side Add

வாழ்வை அழிக்கும் போதை!!

தற்­போ­தைய இளம் சமூ­கத்­தின் மத்­தி­யில் பெரும் பிரச்­சி­னை­யாக உரு­வெ­டுத்­துள்­ளது போதைப் பொருள். வடக்­கி­லும் அது பூதா­க­ர­மான பிரச்­சி­னை­யாக உரு­வெ­டுத்­துள்­ளது.

சம­கால சமூ­கத்­துக்­குப் பெரும் சவா­லாக போதைப் பொருள் பாவ­னை­யும் அவற்­றின் விளை­வு­க­ளும் காணப்­ப­டு­கின்­றன. சிறு குற்­றங்­கள் முதல் பெரும் குற்­றங்­கள் வரை அனைத்­தின் பின்­ன­ணி­யி­லும் போதைப் பொருள் பாவனை உள்­ளது.

தனி­யாள் தொடர்­பு­டைய விவ­கா­ர­மாக ஆரம்­பித்து அது நாள­டை­வில் சமூ­கத்­துக்கு அச்­சு­றுத்­தல் கொடுக்­கும் விவ­கா­ர­மாக பரி­ணா­மம் பெற்­றுள்­ளது. போதைப் பொருள் பாவனை நாட்­டின் சட்­டங்­க­ளுக்­கும், அர­சுக்­கும் பெரும் சவா­லான விட­ய­மாக மாற்­றம் பெற்று வரு­கின்­றமை அச்­சம் தரும் விட­ய­மா­கும்.

அவ­சர தேவை
சுமு­க­மான வாழ்­வுக்­குச் சவா­லாக மாறி­யுள்ள போதைப் பொருள் பாவனை பற்றி ஆராய வேண்­டிய அவ­சி­ய­மும், அவ­ச­ர­மும் தற்­போது எழுந்­துள்­ளது என்­பது மறுக்க முடி­யாத உண்மை. மது, புகை, போதைப் பொருள்­களை நாம் எந்­த­ளவு உப­யோ­கப்­ப­டுத்­து­கின்­றோம் என்­ப­தல்ல விட­யம், சிறிய அள­வா­கி­லும் அவற்­றால் ஏற்­ப­டும் பிரச்­சி­னை­கள் பார­தூ­ர­மா­னவை என்­பதை உணர்ந்­து­கொள்ள வேண்­டும்.

ஒரு­வர் போதைப் பொருள் பாவ­னைக்கு அடி­மை­யா­வ­தற்­குப் பல கார­ணங்­கள் உள்­ளன. தனி­மைப்­ப­டல், அந்­நி­ய­மா­தல், வேலைப் பழு, தகுந்த பொழு­து­போக்கு இன்மை, விரை­வா­கப் பர­வும் வேற்­று­நாட்­டுக் கலா­சா­ரப் போக்­குள், சட்­டங்­க­ளில் காணப்­ப­டும் இறுக்­க­மற்ற தன்மை எனப் பல கார­ணங்­களை அடுக்­க­லாம். போதைப் பொருள் பாவ­னை­யில் உள்ள ஒவ்­வொ­ரு­வ­ரும் அவற்­றால் ஏற்­ப­டும் தீமை­களை விளங்­கிக் கொள்ள வேண்­டும்.

எமது சமூ­கம் என்ற நிலையை மாற்­றிப் பல சீர்­கே­டு­க­ளைச் செய்­யு­ம­ளவு போதைப் பொருள் பாவனை மாற்றி விடு­கின்­றது என்­பதை அவர்­கள் புரிந்­து­கொள்ள வேண்­டும். போதைப் பொருள் பாவ­னை­யில் உள்ள ஒரு­வர் சமூ­கத்­துக்­குக் கேடு தரும் ஒரு­வ­ரா­கவே சமூ­கத்­தால் இனங்­கா­ணப்­ப­டு­கின்­றார்.

