side Add

வடக்­குக்கு ஒரு தமிழ் ஆளு­நரை நிய­மி­யுங்­கள்!!

ஆளு­நர்­கள் மாற்­றம் இடம்­பெற்று வரு­கின்­றது. மகிந்த மீண்­டும் ஆட்­சி­யைக் கைப்­பற்­று­வ­தற்­கா­கப் போடப்­பட்ட முயற்­சி­கள் தோல்­வி­ய­டைந்­த­தைத் தொடர்ந்­தும், மைத்­தி­ரிக்கு எதி­ராக முன்­னாள் அரச தலை­வர் சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­றண­துங்க நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை அணி திரட்­டு­வ­தற்கு எடுக்­கும் முயற்­சி­க­ளுக்கு வடக்கு ஆளு­ந­ரும் ஆத­ரவு தெரி­வித்­தார் என்று கூறப்­ப­டு­வ­தைத் தொடர்ந்­தும் அனைத்து ஆளு­நர்­க­ளும் மாற்­றப்­பட்டு வரு­கின்­ற­னர்.

அரச தலை­வர் செய­ல­கம் நேற்று விடுத்த அறிக்­கை­யின்­படி 5 ஆளு­நர்­கள் புதி­தாக நிய­மிக்­கப்­பட்­டுள்­ளார்­கள். இதில் குறிப்­பி­டப்­ப­ட­வேண்­டி­ய­தாக கிழக்கு மாகா­ணத்துக்கு முஸ்­லிம் ஒரு­வர் ஆளு­ந­ராக நிய­மிக்­கப்­பட்­டி­ருக்­கி­றார். மேல் மாகா­ணத்துக்கு அசாத் சாலி­யும் மத்­திய மாகா­ணத்துக்கு சத்­தேந்­திர மைத்­திரி குண­ரத்­ன­வும் வட­மத்­திய மாகா­ணத் துக்கு சரத் ஏக்­க­நா­யக்­க­வும் வட­மேல் மாகா­ணத்துக்கு பேசல ஜய­ரத்ன பண்­டா­ர­வும் கிழக்கு மாகா­ணத்துக்கு எம்.எல்.ஏ.எம்.-ஹிஸ்­புல்­லா­வும் நிய­மிக்­கப்­பட்­டி­ருக் கி­றார்­கள்.

வடக்கு மாகா­ணத்துக்கும் ஆளு­ந­ரா­கத் தமி­ழர்­க­ளின் பெயர்­க­ளைப் பரிந்­து­ரைக்­கு­மாறு கேட்­டுப் பெற்­றுள்­ளார் அரச தலை­வர் என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. அதன்­படி இரு­வ­ரின் பெயர்­கள் அவ­ருக்கு வழங்­கப்­பட்­டி­ருப்­ப­தா­க­வும் தக­வல்­கள் உண்டு. நீண்ட காலத்­தின் பின்­னர் கிழக்கு மாகா­ணத்துக்கு ஒரு முஸ்­லிம் ஆளு­நரை நிய­மித்­த­மை­போன்றே வடக்கு மாகா­ணத்துக்கும் தமிழ் ஆளு­நர் ஒரு­வரை நிய­ம­னம் செய்­வது சிறப்­பா­ன­தாக இருக்­கும். அரச தலை­வர் இந்த விட­யத்­தை­யா­வது தமி­ழர்­க­ளுக்­குச் சாத­க­மா­கப் பரி­சீ­லித்து தமி­ழர் ஒரு­வரை வடக்கு மாகாண ஆளு­ந­ராக நிய­மிப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டும்.

மாகாண சபை­கள் பத­வி­யில் இல்­லாத நிலை­யில் மாகா­ணத்­தின் ஆளுகை அதி­கா­ரம் அடுத்த மாகாண சபைத் தேர்­தல்­கள் வரை­யில் ஆளு­ந­ரி­டமே இருக்­கப்­போ­கின்­றது. எனவே தமிழ் பேசும் ஆளு­நர்­கள் வடக்கு, கிழக்கு மாகா­ணங்­க­ளில் பத­வி­யில் இருப்­பது சிங்­கள ஆளு­நர்­கள் பத­வி­யில் இருப்­ப­தால் ஏற்­ப­டும் பாதிப்­பு­க­ளைக் குறைப்­ப­தற்கு வழி­வ­குக்­கக்­கூ­டும்.
தமி­ழர் அல்­லது முஸ்­லிம் ஒரு­வர் ஆளு­ந­ராக வரு­வ­த­னால் மாகா­ணத்­தின் நலன்­க­ளில் மாற்­றம் வந்­து­வி­டும் என்றோ அவர்­க­ளால் தமிழ் பேசும் மக்­க­ளுக்கு அதி­க­ள­வில் நன்­மை­க­ளைச் செய்­து­விட முடி­யும் என்றோ நம்­பு­வது முட்­டாள்­த­னம். வடக்கு, கிழக்கு மாகா­ணங்­க­ளில் தமிழ் பேசும் ஆளு­நர்­கள் நிய­மிக்­கப்­ப­டு­வ­தன் மூலம் மாகாண சபை­க­ளுக்­கும் ஆளு­நர்­க­ளுக்­கும் இடை­யி­லான அதி­கார முரண்­பா­டு­கள் தீர்க்­கப்­பட்­டு­வி­டும் என்று நினைப்­ப­தும் அறி­யாமை.

இலங்­கை­யின் அர­ச­மைப்­பின்­படி, அதன் அரச பொறி­ மு­றைக்­குள் இருந்­து­கொண்டு தமிழ் பேசும் ஆளு­நர்­க­ளா­லும் செயற்­ப­டுத்த முடி­யப்­போ­கும் விட­யங்­கள் மிகச் சொற்­ப­மா­ன­வையே. மாகாண சபை­கள் ஆட்­சி­யில் இருக்­கும் சம­யத்­தில் இத்­த­கைய நிய­ம­னங்­கள் செய்­யப்­பட்­டி­ருந்­தால் இரு அதி­கார மையங்­க­ளுக்­கும் இடை­யி­லான அதி­கார முரண்­பாட்டு நிலையை இல­கு­வா­கக் கையாள்­வ­தற்­கா­வது முடிந்­தி­ருக்­கும். அப்­ப­டி­யில்­லா­மல் மக்­க­ளால் தேர்த்­தெ­டுக்­கப்­பட்ட மாகாண சபை ஆட்­சிக் குழு ஒன்று பத­வி­யில் இல்­லாத நிலை­யில் தமிழ் பேசும் ஆளு­நர்­களை வடக்கு, கிழக்கு மாகா­ணங்­க­ளில் நிய­ம­னம் செய்­வ­தால் கிட்­டக்­கூ­டிய பெரும் பயன்­கள் எவை­யும் இல்லை என்­றா­லும் இது ஒரு ஆறு­தல்.

முடிந்த வரை­யில் ஒரு சில­வற்­றை­யா­வது தமிழ் மக்­கள் நலன் கரு­திச் செய்­வ­தற்கு அவர்­கள் முன்­வ­ரக்­கூ­டும். அதி­லும் மாகாண சபை­கள் தொடர்­பில் அனு­ப­வ­மும் அறி­வும் உள்­ள­வர்­கள் நிய­மிக்­க­பட்­டால் அது இன்­னும் நன்மை பயப்­ப­தாக அமை­யும். இவற்­றைக் கையில் எடுத்து தமிழ் ஆளு­நர் ஒரு­வரை வடக்கு மாகா­ணத்துக்கு தலைமை அமைச்­சர் நிய­ம­னம் செய்­வது நல்­லது.

You might also like