் கூடச் சிறு­பான்­மை­யி­னர் அர­சி­யல் உரி­மை­கள் எதை­யும் வென்­று­வி­ட­வில்லை. இந்த அடிப்­ப­டை­யில் பார்த்­தால் மகிந்­த­வுக்கு எதி­ரா­கச் சென்ற இவ்­விரு இனங்­க­ளும் பகை­யா­ளி­க­ளாக மாறி­யுள்­ள­னவே தவிர உருப்­ப­டி­யாக எதை­யும் பெற முடி­ய­வில்லை. ஒரு வகை­யில் பார்த்­தல் மகிந்­த­வின் 113 ஆச­னங்­களை நாடா­ளு­மன்­றத்­தில் காட்ட முடி­யாது போன­மைக்­குத் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் 15ஆச­னங்­க­ளும் ஹக்­கீம், ரிசாத்­தி­டம் இருந்த 12 ஆச­னங்­க­ளுமே கார­ண­மாக அமைந்­தன என­லாம்.

மகிந்­த­வின் சிங்­க­ள-­– பௌத்த
எழுச்­சிக்கு எதிர்­கா­லத்­தில் வாய்ப்­புண்டு
இந்­தக் குழப்­ப­மான அர­சி­யல் சூழ­லுக்கு மத்­தி­யில், ‘‘நீங்­கள் யார் பக்­கம் நிற்­கப் போகி­றீர்­கள்?’’ எனத் தமிழ் அர­சுக் கட்­சி­யின் தலை­வர் மாவை சேனா­தி­ரா­சவை ஊட­க­வி­ய­லா­ளர்­கள் கேட்­ட­போது, ‘‘நாம் இந்­தி­யா­வு­டன் கலந்­தா­லோ­சித்த பின்­னரே கூற முடி­யும்’’ எனக் கூறி­யி­ருந்­தார். இதன்­மூ­லம் கூட்­ட­மைப்­பி­டம் சுய­மான ஒரு கருத்து இருக்­க­வில்லை என்­பதை அறிய முடி­கின்­றது. இனி­வ­ரும் நாள்­க­ளில் இலங்­கை­யில் சிங்­கள – பௌத்த பெருந்­தே­சி­ய­வா­தம் மீண்­டும் கட்டி வளர்க்­கப்­பட இருக்­கி­றது. இந்த அணி­யி­ன­ரால் தமி­ழ­ரும், முஸ்­லிம்­க­ளும் நிரந்தர விரோ­தி­க­ளா­கப் பார்க்­கப்­ப­டு­வர். இந்த நிலை­யில் மகிந்­த­வின் சிங்­கள – – பௌத்த எழுச்­சியே எதிர்­கா­லத்­தில் இலங்­கை­யின் உள்­நாட்டு அர­சி­ய­லைத் தீர்­மா­னிக்­கின்ற சக்­தி­யாக இருக்­கப்­போ­கின்­றது. இந்த நிலை­யில் தமிழ், முஸ்­லிம் இனங்­களை மகிந்த நோகவே செய்­வார். இவை எல்­லா­வற்­றை­யும் சீன­வுக்கு எடுத்­து­ரைப்­பார். மகிந்­த­வுக்கு யாரு­டன் நோவது என்­ப­தி­லும் யார்க்­கெ­டுத்து உரைப்­பது என்­ப­தி­லும் தெரி­வு­கள் இருக்­கவே செய்­கின்­றன.

You might also like