259 ஓட்டங்களால் -இந்து இளைஞர் அணி வெற்றி!!

கிளிநொச்சி மவட்ட துடுப்பாட்டச் சங்கத்தில் பதிவு செய்யப்பட்ட துடுப்பாட்ட அணிகளுக்கு இடையிலான மூன்றாம் பிரிவு அணிகளுக்கு இடையிலான துடுப்பாட்ட தொடரில், இந்து இளைஞர் விளையாட்டுக்கழக அணி 259 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய மைதானத்தில் இடம் பெற்ற ஆட்டத்தில் மத்திய தீரார் விளையாட்டுக்கழக அணியை எதிர்த்து இந்து இளைஞர் விளையாட்டுக்கழக அணி மோதியது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இந்து இளைஞர் விளையட்டுக் கழக அணியினர் நிர்ணயிக்கப்பட்ட 48 பந்துப்பரிமாற்றங்கள் நிறைவில் 9 இலக்கினையும் இழந்து 362 ஓட்டங்களைப் பெற்றனர்.

363 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மத்திய தீரார் விளையாட்டுக் கழக அணியினர் 29 பந்துப்பரிமாற்றங்களில் நிறைவில் சகல இலக்குகளையும் இழந்து 103 ஓட்டங்களை மட்டும் பெற்றனர்.

You might also like