ஸஹ்ரான் குழுவுக்கு பயிற்சி வழங்கிய சிப்பாய் கைது!!

உயிர்த்த ஞாயிறன்று தாக்குதல் மேற்கொண்ட தீவிரவாதி ஸஹ்ரான் ஹஷீம் தலைமையிலான குண்டுத்தாரி குழுவினருக்கு, குண்டு வெடிப்பு தொடர்பில் பயிற்சி வழங்கியதாகக் கூறப்படும் இராணுவச் சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நுவரெலியா மற்றும் சில இடங்களில் இவர் பயிற்சிகளை வழங்கியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஆமி மொஹிதீன் என்ற குறித்த நபர் இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் காணாமல் போயிருந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

You might also like