விக்­னேஸ்­வ­ர­னின் போக்­கில் மாற்­றம் ஏற்­ப­டுமா?

சி.வி.விக்­னேஸ்­வ­ர­னின் சமீ­ப­கால நட­வ­டிக்­கை­கள் அவர் மனம் குழம்­பிய நிலை­யில் காணப்­ப­டு­வ­தைத் தௌிவாக எடுத்­துக் காட்­டு­கின்­றன. இறு­தி­யாக அவர் தெரி­வித்த கருத்­தொன்று பல­ரை­யும் குழப்­பத்­தில் ஆழ்த்­தி­விட்­டுள்­ளது.

சம்­பந்­த­னும், சுமந்­தி­ர­னும் கூட்­ட­மைப்­பில் நீடித்­தால் தமி­ழர்­க­ளால் விடுக்­கப்­ப­டு­கின்ற கோரிக்­கை­கள் சறுக்­கி­வி­டு­மென அவர் எதற்­கா­கக் கூறி­னா­ரென்­பது ஒரு­வ­ருக்­குமே புரிந்­த­தா­கத் தெரி­ய­வில்லை. தமி­ழர்­க­ளின் கோரிக்­கை­கள் நிறை­வே­று­வ­தற்கு எந்த வகை­யில் சம்­பந்­த­னும், சுமந்­தி­ர­னும் முட்­டுக்­கட்­டை­யாக இருக்­கி­றார்­கள் என்­ப­தும் புரி­ய­வில்லை. இது தொடர்­பாக வடக்கு முத­ல­மைச்­சர் தான் தௌிவு­ப­டுத்த வேண்­டும்.

கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரா­லேயே அர­சி­ய­லுக்கு அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­ட­வர் விக்­னேஸ்­வ­ரன்

கூட்­ட­மைப்­பில் இருந்து கொண்டே அதற்குக் குழி­தோண்­டிக் கொண்­டி­ருக்­கின்ற விக்­னேஸ்­வ­ ரன் கூட்­ட­மைப்­பின் முக்­கி­யஸ்­தர்­கள் தொடர்­பா­கப் பேசு­வ­தற்கு எந்த ஓர் அரு­க­தை­யும் இல்­லா­த­வர். அதி­லும் கூட்டமைப்பின் தலை­வர் சம்­பந்­தன் தொடர்­பா­கப் பேசு­வ­தற்கு அவர் ஒன்­றுக்­குப் பல தட­வை­கள் சிந்­தித்தே கருத்து வௌியிட வேண்­டும்.

விக்­னேஸ்­வ­ரன் தற்­போது அனு­ப­வித்­துக் கொண்­டி­ருக்­கும் பத­விச் சுகத்­தை­ யும், ஏனைய வரப்­பி­ர­சா­தங்­க­ளை­யும் வழங்­கி­ய­வர் சம்­பந்­தனே என்­பதை அவர் எவ்­வாறு இலே­சாக மறந்து போனார்? என்­பது புரி­ய­வில்லை. அர­சி­யலே தெரி­யா­த­வரை முத­ல­மைச்­சர் வேட்­பா­ள­ராக நிய­மித்து அந்­தப் பத­வி­யில் அமர்த்­திய ஒரு­வரை மறப்­ப­தும், அவ­ருக்கு எதி­ரா­கக் கருத்­துக்­க­ளைக் கூறு­வ­தும் நன்றி மறந்த செயல்­க­ளா­கவே கரு­தப்­ப­டல் வேண்­டும்.

நம்­பிக்­கை­யில்­லாப் பிரே­ர­ணை­யின்­போது தமக்­கான ஆத­ரவு குறித்த முத­ல­மைச்­ச­ரது தப்­புக்­க­ணக்கு

தமக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்­லாப் பிரே­ரணை கொண்­டு­வ­ரப்­பட்­ட­போது பெரு­ம­ள­வா­ன­வர்­கள் திரண்டு வந்து தம்மை ஆத­ரித்து நின்­ற­தா­க­வும், அந்த நன்­றிக்­க­ட­னைத் தீர்ப்­பது தமது கட­மை­யெ­ன­வும் வடக்கு முத­ல­மைச்­சர் மேலும் தெரி­வித்­துள்­ளார். இந்­தக் கூட்­டம் தானாக வந்து சேர­வில்லை என்­பதை அவர் முத­லில் புரிந்­து­கொள்ள வேண்­டும்.

அது­மட்­டு­மல்­லாது, அது விக்­னேஸ்­வ­ரனை ஆத­ரித்து நின்ற கூட்­ட­மு­மல்ல என்­ப­தை­யும் அவர் தெரிந்­து­கொள்ள வேண்­டும். தமி­ழ் அரசுக் கட்­சிக்­கும், கூட்­ட­மைப்­புக்­கும் எதி­ரான சந்­தர்ப்­ப­வாத தரப்­பி­னரே அங்கு திரண்­ட­னர். இந்­தத் தரப்­புக்­கள் தொடர்ந்­தும் தம்மை ஆத­ரித்து நிற்­கு­மென அவர் எதிர்­பார்ப்­பது மட­மைத்­த­ன­மா­னது.

