side Add

2 கிலோ கஞ்சாவுடன்– ஐவர் கைது!!

யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலைக்கு கொண்டு செல்லப்பட்ட 2கிலோ கேரளா கஞ்சாவுடன் 5 பேரை கைது செய்துள்ளதாகப் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா ஓமந்தை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலை நோக்கிச் சென்ற டக்ஸியினை அதிகாலை 3.45மணியளவில் வழிமறித்து பொலிஸார், சோதனை நடவடிக்கையின் போது பொதி செய்யப்பட்டு மறைத்து எடுத்துச் செல்லப்பட்ட 2 கிலோ 50கிராம் கேரளா கஞ்சாவை மீட்டனர்.

குறித்த வாகனத்தில் பயணித்த ஐவரையும் சந்தேகத்தின் அடிப்படையில் பொலிஸார் கைது செய்தனர்.

You might also like