யாரை ஆதரிக்கக்கூடாது என்பது தான் தமிழர்கள் முன்னுள்ள தெரிவு!!

இலங்கைப் பொது­மக்­கள் முன்­னணி சார்­பில் அடுத்த தேர்­த­லில் கள­மி­றங்­கப்­போ­கும் அரச தலை­வர் வேட்­பா­ளர் பாது­காப்பு அமைச்­சின் முன்­னாள் செய­லரும் முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்­ச­வின் தம்­பி­யு­மான கோத்­த­பாய ராஜ­பக்­ச­தான் என்­பது நேற்று உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­விக்­கப்­பட்­டா­யிற்று. மகிந்த குடும்­பத்­தில் இருந்து அதி­கா­ர நாற்கா­லிக்­காக வந்­தி­ருக்­கக்­கூ­டிய மற்­றொரு நப­ராக மீண்டும் குடும்ப ஆதிக்­கத்­தின் வெளிப்­பா­டாக வந்­தி­றங்­கி­யி­ருக்­கி­றார் கோத்­த­பாய.

மகிந்த அணி­யி­லி­ருந்து அடுத்த வேட்­பா­ள­ராக அவர் கள­மி­றங்­கு­வார் என்­கிற எதிர்­பார்ப்­பும் எதிர்­வு­கூ­றல்­க­ளும் நீண்ட நாள்­க­ளா­கவே இருந்து வந்­தி­ருக்­கின்­றன. ஆனால், தமி­ழர்­க­ளு­ட­னான போரில் நீண்ட போர்க் குற்­றச்­சாட்­டுக்­களை எதிர்கொண்டுள்ளவரும் பன்­னாட்­டுச் சமூ­கத்­து­டன் முரட்­டுத்­த­ன­மான உற­வைப் பேணு­ப­வ­ரும் சீனா­வு­ட­னான மகிந்­த­வின் அதி­க­ரித்த இணக்­கத்துக்கு முது­கெ­லும்­பாக இருந்­த­வ­ரு­மான அவரை மேற்கு நாடு­கள் ஏற்­றுக்­கொள்­ளுமா என்கிற தயக்­கம் கார­ண­மாக ஒரு­வேளை அவர் வேட்­பா­ள­ராக அறி­விக்­கப்­ப­டா­மல் இருக்­கக்­கூ­டும் என்­கிற சிறு நம்­பிக்­கை­யும் கூ­டவே இருந்து வந்­தது. ஆனால் அந்த நம்­பிக்கை இப்­போது பொய்த்­துப்­போய்­விட்­டது.

வேட்­பா­ள­ரா­கக் கோத்­த­பாய அறி­விக்­கப்­பட்­ட­தன் மூலம், மகிந்த குடும்­பம் மீண்­டும் ஒரு அதி­கார வேட்­டைக்கு முழு மூச்­சு­டன் கள­ம­றிங்­கி­விட்­டது. இந்­தப் பய­ணத்­தில் தலைமை அமைச்­சர் நாற்­கா­லி­யில் மகிந்­த­வும் கண் வைத்­தி­ருக்­கி­றார். ஒரு­வேளை இரு­வ­ருமே எதிர்­வ­ரும் அரச தலை­வர் தேர்­த­லி­லும் நாடா­ளு­மன்­றத் தேர்­த­லி­லும் வெற்­றி­பெற்­று­விட்­டால், அர­ச­மைப்­பின் 19ஆவது திருத்­தத்தை இல்­லா­தொ­ழித்­து­விட்டு மீண்­டும் நிறை­வேற்று அதி­கார அரச தலை­வர் முறை­மை­யைக் கொண்டு வரு­வ­தற்கு மகிந்த முய­லக்­கூ­டும். அத்­த­கைய தரு­ணத்­தில் அந்­தப் பத­வியை மகிந்­த­வுக்கு விட்­டுக்­கொ­டுக்­கக்­கூ­டி­ய­வ­ரான, நம்­பிக்­கை­யான ஒரு­வரே அந்­தப் பத­வி­யில் இருக்­க­வேண்­டும். அதற்­குத் தனது தம்­பி­யை­விட நம்­பிக்­கை­யான ஒரு­வரை மகிந்த கண்­டு­பி­டித்­து­விட முடி­யாது என்­பது யதார்த்­தம்­தான்.

அதற்­கும் மேலாக, தமி­ழர்­கள் மீதான போரை வென்று கொடுத்த சூத்­தி­ர­தாரி என்­கிற விம்­ப­மும் கோத்­த­பாய மீது விழு­வ­தால் அவர் ஒரு வெற்­றிக் குதிரை என்று மகிந்த நம்­பி­ய­தில் வியப்­பில்லை. எனவே பரப்­பு­ரை­க­ளி­லும் தேர்­தல் மேடை­க­ளி­லும் போரும் படை­யி­ன­ரும் போர் வெற்­றி­க­ளும் இனி விர­விக் கிடக்­கும் என்­ப­தில் ஐய­மில்லை. அத­னைப் பெரு முத­லீ­டா­கக் கொண்டே மகிந்த அணி­யி­னர் தேர்­தலை எதிர்­கொள்­வார்­கள்.

அதற்­கெ­தி­ரா­கப் பலம்­மிக்க ஒரு வேட்­பா­ளர் ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் சார்­பில் உள்­ளாரா என்­கிற கேள்­வி­யும் இருக்­கின்­றது. 2015 போன்று கடைசி நேரத்­தில் ஒரு புதிய முகம் எல்­லோ­ரை­யும் ஆச்­ச­ரி­யப்­ப­டுத்­தக்­கூ­டிய வகை­யில் அந்­தக் கட்­சி­யின் தேர்­தல் களத்­துக்கு வரும் சாத்­தி­யங்­கள் பெரு­ம­ள­வில் இல்லை.

அநே­க­மாக சஜித் பிரே­ம­தாஸ வேட்­பா­ள­ரா­க­லாம். அவ­ருக்­குக் கணி­ச­மான ஆத­ரவு சிங்­கள மக்­க­ளி­டம் இருக்­கின்­ற­ போதும், கோத்­தப­ாய­வை­யும் சிங்­கள உணர்­வ­லை­களை கிளர்ந்­தெழ வைக்­கப்­போ­கும் போர் முழக்­கங்­க­ளை­யும் தாண்டி வெற்­றி­யைப் பெற­மு­டி­யுமா என்­பது இப்­போது வரை­யில் கேள்­விக்­கு­ரி­ய­து­தான்.

இந்த நிலை­யில் துர­திர்ஷ்டவ­ச­மா­கத் தமி­ழர்­கள் முன்­னுள்ள தெரிவு யாரை ஆத­ரிப்­பது என்­ப­தாக இல்­லா­மல் யாரை ஆத­ரிக்­கக்­கூ­டாது என்­ப­தா­கவே அமைந்து வரு­கி­றது. 1994ஆம் ஆண்டு அரச தலை­வ­ராக சந்­தி­ரிக குமா­ர­ண­துங்­கவை விருப்­பப்­பட்­டுத் தேர்வு செய்­த­தற்­குப் பின்­ன­ரும் முன்­ன­ரும் யாரை அரச தலை­வ­ராக்­கக்­கூ­டாது என்­ப­தற்­கா­கவே வாக்­க­ளிக்­கும் நிலை­யில்­தான் தமி­ழர்­கள் இருக்­கி­றார்­கள். இப்­போ­தும் அதே நிலை­யில்­தான் இருக்­கி­றார்­கள்.

You might also like