ஸ்ரார் ஈகிள் விளையாட்டுக்கழகம்- இறுதியாட்டத்துக்கு தகுதி!!

இந்து முன்னனி விளையாட்டுக்கழக அணியை 245 ஓட்டங்களால் வெற்றி கொண்டு இறுதியாட்டத்திற்கு தகுதி பெற்றது ஸ்ரார் ஈகிள் விளையாட்டுக்கழக அணி.

மன்னார் மாவட்ட துடுப்பாட்டச்சங்கத்தில் பதிவு செய்யபட்ட விளையாட்டுக்கழகங்களுக்கு இடையிலான பிரிவு 3க்கான துடுப்பாட்டத் தொடரில், நானாட்டான் பொது விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்ற அரையிறுதியாட்டத்தில் ஸ்ரார்ஈகிள் விளையாட்டுக்கழக அணியை எதிர்த்து இந்து முன்னனி விளையாட்டுக்கழக அணி மோதியது,

முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்ரார் ஈகிள் விளையாட்டுக்கழக அணியினர் 50 பந்துப்பரிமாற்றங்கள் நிறைவில் 9 இலக்கினை இழந்து 375 ஓட்டங்களைப் பெற்றது.

376ஓட்டங்களைப்பெற்றால் வெற்றியென பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்து முன்னனி விளையாட்டுக்கழக அணியினர் 19 பந்துப்பரிமாற்றங்கள் நிறைவில் சகல இலக்கினையும் இழந்து 128 ஓட்டங்களை மட்டும் பெற்றது.

You might also like