வீதியோர தென்னை மரங்களால் ஆபத்து -அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்!!

வவுனியா குட்செட் வீதியால் பயணிப்பவர்கள் மிகுந்த அச்சத்துடன் பயணிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

வவுனியா குட்செட் இரண்டு வளைவுகளை கொண்ட வீதியின் அருகே உள்ள வீடுகளில் நிற்கும் உயர வளர்ந்த தென்னை மரங்கள் வீதியை நோக்கி உயர வளர்ந்து காணப்படுகிறது.

குறித்த தென்னை மரங்களில் தேங்காய்கள் மற்றும் பழுத்த தென்னை ஓலைகளும் காணப்படுவதால் பலத்த காற்று வீசும் தற்போதைய காலநிலையில், வீதியால் பயணிப்பவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இந்த வீதி மக்கள் போக்குவரத்துக்கு அதிகம் பயன்படுத்தப்படுகிறது. எனவே உரியவர்கள் உடனடிய நடவடிக்கைகளை மேற்கொண்டு மக்களுக்குப் பாதுகாப்பு வழங்குமாறு கேட்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close