வள்ளுவருக்கு 133 அடியில் சிலை அமைத்தார் கருணாநிதி!!

0 26

பகுதி-24

கலை­ஞர் கரு­ணா­நிதி தனது எழுத்­துக்­க­ளால் தமி­ழுக்­குப் பங்­க­ளித்­தி­ருக்­கி­றார். தனக்­கெ­ன­வொரு தனித்­து­வ­மான இடத்­தி­னைப் பதிவு செய்­துள்­ளார். இத­னை­யெல்­லாம் தாண்டி அவர் தமி­ழுக்­குச் செய்த பங்­க­ளிப்­பாக சில வர­லாற்று முக்­கி­யத்­து­வம் வாய்ந்த விட­யங்­க­ளைக் குறிப்­பி­டு­கி­றார்­கள். அதில் கும­ரிக்­கண்­டத்­தில் 133 அடி வள்­ளு­வர் சிலையை நிறு­வி­யது, மெரீ­னா­வில் தமிழ் அறி­ஞர்­கள் பெரி­யார்­க­ளின் சிலை­களை நிறு­வி­யது, வள்­ளு­வர் கோட்­டம் நிறு ­வி­யது, ஆசி­யா­வி­லேயே பெரிய நூல­க­மான அண்ணா நூல­கத்தை நிறு­வி­யது, தமி­ழுக்கு செம்­மொழி அந்­தஸ்­தைப் பெற்­றுக் கொடுத்­தது, தமி­ழுக்கு செம்­மொழி மகா­நாடு நடத்­தி­யது, மனோன்­ம­ணி­யம் சுந்­த­ரம் பிள்ளை எழு­திய ‘நீரா­டும்’ என்ற பாடலை தமிழ்த்­தாய் வாழ்த்­தாக அரசு விழாக்­க­ளில் பாடும் வழக்­கத்தை 1970ஆம் ஆண்­டில் ஏற்­ப­டுத்­தி­யது போன்ற பல­வற்றை அடிக்­கிக் கொண்டு போகி­றார்­கள். இவற்றை ஒவ்­வொன்­றா­கப் பார்க்­க­லாம்.

கலை­ஞ­ரின் சிந்­தனை
தமிழ்­நாடு அரசு திரு­வள்­ளு­வ­ருக்கு கன்­னி­யா­கு­ம­ரிக் கட­லில், கடல் நடுவே, நீர் மட்­டத்­தி­லி­ருந்து 30 அடி உய­ர­முள்ள பாறை மீது 133 அடி உய­ரச் சிலை அமைத்­துள்­ளது. உல­கில் இது­போன்ற கருங்­கற்­க­ளால் ஆன சிலை கிடை­யாது. இந்த சிலை அமைப்­ப­தற்­கான திட்­டத்தை முன்­மொ­ழிந்­த­வர் கலை­ஞர் கரு­ணா­நிதி. 1975 டிசம்­பர் மாதம்­த­மிழ்­நாடு அரசு சார்­பில், கன்­னி­யா­கு­ம­ரி­யில் திரு­வள்­ளு­வர் சிலை அமைக்­கப்­ப­டும் என்று அப்­போ­தைய முதல் அமைச்­சர் கரு­ணா­நிதி அறி­விக்­கி­றார். அந்த அறி­விப்பு வெளி­யான சில நாள்­க­ளில் அவ­ரது ஆட்சி கலைக்­கப்­பட்டு விட்­ட­தால் அவ­ரால் அந்­தத் திட்­டத்­தைத் தொடங்க முடி­ய­வில்லை. பின்­னர் முதல் அமைச்­ச­ரா­கப் பதவி ஏற்ற எம்.ஜி.ஆர். கன்­னி­யா­கு­ம­ரி­யில் 40 அடி பீடத்­தின் மீது 30 அடி உயர திரு­வள்­ளு­வர் சிலை அமைக்­கப்­ப­டும் என்று அறி­வித்­தார். குன்­னி­யா­கு­ம­ரி­யில் வள்­ளு­வர் சிலை அமைக்­கும் பணியை எம்.ஜி.ஆர். முன்­னி­லை­யில் மொரார்ஜி தேசாய் தொடங்கி வைத்­தார்.

