விவசாயிகளுக்கு பரிசு வழங்குகிறார் கார்த்தி!!

விவசாயத்தை மையப்படுத்தி வந்த கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்த பிறகு ‘உழவன் அறக்கட்டளை’ என்ற அமைப்பை தொடங்கினார் கார்த்தி . இந்த அமைப்புக்கு நடிகர் சூர்யா நிதி உதவி அளித்துள்ளார்.

தற்போது உழவன் அறக்கட்டளை மூலம் நடிகர் கார்த்தி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் உழவு செய்வதை எளிமையாக்கும் புதிய கருவிகளுக்கான பரிசு போட்டி என்ற தலைப்பில் புதிய போட்டியை அறிவித்துள்ளார்.

சிறு,குறு விவசாயத்தை எளிதாக்கும் நவீன வேளாண் கருவிகளை கண்டு பிடிப்பவர்களை தேர்ந்தெடுத்து முதல் மூன்று கருவிகளுக்கு பரிசு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

You might also like