விளக்கமளிப்பாரா மைத்திரி?

ஒட்­டு­மொத்த இலங்­கை­யை­யும் அட்­சர சுத்­த­மாக அர­சி­யல் குழப்­பத்­திற்கு ஆழ்த்­தி­விட்ட அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன அதற்­குப் பின்­னர் முதல் தட­வை­யாக இன்று வடக்­குக்கு வருகை தர­வுள்­ளார். கிளி­நொச்சி மாவட்­டத்­தில் உள்ள இர­ணை­ம­டுக் குளம் நீண்ட காலத்­தின் பின்­னர் அதன் முழுக் கொள்­ள­ளவை­யும் அடைந்­தி­ருக்­கும் நிலை­யில் அதன் வான் கத­வு­க­ளைத் திறந்து மேல­தி­கத் தண்­ணீரை வெளி­யேற்­றும் நிகழ்­வுக்­காக அவர் கிளி­நொச்­சிக்கு வருகை தர­வுள்­ளார்.

ஆசிய அபி­வி­ருத்தி வங்­கி­யின் நிதி உத­வி­யு­டன் மறு­சீ­ர­மைப்­புச் செய்­யப்­பட்டு உயர்த்­தப்­பட்­டது. இர­ணை­ ம­டுக் குளத்­தின் அணைக்­கட்டு. இத­னால் இது­வ­ரை­யில் 34அடி­யாக இருந்த அதன் கொள்­ள­ளவு­மட்­டம் தற்­போது 36 அடி­யாக உயர்ந்­துள்­ளது. அணை­யின் மொத்த உய­ரம் இப்­போது 36 அடி. கடந்த காலங்­க­ளில் அணை­யின் கொள்­ள­ளவு 34 அடி­யாக இருந்­த­போ­தும் அணை­யின் பாது­காப்­புக் கருதி 32 அடிக்கு அதி­க­மா­கத் தண்­ணீர் தேக்­கப்­பட்­ட­தில்லை.

2136 மில்­லி­யன் ரூபா செல­வில் தற்­போது அணை பலப்­ப­டுத்­தப்­பட்டு நவீ­னப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள து. அதன் பின்­னர் முதல் தட­வை­யா­கப் போதிய மழை வீழ்ச்­சி­யும் கிடைத்­துள்­ள­தால் குளத்­தின் தண்­ணீர் மட்­டம் அதன் உச்­சக் கொள்­ள­ளவு மட்­டத்தை எட்­டி­யுள்­ளது. நேற்­றி­ரவே அது 35 அடி­யைத் தாண்­டி­யி­ருந்­தது. இதை­ய­டுத்தே அணை­யின் வான் கத­வு­க­ளைத் திறந்­து­வி­டும் நிகழ்வு முக்­கி­ய­மா­ன­தா­கி­யுள்­ளது. அதற்­கா­கவே அரச தலை­வர் கிளி­நொச்­சிக்கு வரு­கி­றார்.

குளத்­தின் அணைக்­கட்டு உய­ரத்தை அதி­க­ரித்து அதி­க­ளவு நீரைத் தேக்­கு­வ­தன் மூலம் இர­ணை­ம­டு­வின் கீழ் இருக்­கும் வயல்­க­ளில் சிறு­போ­கச் செய்­கையை விரி­வு­ப­டுத்த வேண்­டும் என்­பது விவ­சா­யி­க­ளின் நீண்­ட­கா­லக் கோரிக்கை. இப்­போதே அது நிறை­வே­றி­யுள்­ளது. இதன் மூலம் கிளி­நொச்சி மற்­றும் முல்­லைத்­தீவு மாவட்ட விவ­சா­யி­க­ளுக்கு நன்மை கிடைக்­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

ஒரு­பு­றத்­தில் தமிழ் விவ­சா­யி­க­ளின் மிக நீண்­ட­கா­லக் கனவு நிறை­வே­றி­யி­ருக்­கும் நிகழ்­வில் மறு­பு­ற­மா­கத் தமி­ழர்­க­ளின் எதிர்­பார்ப்பு, நம்­பிக்கை எல்­லா­வற்­றை­யும் மிக­மோ­ச­மா­கச் சிதைத்து குலைத்­துப் போட்­டிக்­கும் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன கலந்­து­கொண்டு வான் கத­வு­க­ளைத் திறப்­பது மிக முரண்­நிலை.

தமி­ழர்­க­ளின் பிரச்­சி­னைக்­குத் தீர்வு காண்­ப­தற்­கான வர­லாற்று வாய்ப்பு ஒன்­றின் கதா­நா­ய­க­னா­கத் தமி­ழர்­கள் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை கணித்­தார்­கள், போற்­றி­னார்­கள். அவ­ரது ஆட்­சிக் காலத்­தில் இனப் பிரச்­சி­னைக்­குத் தீர்வு ஒன்று கிடைக்க வேண்­டும் என்­கிற பலத்த விரும்­பம் அவர்­க­ளி­டம் இருந்­தது.

ஆனால் அந்த எதிர்­பார்ப்பு, நம்­பிக்கை எல்­லா­வற்­றை­யும் தனது தன்­னிச்­சை­யான நட­வ­டிக்­கை­கள் கார­ண­மாக இலங்­கை­யில் அர­சாட்சி ஒன்றே இல்லை என்­கிற நிலையை ஏற்­ப­டுத்­தி­விட்­டி­ருக்­கி­றார் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன. இதன் மூலம் இனப் பிரச்­சி­னைக்­குத் தீர்வு காண்­ப­தற்­குக் கிடைத்த வர­லாற்று வாய்ப்பை வீண­டித்த மற்­றொரு சிங்­கள பெளத்த தலை­வை­ராக நிலை கொண்­டுள்­ளார் மைத்­திரி.

இந்­தப் பின்­ன­ணி­யில் இன்று கிளி­நொச்­சிக்கு வரு­கி­றார் அரச தலை­வர். தமிழ் மக்­க­ளின் எதிர்­பார்ப்­பு­கள் எல்­லா­வற்­றை­யும் சுக்­கு­நூ­றாக்­கிய நிலை­யில் அவ­ரது வடக்­குக்­கான இந்த வருகை மிக முக்­கி­ய­மா­ன­தாக இருக்­கி­றது. புதிய அர­ச­மைப்பு முயற்சி உள்­ளிட்ட தமி­ழர்­க­ளுக்­கான தீர்வு முடங்­கிப்­போ­யுள்ள நிலை­யில் தனது செயல்­க­ளுக்கு அரச தலை­வர் என்ன நியா­யம் கற்­பிக்­கப்­போ­கி­றார் என்­பதை அறிய தமிழ் மக்­கள் ஆர்­வ­மாக உள்­ளார்­கள்.

புதிய அர­ச­மைப்பு முயற்சி தாம­தப்­ப­டுத்­து­வ­தில் ரணில் விக்­கி­ர­சிங்­க­வின் பங்கே அதி­க­மா­னது என்று அரச தலை­வர் அண்­மை­யில் குற்­றஞ்­சாட்­டி­யி­ருந்த நிலை­யில் கிளி­நொச்­சி­யில் தமி­ழர்­க­ளுக்கு என்ன ஆறு­தல் கூறப்­போ­கின்­றார் என்­பதை அறி­யக் காத்­துக்­கி­டக்­கி­றது தமிழ்­கூ­றும் நல்­லு­லகு!

You might also like