பணி­கள் ஆரம்­பம்
1989ஆம் ஆண்­டில் மீண்­டும் முத­ல­மைச்­ச­ரா­கப் பொறுப்­பேற்­றார் கரு­ணா­நிதி. உட­னேயே விரை­வில் திரு­வள்­ளு­வர் சிலை அமைக்­கப்­ப­டும் என்று அறி­வித்­தார். 1990ஆம் ஆண்­டில் திரு­வள்­ளு­வர் சிலை எழுப்­பும் பணியை கரு­ணா­நிதி தானே உளி­யைக்­கொண்டு செதுக்கி தொடங்கி வைத்­தார். வள்­ளு­வர் சிலையை, வள்­ளு­வர் கோட்­டத்தை உரு­வாக்­கிய கண­பதி ஸ்தபதி உரு­வாக்­கி­னார். அவர் தலை­மை­யில் 500 சிற்­பி­கள் சிலையை உரு­வாக்­கும் பணி­யில் ஈடு­பட்­ட­னர். இந்­திய மத்­தி­ய­ரசு இந்­தப் பணிக்­கும் முட்டுக்­கட்டை போட்­டது. திரு­வள்­ளு­வர் சிலையை அமைப்­ப­தால், கன்­னி­யா­கு­ம­ரி­யில் உள்ள வெளிச்ச வீட்­டிற்கு இடை­யூறு ஏற்­ப­டும் என்று கூறி, திரு­வள்­ளு­வர் சிலையை அமைக்க வேண்­டா­மென்று 1994ஆம் ஆண்­டில் இந்­திய மத்­திய அரசு தடை விதித்­தது. ஆனால், 1996ஆம் ஆண்­டில் கரு­ணா­நிதி மீண்­டும் முதல் அமைச்­ச­ரா­கப் பொறுப்­பேற்­றார்., திரு­வள்­ளு­வர் சிலை அமைக்­கும் பணிக்கு மீண்­டும் உயிர் கொடுத்­தார்.

குறட்­பாக்­க­ளைக் கொண்­ட­மைந்த சிலை
1999ஆம் ஆண்­டில் சிலை அமைக்­கும் பணி­கள் முடி­வ­ டைந்­தன. 38 அடி உய­ர­மான பீடத்­தில் 95 அடி உய­ர­மான சிலை அமைக்­கப்­பட்­டுள்­ளது. அதா­வது, பீடத்­தை­யும் சேர்த்து சிலை­யின் மொத்த உய­ரம் 133 அடி. மொத்த எடை 7 ஆயி­ரம் தொன். 3 ஆயி­ரத்து 681 கற்­க­ளைக்­கொண்டு, சிலை அமைக்­கப்­பட்­டுள்­ளது. திரு­வள்­ளு­வர் சிலையை அமைப்­ப­தற்கு மொத்த செலவு ரூ.10 கோடி ஆகும். இதில் 133 குறட்­பாக்­கள் பொறிக்­கப்­பட்­டுள்­ளன.

திரு­வள்­ளு­வர் சிலை அமைக்­கும் பணி 1990ஆம் ஆண்­டில் ஆரம்­பிக்­கப்­பட்டு 2000ஆம் ஆண்டு ஜன­வரி முத­லாம் திகதி சிலை திறக்­கப்­பட்­டது.
சிலை­யி­னுள் 130 அடி உய­ரம் வரை வெற்­றி­டம் உள்­ளது. இந்த வெற்­றி­டம் சிலை­யின் உறுதித் தன்­மையை உறு­திப்­ப­டுத்­து­கி­றது. பீடத்­தின் 38 அடி உய­ர­மா­னது திருக்­கு­ற­ளின் அறத்­துப்­பா­லின் 38 அதி­கா­ரங்­க­ளை­யும், பீடத்­தின் மேல் நிற்­கும் 95 அடி உய­ரச் சிலை­யா­னது திருக்­கு­ற­ளின் பொருள் மற்­றும் இன்­பத்­துப்­பா­லின் 95 அதி­கா­ரங்­க­ளை­யும் குறிப்­ப­தா­கத் திகழ்­கின்­றது. மண்­ட­பத்­தின் உட்­பு­றச் சுவற்­றில் ஒவ்­வொரு அதி­கா­ரத்­தி­லி­ருந்து ஒரு குறள் வீதம் 133 குறட்­பாக்­கள் தமி­ழி­லும் அவற்­றுக்கு நிக­ராக ஆங்­கில மொழி பெயர்ப்­பி­லும் பொறிக்­கப்­பட்­டுள்­ளன.

இரு­ப­தாம் நூற்­றாண்டு முடிந்து 21ஆம் நூற்­றாண்டு பிறந்த வேளை­யில், கும­ரி­ மு­னை­யில் 133 அடி உயர திரு­வள்­ளு­வர் சிலையை அப்­போதைய முத­ல­மைச்­சர் கரு­ணா­நிதி திறந்து வைத்­தார்.

அந்த விழா­வில் கலந்து கொண்ட சிவா­ஜி­ க­ணே­சன் ‘‘தாஜ்­ம­ஹா­லைப் போல தஞ்­சைக் கோவி­லைப்­போல இந்­தத் திரு­வள்­ளு­வர் சிலை­யும், இதை அமைத்த கரு­ணா­நி­தி­யும் நீடித்து நிற்­பார்­கள்’’ என்று கூறி­னார். இந்த விழா­வில் கரு­ணா­நிதி பேசு­கை­யில், ‘‘திரு­வள்­ளு­வரை இனி கவி­ஞன் என்றோ, புல­வன் என்றோ அழைக்­கா­தீர்­கள். தெய்­வாம்­சம் பொருந்­திய அவரை ‘அய்­யன்’ என்றே அழை­யுங்­கள்’’ என்­றார்.

(தொட­ரும்)

You might also like