வைத்தியசாலைக்கு வெடிகுண்டு மிரட்டல்- பாதுகாப்பு தீவிரம்!!

வவுனியா வைத்தியசாலை மற்றும் மதீனாநகர் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஆகியவற்றுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

வவுனியா வைத்தியசாலையில் அமைந்துள்ள அம்மாச்சி உணவகத்தில் சந்தேகத்துக்கிடமான முறையில் காணப்பட்ட கடிதம் ஒன்ற மீட்கப்பட்டது. அதில் வவுனியா வைத்தியசாலை மற்றும் மதீனாநகர் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஆகியவற்றில் எதிர்வரும் திங்கள்கிழமை வெடிகுண்டு வைக்கப்படும் என்று எழுதப்பட்டிருந்ததாகக் கூறப்படுகின்றது.

அதனால் வவுனியா பொலிஸார் மற்றும் புலனாய்வு பிரிவினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறித்த இடங்களில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

You might also like