விக்கினேஸ்வரனின் அரசியல் எதிர்காலமும் சம்பந்தனின் மௌனமும்

தனது எதிர்­கால அர­சி­யல் தொடர்­பான இறுதி முடிவை வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் விக்­னேஸ்­வ­ரன் அறி­விக்­க­வுள்­ள­தா­கத் தமிழ் மக்­கள் பேர­வை­யின் சார்­பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. வடக்கு மாகாண சபை­யின் ஆயுட்­கா­லம் முடி­வ­டை­ய­வுள்ள நிலை­யில் அவ­ரது அறி­விப்பு வெளி­யா­க­வுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது. அது­மட்­டு­மல்­லாது தமிழ் மக்­கள் பேர­வை­யின் உண்­மை­யான முக­மும் தற்­போது தெரிய வந்­துள்­ளது. அர­சி­யல் கலப்­பில்­லாத ஓர் அமைப்­பா­கப் பேரவை இயங்­கு­மென ஆரம்­பத்­தில் தெரி­விக்­கப்­பட்ட நிலை­யில் தற்­போது விக்­னேஸ்­வ­ர­னின் அர­சி­யல் எதிர்­கா­லத்­துக்கு அத்­தி­பா­ர­மி­டு­கின்ற ஓர் அமைப்­பாக அது தன்னை மாற்­றிக்­கொண்­டுள்­ளது.

சம்­பந்­தன் எடுத்த தவ­றான முடிவு
கூட்­ட­மைப்­பின் தலை­வர் சம்­பந்­த­னால் அர­சி­ய­லுக்­குக் கொண்டு வரப்­பட்­ட­வர்­தான் விக்­னேஸ்­வ­ரன் என்ற கருத்­துப் பர­வ­லாக உண்டு. உயர்­நீ­தி­மன்ற நீதி­ய­ர­சர் பத­வி­யி­லி­ருந்து ஓய்­வு­பெற்­ற­பின்­னர் சம­யம், இலக்­கி­யம் சார்ந்த பணி­க­ளில் ஓர­ளவு ஈடு­பாடு காட்டி வந்த அவ­ருக்கு அர­சி­யல் என்­றால் என்­ன­வென்­பது கடந்த வடக்கு மாகாண சபைத் தேர்­த­லுக்­குப் பின்­னர்­தான் அவ­ருக்­குத் தெரி­ய­வந்­தி­ருக்­கும். அப்­போது மாகா­ண­ச­பைத் தேர்­த­லில் கூட்­ட­மைப்­பின் வெற்றி ஏற்­க­னவே உறு­திப்படுத்தப்பட்ட நிலை­யில் காணப்­பட்­டது. விக்­னேஸ்­வ ­ரனை முன்­னி­றுத்தி வெற்­றி­பெற வேண்­டிய எந்­தத் தேவை­யும் கூட்­ட­மைப்­புக்கு எழ­வில்லை. இந்த நிலை­யில் கூட்­ட­மைப்­பின் தலை­வர் சம்­பந்­தன் தற்­போ­தைய முத­ல­மைச்­சர் விக்­னேஸ்­வ­ரனை ஏதற்­காக இந்­தப் பத­விக்­குத் தெரிவு செய்­தார் என்­பது இன்­ன­மும் புரி­ய­வில்லை. சம்­பந்­தன் தமது அர­சி­யல் வாழ்க்­கை­யில் எடுத்த தவ­றான முடி­வா­க­வும் விக்­னேஸ்­வ­ர­னின் தெரிவு அமைந்து விட்­டது.

சம்­பந்­த­னின் மௌனமே எல்­லா­வற்­றுக்­கும் கார­ணம்
கூட்­ட­மைப்­பின் தலை­வர் விட்ட தவறு இன்று அவ­ருக்கு எதி­ராக அமைந்­து­விட்­டது. விக்­னேஸ்­வ­ரன் தவறு செய்­வ­தற்கு முற்­ப­டு­கி­றார் என்று தெரிந்­த­வு­ட­னேயே சம்­பந்­தன் விழிப்­பு­டன் செயற்­பட்டு அவ­ரைக் கூட்­ட­மைப்­பி­லி­ ருந்து அகற்­றி­யி­ருக்க வேண்­டும். பின்­ன­ரும் பல சந்­தர்ப்­பங்­கள் வாய்த்­தி­ருந்­தன. இருந்­த­போ­தி­லும் கூட்­ட­மைப்­பின் தலைமை அவற்­றைக் கோட்­டை­விட்டு விட்­டது. சம்­பந்­த­னின் மௌனமே எல்­லாப் பிரச்­சி­னை­ க­ளுக்­கும் கார­ண­மா­கி­விட்­டது. விக்­னேஸ்­வ­ரன் முத­ல­மைச்­ச­ராக இருந்து கடந்த ஐந்து ஆண்­டு­க­ளில் எதைச் சாதித்­து­விட்­டார் என்­பதை அவ­ரைத் தலை­யில் தாங்கி நிற்­ப­வர்­கள் ஒரு­க­ணம் சிந்­தித்­துப் பார்க்க வேண்­டும். எதற்­குமே உத­வாத இன­வா­தம் கலந்த ஆவே­ச­மான உரை­களை மாத்­தி­ரமே இவ­ரால் ஆற்ற முடிந்­துள்­ளது. ஆனால், தமி­ழர்­க­ளி­டையே குழப்­பத்தை ஏற்­ப­டுத்தி பிரி­வி­னை­யைத் தூண்­டு­வ­தில் அவ­ருக்கு முழு­வெற்றி கிடைத்­துள்­ளது.

