வீதியைச் சீரமைக்கக் கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்!!

பூண்டுலோயா – நாவலப்பிட்டி பிரதான வீதியில் கலப்பிட்டிய சந்தியிலிருந்து ஹரங்கல சந்தி வரையுள்ள சுமார் 9 கிலோ மீற்றர் பிரதான வீதியை சீரமைத்து தருமாரு கோரி வீரசேகரபுர பகுதி மக்கள் இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அவ்வீதியினூடான போக்குவரத்து சுமார் பல மணி நேரம் ஸ்தம்பிதமடைந்திருந்தது.

பிரதான வீதியில் ரயர்களை எரித்து, கோஷங்களை எழுப்பி, பதாதைகளை ஏந்தியவண்ணம் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

You might also like