side Add

140 பேருக்கு- எழு நீ விருது!!

வவுனியா நகரசபையின் எழு நீ பண்பாட்டு முற்றம் நடத்தும் எழுநீ விருது விழா- வவுனியா கலாசார மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

நகரபிதா இ.கெளதமன் தலமையில் நடைபெற்ற விழாவில் முதன்மை விருந்தினராக வடமாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர், நீதியரசர் சி.வி.விக்கினேஸ்வரன் கலந்து கொண்டார்.

நிகழ்வில் வவுனியா வீணாமிருத கலையகத்தின் வாத்திய பிருந்தா, முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்களின் மீனவ நடனம், வவுனியா தெற்கு கலாசார குழுவினரின் ‘உடரட்ட நட்டும’ சிங்கள நடனம் ஆகியன இடம்பெற்றது.

அதனையடுத்து எழுநீ விருது 2018 ஆவணநூல் வெளியீட்டு வைக்கபட்டது.

தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான, பல்துறை சார்ந்தவர்களிற்கான விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. 140 சேவையாளர்களுக்கு, எழுநீ விருது வழங்கிக் கௌரவிக்கபட்டது.

You might also like