விரை­வான செயற்­பாடு அவ­ச­ர­மான அவ­சி­யம்!!

இந்த ஆண்­டுக்­கான வாக்­கா­ளர் பட்­டி­யல் மீளாய்­வின்­போது
யாழ். தேர்­தல் மாவட்­டத்துக்கான நாடா­ளு­மன்ற
ஆச­னங்­க­ளின் எண்­ணிக்கை குறை­வ­தற்­கான வாய்ப்­புக்­கள் அதி­க­ரித்­தி­ருக்­கின்­றன. தற்­போது 7 ஆச­னங்­க­ளாக இருக்­கும் அது எதிர்­வ­ரும் நாடா­ளு­மன்­றத் தேர்­த­லின்­போது 5ஆகக் குறை­வ­தற்கு அதி­க­ளவு வாய்ப்­புக்­கள் இருக்­கின்­றன.

வலி­கா­மம் வடக்கு பகு­தி­யில் கடந்த பல வரு­டங்­க­ளாக வாக்­கா­ளர் பட்­டி­யல் மீளாய்வு செய்­யப்­ப­ட­வில்லை. இவை படை­யி­ன­ரின் கட்­டுப்­பாட்­டில் இருந்­த­மை­யால், அங்கு மக்­கள் வாழ­வில்லை என்­ப­தைக் கார­ணம்­காட்டி வாக்­கா­ளர் பட்­டி­யல் மீளாய்வு செய்­யப்­ப­டா­ம­லேயே இருந்­தது. இத­னால் 1987ஆம் ஆண்டு வாக்­கா­ளர் பட்­டி­யலே தொடர்ந்­தும் பேணப்­பட்டு வந்­தது. அதே­நே­ரம் வலி. வடக்கு மக்­க­ளில் கணி­ச­மா­னோர் இடம்­பெ­யர்ந்து தாம் வாழ்ந்த பகு­தி­க­ளி­லும் தம்மை வாக்­கா­ளர்­க­ளா­கப் பதிவு செய்­தி­ருந்­த­னர். இத­னால் யாழ்ப்­பா­ணத்­தில் உண்­மை­யில் வசித்த வாக்­கா­ளர்­க­ளி­லும் பார்க்க சற்­றுக்­கூ­டு­த­லான வாக்­கா­ளர் எண்­ணிக்கை காட்­டப்­பட்டு வந்­தது.

யாழ்ப்­பா­ணத்து மக்­கள் போர் அச்­சம் கார­ண­மா­கப் புலம் பெயர்ந்து இந்­தி­யா­வி­லும், ஐரோப்­பிய அமெ­ரிக்க நாடு­க­ளி­லும் பெரும் எண்­ணிக்­கை­யில் வாழ நிர்ப்­பந்­திக்­கப்­பட்­டி­ருக்­கை­யில் அவர்­க­ளின் எண்­ணிக்­கையை, இந்த அதி­க­ரித்த பதிவு சரி­யா­கப் பிர­தி­ப­லிக்­கா­த­போ­தும் சில ஆயி­ரம் வாக்­கு­க­ளா­வது அவர் களைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­தும் வகை­யில் இந்த நடை­மு­றை­யூ­டாக அதி­க­ரித்­துக் காட்­டப்­பட்டு வந்­தது. ஆனால், இப்­போது அது­வும் பறி­போ­கும் நிலை வந்­து­விட்­டது. வலி. வடக்­கில் முழு­மை­யா­க­வும் பகு­தி­ய­ள­வா­க­வும் மீள்­கு­டி­ய­மர்­வுக்கு அனு­ம­திக்­கப்­ப­டாத கிராம அலு­வ­லர் பகு­தி­க­ளில் கூட வாக்­கா­ளர் பட்­டி­யலை மீளாய்வு செய்­வ­தற்கு நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­பட்­டுள்­ளன.

