100 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது பேருந்து – 21 பேர் உயிரிழப்பு!!

0 6

இந்தோனேசியாவில் உள்ள ஜாவா தீவில் பேருந்து நிலை தடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதில் 21 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தோனேசியாவில் உள்ள ஜாவா தீவில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச்சென்ற பேருந்து திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து நொருங்கியது.

தெற்கு ஜாவா தீவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்கள் 4 பேருந்துகளில் அத்தீவில் அமைந்துள்ள சுற்றுலாப் பிரதேசமான சுகாபூமி மாவட்டத்திற்கு சென்றுள்ளனர்.

அதில் ஒரு பேருந்து, அதிக வளைவுகள் உடைய சாலையில் செல்லும் போது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி சுமார் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது விபத்தில் சிக்கியது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 21 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 9 பேர் படுகாயங்களுடன் மீட்க்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

You might also like