வெற்றிலைப் பிரியர்களுக்கு துக்கச் செய்தி!!

உற்பத்தி விலை அதிகரிப்பின் காரணமாக வெற்றிலையின் விலை 10 ரூபாவால்  அதிகரிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய 30 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் ‘வெற்றிலை கூறை’ 40 ரூபாவுக்கு விற்பனை செய்வதற்கு, விற்பனையாளர்கள் தீர்மானித்துள்ளனர்.

வெற்றிலைக்கான உற்பத்தி செலவு அதிகரிப்பு காரணமாக, வெற்றிலையை குறைந்த விலைக்கு விற்பதால், அதிகம் நட்டம் ஏற்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உற்பத்தியாளர்கள் நன்மை கருதி, வெற்றிலையின் விலையை அதிகரிக்கத்
தீர்மானித்ததாக வெற்றிலை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

You might also like