விமானக் கதவை மூடும்போது தவறி விழுந்த பணிப்பெண்!!

இந்தியா மும்பையிலிருந்து டெல்லி செல்லும் ஏர் இந்தியா விமானத்தில் பணிபுரியும் விமானப்பணி பெண், அந்த விமானத்தின் கதவை மூடும்போது தவறி வெளியே விழுந்தார். விமனம் பறப்பதற்கு தயார்நி லையில் இருந்தபோது, விமானத்தின் கதவை மூடவரும் போதும் வெளியே விழுந்துள்ளார் 53 வயது விமானப் பணிப்பெண்.

இந்த விபத்தால் பணிப்பெண்ணின் காலில் காயம் ஏற்பட, அவரை மும்பையிலுள்ள நானாவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். சிகிச்சப்பெற்று வரும் அந்த பெண் லேசான கயங்களுடன், உடல்நிலை தேறி வருகிறார். நலமாக இருக்கிறார் என்று ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இன்று காலை 7 மணிக்கு புறப்பட வேண்டிய ஏர் இந்தியா 864 விமானம். இந்த விபத்தால் 90நிமிடங்கள் தாமதமாக டெல்லிக்கு புறப்பட்டது.

You might also like