அப்­படி மீளாய்வு செய்­யும்­போது 30 ஆயி­ரம் வாக்­கா­ளர் பதி­வு­கள் நீக்­கப்­ப­டும் அபா­யம் காணப்­ப­டு­கின்­றது என்­கி­றார்­கள் அதி­கா­ரி­கள். யாழ். மாவட்­டத்­தில் வாக்­கா­ளர்­க­ளின் சரா­சரி அதி­க­ரிப்பு வரு­டம் ஒன்­றுக்கு 5 ஆயி­ரம் மட்­டுமே. எனவே சுமார் 25 ஆயி­ரம் வாக்­கா­ளர்­கள் தற்­போ­தைய பட்­டி­ய­லில் இருந்து நீக்­கப்­ப­டு­வார்­கள் என்று எதிர்­வு­கூ­றப்­ப­டு­கின்­றது.

இந்த எண்­ணிக்­கை­யைக் குறைக்க வேண்­டும் என்­றால் வெளி­நா­டு­க­ளில் வாழும் வலி. வடக்­கைச் சேர்ந்த, அந்­தந்த நாட்­டு
­கு­டி­யு­ரி­மை­யைப் பெற்­றுக்­கொள்­ளாத மக்­க­ளும் தம்மை இலங்­கை­யில் வாக்­கா­ளர்­க­ளா­கப் பதிவு செய்­து­கொள்­ள­வேண்­டும். இதன் மூலம் வாக்­கா­ளர் எண்­ணிக்­கை­யின் வீழ்ச்­சியை ஓர­ள­வுக்­குத் தடுக்க முடி­யும். வாக்­கா­ளர்­க­ளின் எண்­ணிக்­கைக்கு ஏற்­பவே ஒவ்­வொரு மாவட்­டத்துக்கு­மான நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளின் எண்­ணிக்­கை­யும் தீர்­மா­னிக்­கப்­ப­டு­கின்­றது என்­ப­தால், இந்த வாக்­கா­ளர் பதி­வில் அர­சி­யல்­வா­தி­க­ளும் அக்­கறை கொள்­ள­வேண்­டி­யது கட்­டா­யம். ஆனால், இங்கு அப்­படி நடக்­க­வில்லை.

தமிழ் அர­சி­யல்­வா­தி­கள் அனை­வ­ருக்­கும் இது பற்றி அறி­வித்­து­விட்­ட­போ­தும், வெளி­நா­டு­க­ளில் உள்ள வலி.வடக்கு வாக்­கா­ளர்­க­ளைப் பதிவு செய்­வ­தற்கு எந்­த­வொரு அர­சி­யல்­வா­தி­யும் ஊக்­கு­விப்பு வழங்­கி­ய­தா­கத் தெரி­ய­வில்லை என்று அதி­கா­ரி­கள் தெரி­விக்­கின்­ற­னர்.
இது ஒரு வருத்­தப்­ப­டக்­கூ­டிய நிலமை. அர­சி­யல்­வா­தி­கள் இந்த விட­யத்­தில் மெத்­த­னப் போக்­கோடு இருக்­கா­மல் விரைந்து செயற்­ப­ட­வேண்­டும். அதுவே நாடா­ளு­மன்­றத்­தில் தமி­ழர்­க­ளின் தலை­வி­தி­யைப் பாது­காப்­ப­தற்கு உத­வும்.

தமிழ் வாக்­கா­ளர் எண்­ணிக்கை குறை­யக் குறைய நாடா­ளு­மன்­றத்­தில் தமி­ழர் பிர­தி­நி­தி­க­ளின் எண்­ணிக்­கை­யும் குறை­யும், இது சிங்­கள ஆட்­சி­யா­ளர்­க­ளுக்­குப் பெரி­தும் சாத­க­மாக மாறி­வி­டும். எனவே இது விட­யத்­தில் தமி­ழர் அர­சி­யல்­வா­தி­கள் விரைந்து செயற்­ப­டு­வது அவ­சி­யம்.

அத்­தோடு இந்­தியா போன்ற இடங்­க­ளில் உள்ள ஈழத் தமிழ் அக­தி­க­ளை­யும் இங்கு வாக்­கா­ளர்­க­ளா­கப் பதிவு செய்­வ­தற்­கும் தமிழ் அர­சி­யல்­வா­தி­கள் நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டும்.

You might also like