வவுனியாவில் இராணுவம் குவிப்பு!!

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை மற்றும் மதீனாநகர் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஆகியவற்றிற்கு கடிதம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கபட்டிருந்ததையடுத்து வவுனியா நகர் முழுவதும் இராணுவத்தினரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

வவுனியா புதிய பேரூந்து நிலையத்துக்கு முன்பாக இராணுவத்தினரால் புதிதாக சோதனைச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

வவுனியா மன்னார் வீதி காமினி மகா வித்தியாலயத்துக்கு முன்பாக பாதையின் இரு பகுதியிலும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு வவுனியா நகரினுள் உள்செல்லும் மற்றும் வெளிச்செல்லும் வாகனங்கள் கடுமையான சோதனைக்குட்படுத்தப்படுகின்றன.

You might also like