side Add

யாழ்ப்­பா­ணம் லீக்­கின் தொடர் பொற்­பதி அணி அதி­ர­டி­யாட்­டம்

யாழ்ப்­பா­ணம் கால்­பந்­தாட்ட லீக்­கின் 75ஆவது ஆண்டு நிறைவை முன்­னிட்டு நடத்­தப்­பட்ட கால்­பந்­தாட்­டத் தொட­ரில் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்ற ஆட்­டத்­தில் பொற்­பதி விளை­யாட்­டுக் கழக அணி வெற்­றி­பெற்­றது.

அரி­யாலை கால்­பந்­தாட்­டப் பயிற்சி நிலைய மைதா­னத்­தில் நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை இடம்­பெற்ற இந்த ஆட்­டத்­தில் பொற்­பதி விளை­யாட்­டுக் கழக அணியை எதிர்த்து மணி­யந்­தோட்­டம் விளை­யாட்­டுக் கழக அணி மோதி­யது.

முதற்­பாதி ஆட்­டத்­தில் பொற்­பதி விளை­யாட்­டுக் கழக அணி 2:0 என்ற கோல் கணக்­கில் முன்­னிலை வகித்­தது. பொற்­பதி விளை­யாட்­டுக் கழக அணி­யின் சார்­பில் றொக்­சன், யது­ஷன் ஆகி­யோர் கோல்­க­ளைப் பதி­வு­செய்­த­னர்.

இரண்­டாம் பாதி ஆட்­டத்­தில் பொற்­பதி விளை­யாட்­டுக் கழக அணி­யின் சார்­பில் யனு­சி­யன் இரண்டு கோல்­க­ளைப் பதிவு செய்­தார். இதை­ய­டுத் ஆட்ட நேர முடி­வில் 4:0 என்ற கோல் கணக்­கில் பொற்­பதி விளை­யாட்­டுக் கழக அணி வெற்­றி­பெற்­றது.

You might also like