விபத்தில் இளைஞர்கள் இருவர் உயிரிழப்பு

பஸ்யால முருதவெல வளைவு பிரதேசத்தில் தனியார் பேருந்துகள் இரண்டு ஒன்றுடன் ஒன்று மோதியதில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.

மாவனெல்லையில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பேருந்து ஒன்றும் கொழும்பில் இருந்து அனுராதபுரம் நோக்கிப் பயணித்த பேருந்தொன்றும் மோதிக்கொண்டதில் இந்த விபத்து ஏற்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில், கேகாலை மற்றும் மாவனெல்லை  பகுதிகளைச் சேர்ந்த   22,32 வயதுடைய இளைஞர்களே  உயிரிழந்தனர்.

விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளைத் தாம் முன்னெடுத்து வருவதாக, நிட்டம்புவ பொலிஸார் தெரிவித்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close