கூட்­ட­மைப்­பைப் பிளவு படுத்­து­வ­தில் குறி
விக்­னேஸ்­வ­ர­னின் தலை­மையை ஏற்­கப் போவ­தாக ஈ.பி.ஆர்.எல்.எவ் கூறி­விட்­டது. இது எதிர்­பார்க்­கப்­பட்­ட­து­தான். சிலர் விக்­னேஸ்­வ­ர­னைப் பயன்­ப­டுத்­திக் கூட்­ட­மைப்பை உடைத்து விடு­வ­தி­லேயே குறி­யா­கச் செயற்­ப­டு­கின்­ற­னர். இதில் ஈ.பி.ஆர்.எல்.எவ் முத­லி­டத்­தில் உள்­ளது.
கடந்த நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் தோற்­றுப்­போன அந்­தக் கட்­சி­யின் தலை­வ­ருக்­குத் தேசி­யப் பட்­டி­யல் மூல­மாக நாடா­ளு­மன்­றத்­தில் இடம் வழங்­கப்­ப­டா­த­தால் கூட்­ட­மைப்­பின் மீது அந்­தக் கட்சி கடும் வெறுப்­பில் உள்­ளது. ஒரு கட்­சி­யின் தலை­வர் தேர்­த­லொன்­றில் தோற்­பது மக்­க­ளின் செல்­வாக்கு அவ­ருக்கு அறவே இல்­லை­யென்­ப­தையே எடுத்­துக் காட்­டு­கின்­றது. மக்­க­ளின் தீர்ப்­புக்­குத் தலை­வ­ணங்க வேண்­டி­யது அவ­ரது முக்­கிய பொறுப்­பா­கும். இதை­வி­டுத்­துப் பின் கத­வால் பத­வி­யைப் பெறு­வ­தற்கு முயற்சி செய்­வ­தும் அது சாத்­தி­ய­மா­க­வில்­லை­யென்­ற­தும் மற்­ற­வர்­கள் மீது பழி­யைச் சுமத்­து­வ­தும் சரி­யான காரி­யங்­க­ளா­கத் தென்­ப­ட­வில்லை. விக்­னேஸ்­வ­ர­னுக்கு ஆத­ரவு என்­ப­தை­விட கூட்­ட­மைப்­புக்­குக் குழி­தோண்­டு­வதே ஈ.பி.ஆர்.எல்.எவ்.இன் முக்­கிய வேலை­யாகி விட்­டது. இதில் ஒரு­போ­துமே அவர்­க­ளால் வெற்­றி­பெ­றவே முடி­யாது.

மெள­னம்­தொ­டர்­வது தீமை­­யைத்­த­ரும்
விக்­னேஸ்­வ­ர­னுக்­குப் பின்­னால் வேறு சில­ரும் அணி திர­ளு­வார்­கள் என்­பதை மறுக்க முடி­யாது. ஆனால் இவர்­க­ளால் மக்­க­ளின் ஆத­ரவை ஒரு­போ­துமே பெற்­றுக்­கொள்ள முடி­யாது. ஏனென்­றால் மக்­கள் விக்­னேஸ்­வ­ர­னை­யும் அவ­ரு­டன் உறவு கொண்­டி­ருப்­ப­வர்­க­ளை­யும் நன்கு புரிந்து வைத்­தி­ருக்­கி­றார்­கள். இதே­வேளை கூட்­ட­மைப்­பின் தலைமை தொடர்ந்­தும் மௌனத்­தைக் கடைப்­பி­டிப்­ப­தும், மெத்­த­ன­மாக இருப்­ப­தும் கூட்­ட­மைப்­பின் எதி­கா­லத்­துக்­குத் தீமை­யையே ஏற்­ப­டுத்­தும். வடக்­கி­லும் கிழக்­கி­லும் கூட்­ட­மைப்­புக்கு எதி­ரான அணி­கள் கள­மி­றங்­கு­கின்ற இந்த வேளை­யில் அவற்றை முறி­ய­டிப்­பதற்­கான வியூ­கங்­கள் வகுக்­கப்­ப­டு­வது அவ­சி­ய­மா­ன­தா­கும். வடக்கு மற்­றும் கிழக்கு மாகாண சபை­க­ளுக்கு ஆற்­ற­லும் மக்­கள் செல்­வாக்­கும் மிக்­க­வர்­கள் கூட்­ட­மைப்­பின் சார்­பில் முத­ல­மைச்­சர் வேட்­பா­ளர்­க­ளா­கக் கள­மி­றக்­கப்­பட வேண்­டும். நாடா­ளு­மன்­றுக்­கும் மாகாண சபை­க­ளுக்­கு­மான வேட்­பா­ளர் தெரி­வின்­போ­தும் ஊழல்­வா­தி­க­ளை­யும் நெறி­பி­றழ்ந்­த­வர்­க­ளை­யும் ஓரம்­கட்­டி­விட்­டுத் தகு­தி­யா­ன­வர்­க­ளுக்கே இடம் வழங்க வேண்­டும்.

சுருக்­க­மா­கக் கூறி­னால் கூட்­ட­மைப்­புக்­குப் புது­மை­யான தோற்­றம் ஏற்­ப­டுத்­து­வ­து­டன் இளை­ஞர்­க­ளுக்கு அதிக வாய்ப்­புக்­க­ளும் வழங்­கப்­ப­ட­வேண்­டும்.

You might also like