கூட்­ட­மைப்­பை­யும் அதன் தலை­வர்­க­ளை­யும் தொடர்ந்து விமர்­சித்­து­வ­ரும் வடக்கு முத­ல­மைச்­சர், தொடர்ந்­தும் கூட்­ட­மைப்­பில் ஒட்­டிக்­கொண்­டி­ருப்­பது நியா­ய­மா­ன­தா­கத் தெரி­ய­வில்லை. சம்­பந்­தனை ஓரம்­கட்­டி­விட்டுத் தமிழ் அரசுக்கட்சி் தவிர்ந்த பங்­கா­ளிக் கட்­சி­க­ளின் ஆத­ர­வு­டன் தாமே தலை­மைப் பொறுப்பை ஏற்­ப­தற்கு அவர் திட்­ட­மி­டு­கின்­றாரோ என­வும் எண்­ணத் தோன்­று­கின்­றது. ஏனென்­றால், அவர் இனி­மேல் இன்­னொரு தலை­மைக்­குக் கட்­டுப்­ப­டு­வா­ரென எதிர்­பார்க்­கவே முடி­யாது. தம்­மைப் பத­வி­யில் அமர்த்­திய சம்­பந்­த­னையே தூக்கி எறிந்த இவ­ருக்கு மற்­ற­வர்­கள் எம்­மாத்­தி­ரம்?

தன்­முன்­னா­லுள்ள நான்கு தெரி­வு­கள்
குறித்து முத­ல­மைச்­ச­ரது விளக்­கம்
அர­சி­ய­லில் இருந்து ஒதுங்கி வீட்­டில் ஓய்­வு­கா­லத்தை அமை­தி­யா­கக் கழிப்­பது, தனிக்­கட்­சியை ஆரம்­பிப்­பது, இன்­னொரு. கட்­சி­யு­டன் இணைந்து செயற்­ப­டு­வது, தமிழ் மக்­கள் பேர­வை­யைப் பலப்­ப­டுத்­திச் செயற்­ப­டு­வது ஆகிய நான்கு தெரி­வு­கள் தம்­மி­டம் உள்­ள­தா­க­வும், இவற்­றுள் ஒன்­றைத் தாம் தெரிவு செய்ய முடி­யு­மெ­ன­வும் விக்­னேஸ்­வ­ரன் கூறி­யி ­ருந்­தார்.

அவர் தமக்­கும் அர­சி­ய­லுக்­கும் வெகு­தூ­ரம் என்­பதை இப்­போ­தா­வது புரிந்­து­கொண்­டி­ருப்­பார். அடுத்­த­டுத்து அவர் எதிர்­கொள்­கின்ற பிரச்­சி­னை­கள், அவர் வகித்த பத­விக்குக் களங்­கத்தை ஏற்­ப­டுத்­தி­விட்­டன. அது­மட்­டு­மல்­லாது மக்­கள் மத்­தி­யி­லும் அவ­ரது மதிப்பு மங்­கி­விட்­டது என்­று­தான் கூற­வேண்­டும்.

உயர் நீதி­மன்ற நீதி­ய­ர­சர் பத­வி­யி­லி­ருந்து ஓய்வு பெற்ற பின்­னர் ஆன்­மி­கம், இலக்­கி­யம் ஆகிய பணி­க­ளில் தம்மை ஈடு­ப­டுத்­திக் கொண்­டி­ருந்த அவர், அர­சி­யல் சேற்­றில் ஆழம் தெரி­யா­மல் காலை­விட்டு தற்போது அவ­திப்­பட்­டுக் கொண்­டி­ருக்­கி­றார். கூட்­ட­மைப்­புக்கு எதி­ரான ஒன்­றா­கவே தமிழ் மக்­கள் பேரவை அமைக்­கப்­பட்­ட­தென்­பது சகலரும் அறிந்த விட­ய­மா­கும்.

கடந்த உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லின்­போது இது நிரூ­ப­ண­மா­கி­விட்­டது. இந்த நிலை­யில் கூட்­ட­மைப்­பின் சார்­பில் முத­ல­மைச்­சர் பத­வி­யைப் பெற்­றுக்­கொண்ட அவர், பேர­வை­யின் இணைத் தலை­வ­ரா­கப் பொறுப்­பேற்­றுக் கொண்­டதை எந்த வகை­யி­லும் நியா­யப்­ப­டுத்த முடி­யாது.

வடக்­கில் அர­சி­யல் குழப்ப நிலை­யொன்று உரு­வா­ன­தற்கு முழு­மு­தற் கார­ண­மான விக்­னேஸ்­வ­ரன், அதை மேலும் நீடிப்­ப­தற்கு வகை செய்வதை இனி­யும் பொறுத்­துக்­கொள்ள முடி­யாது. அவர் எவ­ரு­ட­னும் சேர்­வ­தையோ அல்­லது மாற்­றுத் தலை­வ­ராக உரு­வெ­டுப்­ப­தையோ, எவ­ரா­லும் தடுத்து நிறுத்த முடி­யாது. ஆனால் அவர் கூட்­ட­மைப்­புத் தலை­வர்­க­ளை­யும், கூட்­ட­மைப்­பை­யும் தொடர்ந்­தும் விமர்­சிப்­பதை ஏற்­றுக்­கொள்­ள முடி­யாது.

You might also like