வர்த்தக நிலையத்துக்குள் புகுந்து இளைஞர் குழு அட்டகாசம்!!

வவுனியா தொடருந்து நிலைய வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்துக்குள் இன்று காலை புகுந்த இளைஞர் குழு தாக்குதல் மேற்கொண்டதில் இருவர் காயமடைந்தனர்.

பழங்கள் விற்பனை செய்யும் நபருக்கும்,வர்த்தக நிலைய உரிமையாளருக்கும் இடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து பட்டா ரக வாகனத்தில் பழ வியாபாரம் மேற்கொண்ட நபர், இளைஞர் குழுவை வரவழைத்து தாக்குதல் மேற்கொண்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தில் வர்த்தக நிலையத்தில் கடமையாற்றும் இரு ஊழியர்கள் காயமடைந்தனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like