விபத்தில் மூவர் உயிரிழப்பு!!

மோட்டார் சைக்கிளும், கப் ரக வாகனமும் மோதி விபத்துக்குள்ளானது. அதில் மூவர் உயிரிழந்தனர் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

சிலாபம் – ஆனமடுவ பிரதான வீதியின் நாகவில பகுதியில் விபத்து நடந்துள்ளது.

ஆண்டிகம மற்றும் கட்டைக்காடு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் சிலாபம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

You might also like