ரணில் விக்கிரமசிங்கவை சாடுவதால் மைத்திரியின் மதிப்பே குறைகின்றது

ஹரின் பெர்னாண்டோ கூறுகின்றார்

சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் மாநாட்­டில் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன, ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வைச் சாடி­னார். அவர் இவ்­வாறு செய்­வ­தன் ஊடாக, அவ­ரது மதிப்பே மக்­கள் மத்­தி­யில் குறை­வ­டைந்து செல்­கின்­றது. அவர் அதனை உண­ர­வேண்­டும். இவ்­வாறு ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும் அந்­தக் கட்­சி­யின் பேச்­சா­ள­ரு­மான ஹரின் பெர்­னாண்டோ தெரி­வித்­தார்.

நாடா­ளு­மன்ற வளா­க­தத்­தில் நேற்று இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லா­ளர் சந்­திப்­பி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.

அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

அரச தலை­வர் மைத்­தி­ரி­பா­ல­வுக்கு எவ்­வி­டத்­தில் எவ்­வி­ட­யம் தொடர்­பில் கருத்­துக்­களை வெளி­யிட வேண்­டும் என்ற வரை­மு­றை­கள் ஏதும் இல்லை. சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் மாநாடு இடம் பெற்­றது. அதில் அவர் கட்­சி­யின் தலை­வர் என்ற ரீதி­யில் கலந்து கொண்டு கட்­சி­யின் கொள்கை பரப்­பு­ரையை மேற்­கொண்­டி­ருக்க வேண்­டும்.
ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யைத் தூற்­று­வதே அவ­ரின் தற்­போ­தைய கொள்­கைப் பரப்­பு­ரை­யா­கக் காணப்­ப­டு­கின்­றது. சுதந்­தி­ரக் கட்சி மாநாட்­டில் அவர் ஐக்­கிய தேசி­யக் கட்­சியை மிக­வும் தாழ்த்­திப் பேசி­ய­மை­யின் கார­ண­மாக கட்­சிக்­குள் எவ்­வி­த­மான பிள­வு­க­ளும் ஏற்­ப­டாது. இன்று பலம் பொருந்­திய கட்­சி­யான சுதந்­தி­ரக் கட்சி இவ­ரது செயற்­பாட்­டின் கார­ண­மான பல­வீ­ன­ம­டைந்து வரு­வது கவ­லைக்­கு­ரி­யது.

ரணி­லைத் தூற்­றி­ய­தன் ஊடாக எவ­ரது நன்­ம­திப்பு மழுங்­க­டிக்­கப்­பட்­டுள்­ளது என்­பதை மைத்­திரி அறிந்து கொள்­ள­வேண்­டும். நாட்­டுத் தலை­வர் என்ற ரீதி­யில் இவர் தீர்க்­க­மான முடி­வு­களை மேற்­கொள்ள வேண்­டும். அதனை விடுத்து பிற­ரைக் குற்­றம் சாட்­டு­வது சிறு­பிள்­ளைத் தன­மா­னது.

அரச தலை­வ­ரின் மன­நிலை சீரா­கவா உள்­ளது என்று நாட்டு மக்­கள் கேள்­வி­யெ­ழுப்­பு­கின்­ற­னர். இது­வ­ரை­யில் அர­சி­யல் நெருக்­க­டி­க­ளுக்­குத் தீர்வு காண இவர் எவ்­வி­த­மான முன்­னேற்­ற­க­ர­மா­னத் தீர்­மா­னங்­க­ளை­யும் மேற்­கொள்­ள­வில்லை. தொடர்ச்­சி­யாக அர­ச­மைப்­புக்கு முர­ணான செயற்­பட்டு வரு­வ­தால் அர­சி­யல் நெருக்­கடி தீவி­ர­ம­டைந்தே வரு­கின்­றது என்­றார்.

You might also like