மனப் பிறழ்வு
போதைப் பொருள் பாவனை மனி­தர்­க­ளின் உணர்­வு­க­ளைச் சித­ற­டித்து அற்­பத்­த­ன­மான விட­யங்­க­ளில் ஈடு­கொள்­ளச் செய்து இறு­தி­யில் சமூக விரோ­தச் செயல்­க­ளைச் செய்­யும் அள­வுக்கு மாற்­றி­வி­டு­கின்­றது. இந்த உண்­மையை அனை­வ­ரும் புரிந்­து­கொள்ள வேண்­டும். சமூ­கத்­தில் நடந்த பல சமூ­கப் பிறழ்­வுச் செயற்­பா­டு­க­ளுக்­கும் போதைப் பொருள் பாவ­னையே கார­ண­மாக அமைந்­தி­ருந்­தமை அனை­வ­ருக்­கும் தெரிந்­ததே.

வடக்கு மாகா­ணத்­தி­லும் அவ்­வா­றான சம்­ப­வங்­கள் நடந்­துள்­ளது. சுழி­பு­ரத்­தில் சிறுமி கொலை, புங்­கு­டு­தீ­வில் மாணவி கொலை என போதைப் பொரு­ளுக்கு அடி­மை­யா­ன­தால் நடத்­தப்­பட்ட கொடூ­ரங்­களை அடுக்­கிக் கொண்டு செல்­ல­லாம். நினைத்­துக் கூடப் பார்க்க முடி­யாத அந்­தச் செயல்­க­ளைச் செய்­த­வர்­க­ளின் மன­நிலை எவ்­வாறு மாற்­றம் பெற்றிருக்க வேண்டும்? போதைப் பொருள் பாவ­னை­யால் அவர்­க­ளின் மன­நிலை எந்­த­ளவு கொடூ­ர­மாக மாற்­றம் பெற்­றி­ருக்­கின்­றது என்­ப­தைச் சிந்­திக்க வேண்­டும்.

இறுக்­கம் தேவை
நாம் ஒவ்­வொ­ரு­வ­ரும் போதைப் பொருள் பாவ­னை­யால் ஏற்­ப­டும் பாதிப்­பு­க­ளைக் கண்­டும், – கேட்­டும், – ஏதோ ஒரு­வ­கை­யில் அனு­ப­வித்­தும் உள்­ளோம். போதைப் பொருள் பாவனை எம்­மைச் சூழ­வுள்ள சமூ­கத்தை அழி­வுப் பாதைக்கு இட்­டுச் செல்­கின்­றது என்பதை எம்­மால் உணர முடி­கின்­றது. போதை­யற்ற சமூ­கத்தை உரு­வாக்க வேண்­டி­யது எம் ஒவ்­வொ­ரு­வ­ர­தும் கடமை என்­பதை உணர்ந்­து­கொள்ள வேண்­டும்.

அது­சார்ந்த விழிப்­பு­ணர்வு நட­வ­டிக்­கை­களை நாளுக்கு நாள் முன்­னெ­டுக்க வேண்­டும். தூர நோக்­குச் சிந்­த­னை­யு­டன் ஒவ்­வொ­ரு­வ­ரும் செயற்­பட்­டாலே போதைப் பொருள் பாவ­னையை எமது சமூ­கத்­தில் குறைக்க முடி­யும். போதைப் பொருள் பாவ­னை­யால் ஏற்­ப­டும் பாதிப்­புக்­கள் தொடர்­பாக இளைய சமு­தா­யத்­துக்கு சரி­யான விளக்­கத்­தை­யும், பரப்­பு­ரை­க­ளை­யும் மேற்­கொள்ள வேண்­டும்.

குற்­றம் என்­ப­தில் சிறிது பெரிது என்ற வேறு­பாடு இல்லை. அனைத்­துக் குற்­றங்­க­ளுக்­கும் தகுந்த தண்­டனை வழங்க வேண்­டும். சட்­டம் வலுப்­பெ­றின் எதிர்­கா­லத்­தில் சமு­கத்­தி­னர் திருந்­து­வ­தற்­கான வாய்ப்­புக்­கள் வலுப்­பெ­றும் என்­ப­தில் ஐய­மில்லை.

மது, புகை, போதை எவ்­வ­ளவு எடுக்­கப்­ப­டு­கி­றது என்­ப­தல்ல. சிறிது எடுத்­தா­லும் அதன் விளைவு பார­தூ­ர­மா­னது என்­பதே உண்மை. அதை மன­தில் பதிப்­பதே நன்மை.

ச.பிரி­யங்கா.
உள­வி­யல்­துறை, 4ஆம் வரு­டம்.
யாழ்.பல்­க­லைக்­க­ழ­கம்.

You might also like